வெள்ளி, 26 ஜூன், 2009

இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்குமா?


இசையுலகின் இளவரசன்,
இளமையில் முதிர்ந்த முகூர்த்தன்,
செழுமைகளை செம்மையாக செகம் சேர்த்தவன்,
முழுமையான முகமாக்கி முத்தாரம் முகிழ்த்த
முதல்வன்.

திசை திரும்பும் திக்கெல்லாம்,
திகட்டாத இசை வெள்ளம் தினம் மாந்தர்
திரளாய் செபம் பண்ண பண்ணிசைத்த பாரியன்,
திவ்வியத்தின் திறம் தீந்தாக தீட்டியவன்.

இள வயதில் இகம் வென்றான்,இதை
இசையாலே இனம் கண்டான்,
ஓசையின் ஒப்பற்ற ஓங்காரமாய்,
ஒலித்த ஒலியன் நடனத்தின் தடம் தாற்றிய தவனன்,

மிகையாற்ற மிக்காரும்,தக்காரும் இல்லா தகவன்,
உவகையை உலகாற்றிய உலவன்,
ஊனம்,உறவு,இனம்,இழவு, இத்தனை வேற்றத்தையும்
வேகவைத்த வேயிலியன்,செவிலியன்,

சேதாரங்கள்! சேடிகளால் சேமிக்கப்பட்டவன்,
ஊதாரங்களின் உபத்திரத்தையும் உறுப்பேற்ற உசாவவன்,
மாதர்களின் மையலில் மையப்பூவாய் மயிலாசனம் மகித்தவன்,
காதர்களின் கனிமங்களிற்கும் களிப்பூட்டிய கவிக் காத்திரன்.

விழுமியங்களின் விதற்ப்பிற்கு வித்தேற்றியவன்,
குழுமியங்கள் குவியா குமுதமவன்,அமுதன்
ஆதலால் அகிலத்தின் ஆடலாசான்,குரல் குங்கிலியத்தால்,
இகம் இலங்கும் இசை இளவரசன்,

தென்றலின் நீவலிற்கும்,தெவட்டாத இசையதற்கும்
குன்றாத குழையமவன் கன்றானவன் காலக் கலையானவன்,
மென்றிடும் துயர் தீர்க்க மெழுகானவன் மேதினியில்
தின்றிடும் தீமம் துரத்த தூய அகமெய்த அவன் ஆத்மத்தையும்

வஞ்சமில்லாமல் வாதை யேற்றி தின்ற காலக் கொடியோனின்
பஞ்சமில்லா பாத்திரத்தில் முகம் கொள்ளா மூலிகை ஒன்றிருந்தால்
அஞ்சாத அகம் விரித்து ஆதங்கமாய் அந்த ஆயிழைக் குயிலிற்கு,
ஆக்ஞையாய் அளித்திருப்பேன் ஆயினுமிது ஆகுமா என்றேந்தும்
விக்ஞைகள் விரித்துரைக்கும் விதியை யான் என்னென்பேன்?

இசைக்குயிலின் இகமீத்த இலங்கலை இரப்பேந்த இதயம் இயங்குமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்