ஞாயிறு, 14 ஜூன், 2009

மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்


ஆகுதியாயினவாம் ஆர்த்த தமிழின விதப்பு,
ஆரியன் கொள்கின்றானாம் ஆதலால் மிதப்பு,
வேரோடொழிந்து போகினுமோ?
அகிலம் புகழ்,ஆரத்திறள்,ஆய்வகற்றும் ஆரம்பு,
வேலுப்பிள்ளை பிறப்பு,
ஆரோடடித்து புலம்புவது இந்த பிழைப்பு?

சீரோடு,வெகு சிறப்போடு,
ஊரோடு பெரு மிதத்தோடு,
பாரோடு பெரும் பாரம் பாரியத்தோடு,
வேரோடு பெருங்கிளையோடு,ஊடான விழுதோடு,
வியாபித்த மாபெரும் விதிப்புக்களின் வினைப்பு.

தியாகங்களின் தீர்ப்போடு,
வியாபங்களின் வியப்போடு,
நியாயங்களின் நித்தியத்தோடு,
உபாயங்களின் உத்திரத்தோடு,
உள்வாங்கிய மாபெரும் கட்டுமானத்தோடு,
மையம் விசாலித்த வைராக்கியம்!

பயங்கரவாதம் என்ற பரப்புரையால்,
வயங்கொண்ட வாகிப்போடு,
லயங்கள் லாபிக்க விசாலித்த விதப்புரையின்
மொளனமான மனிதாபிமானங்களின் மதப்பினிலே,
மருக் கருத்த மற்ற அயலாரின் ஆதரவுத் தளத்தோடு,
அதனூடான அங்கீகாரத்தோடு,

மாபெரும்!?
மேதினியில்,
மேகங்கொள்ள மெட்டுக்களோடு,அதனூடான,
பொஸ்பரசென்னும் பெரும் அழிவுக் கழி(ரு)வுகளோடு,
கொத்தாணிக்குண்டோடு கந்தகக் கனிமமோடு,
களமெரித்த ஆரியக் கும்பல்,

எதை சாதித்தான்?
எங்கள் இனசனமெல்லாம் சொந்த பந்தமெல்லாம்,
ஒரு விதசோர்வுமின்றி மனிதபிமானமகற்றி மைதிட்டு அழித்தான்,
எரித்தான்,வன்புணர்வோடு வலியபகைக் களம் மேய்ந்தான்,
எஞ்சியவரை எந்திரக் கைதியாக்கினான்,சுரம் சுதைத்தான்,
காலம் உள்ளவரை காரக் கழுகுமரமேற்றினான்.

ஆயின் இவன் கற்றது?
காலக் கரம் நீட்டியது என்ன?
தீட்டியதிட்டத்தின் சாரம் மொய்ந்தானா?
இல்லையே,
சாரும் எங்களின சனம் வாழ்ந்த,
வதிந்த இடமெல்லாம் இடரேற்றியதைத்தவிர,
ஈந்த ஈகம் என்ன?

முடிசூடா தமிழின விடுதலை குரலழித்தானா?
கூடிக்குரலேந்திய குதம் அழித்தானா?
மாந்த மனிதாபிமானமாற்றிய மையம் மதம்கொள அழித்தானா?
எதை அழித்தான்?,
எங்கள் இனம் தவிர,எங்கள் இனம் சுவைத்த சூட்சுமம் தவிர,
ஆங்காங்கே ஆயிலயமாய் ஆர்த்தெரியும்,
விடுதலை வித்தழித்தானா?

சங்கம் அமைத்து சமைத்த தமிழ்,
வங்கம் முதல் இமயம்வரை ஈர்த்தெடுத்த ஈகைத் தமிழ்,
தங்ககம் தரணி சூழ சமைந்த தமிழ்,எந்த
அங்கத நாட்டு அரக்கர்களாலும் ஆய்வறிந்து,
களமகற்றினாலும்,
தளமகலா தைரியத்தின் தாற்பாரியத்தை,

எந்த வெற்றிச் சங்கூதி எவனழிப்பான்?
ஈய்விரக்கமில்லா பேரினவாதி,புத்தனின் புயமறியாப் பாவிகள்,
அகிலத்தின் அரவாணிகள்,
போர்த்தர்மம் இம்மியளவேனும் இதயம் சுரவா சூனியர்கள்,
ஆரமிட்ட அழிவுகளின் ஆத்மியம் அரவணைக்க,
தங்கத் தமிழன் தார்மீகச்,
சூரியனை சுட்டதாக சுரமிறிக்க,
தமிழ்ச் சுற்றங்களை,
சூனியமாக்கிய துரோகச் சூனியமே!

பந்து இப்போது உங்களின் பரம பாதத்திற்குள்ளென,
விந்தகம் வகைக்கும் விதப்பேற்றிகளே,
விடியும் தேசம் புலர வித்தகர்கள் விசைமீட்டி,
திசையெல்லாம் திகழ தினைவேற்றி திரும்புவார்கள்,
விசையும் உன் வினைகளற்ற,

பூப்புனல் புடைசூற்ற புதிய புதிர்களாய்,
விடியும் கதிர்களாய் கனலேற்றி கனதியாய்,
காலத் திகழ்வின் கற்பகத் தலைவன்,
ஒப்பற்ற ஒர்மத்தின் ஒப்பீட்னிற்குள்
ஔவியம் தடவும் அகமருத்தான்,
மௌவ்வும் மணித்துளிகள் மனவிருளகற்றும்,
ஒவ்வும் ஒவ்வொன்றும் ஓரணியாகி,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்