ஞாயிறு, 3 ஜூன், 2018


Bildergebnis für இயற்கை அழகு

                                             அழகு.

அழகு அழகு பற்றி பாடப் போகிறேன்.நான்
ஆனந்தமாய் அழகு சொல்லி ஆடப்போகிறேன்

உறவு சொல்லி.உணர்வு அள்ளி
வீசப் போகிறேன்.அங்கே
உவகை பொங்க கலந்து நானும்
வாழப்போகிறேன்

சுற்றாடலை காதலித்தால் அழகு.அங்கு
சுகந்தம் வந்து குடியிருக்கும் அழகு
பெற்றோரை மதித்து இங்கே உலவு
நீயும் கற்றோரை கலந்திருத்தல் அழகு

கற்றோரும்.மற்றோரும் உன்னை
சூழ்ந்திருந்தால் நீ நூற்பாய் அழகு
எத்தொழில் செய்வோரும் அழகு.அவர்
எங்கிருந்து வாழ்ந்தாலும் அழகு
 Bildergebnis für இயற்கை அழகு

ஏமாற்றி பிழைக்காமல் பழகு.பிறரை
ஏய்த்து பிழைத்து வாழாமல் பழகு
களவு.பொய்கள் நிலையாதே உலகில்
உளவு பார்த்து வஞ்சிக்காதே உணரு

உன்னை நீயே உணர வேண்டும் முதலில்
அந்த எண்ணம் யாசிக்கட்டும் மனதில்
மனிதம் ஆங்கு குடியிருந்தால் அழகு
மதிப்பாரே பலரும் உன்னை உணர்ந்து

இயற்கையை நேசித்தால் அழகு.அதில்
மாண்பு வந்து உன்னை யாசிக்கும் அழகு
திருப்பி உன்னை தீண்ட வேண்டும் எதிலும்.அந்த
திமிரில் நீயும் உயர வேண்டும் உலவு

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

பெறாமகள் பிரியாவிற்கு



                இல்லற வாழ்வில் 11.02.2018
இணைந்த செல்வி -சிறீ.."ப்ரியா" விற்கு சமர்ப்பணம்.











இத்தினம்
உன் வாழ்வின் அகத் தினம்
நினைவழியா நாளாக நினை
ஆட் கொண்ட முத் தினம்.

கைத்தலம் பற்றி பரிவெழுதிய பாக்கிய தினம்.
முத் தேவர்கள் வாழ்த்தினார்களோ இல்லையோ
உன்
முற்றத்து சூழலும்
முதிர்கொண்ட வாழ்வாங்கு வாழ்ந்தவர்களின்
வசீகர வாழ்த்துக்களும்.நிந்தனை
அக ஆசிகளால் அரவணைத்த தினம்.

உனதான இல்வாழ்வு சிறந்தோங்க
தொலை தூரத்தில் இருக்கும் உன்
பெரியப்பாவின் வாழ்த்தும் உனை ஆசிக்க
இந்த ஒரு மென் மடல்.

செளபாக்கியம் பெற்று
சகல ஐசுவரியங்களுடன்
நினதான தாம்பத்திய வாழ்க்கை
ஆரோகணிக்கட்டும்.

ப்ரியமானவளாய்
பிரேமைகள் நின் பிரியமானவனுடன்
என்றும் நிலை தடுமாறாமல் நிலைத்திருக்கட்டும்.
வாழ்வியலின் கூறுகளில்
சகலதையும் நின் மணாளனுடன் பகிர்ந்து கொள்
பரவசம் நிறையும்
நின் பிரபஞ்ச வாழ்வில்.

வாழ்வின் சுகமே
புரிந்துணர்வுகளின் படிக்கட்டுக்களில்
சகலதையும் மனமார பரிமாறிக் கொள்வதில்
பூரணமாகும்.

இவ் வண்ணம்!
பெரியப்பா

சு
.குமார் குடும்பம்
(யேர்மனி
)


அழகு

                                               அழகு

இயற்கை எழில் கொஞ்சுகின்ற இலங்கையில்
நாம் காணுகின்ற காட்சி எல்லாம் அழகுதான்.
இயற்கை எழில் கொஞ்சுகின்ற இலங்கையில்
நாம் காணுகின்ற காட்சி எல்லாம் அழகுதான்

வங்கக் கடல் மூசுவதும் அழகுதான்.
அங்கு வாடி அமைத்து வாழும் அவரும் அழகுதான்
பண்ணிசைக்கும் நதிகள் எல்லாம் அழகுதான்
இங்கு பண்புடனே வாழும் மனிதம் அழகுதான்

இன்னிசைக்கும பறவைக் கூட்டம் அழகுதான்.அந்த
வனத்தில் வாழும் விலங்குகளும் அழகுதான்
பறக்கும் தும்பிக் கூட்டம் கூட அழகுதான்அந்த
வானம் பாடி கூட்டங்களும் அழகுதான்

ஒலிக்கும் அந்த ஆலயத்தின் மணிகளும்
அங்கு ஓம்புகின்ற பக்தர் கூட்ட அலைகளும்
ஒளியை வீசும் கதரவனின் உதயமும்
மாலை வேளை வீசும் நிலவின் ஒளியும் கூட அழகுதான்

மானிடமும் மனித நேய ஊக்கமும்
இங்கு ஊட்டி வைக்கும் பாசம் கூட அழகுதான்
பள்ளிக்கூட பருவமும் அழகுதான்
அங்கு பாடம் தரும் ஆசானும் அழகுதான்.

தாய் மொழியாம் தமிழ் மொழிதான் பேரழகு
அதை தந்து விட்ட தாயவளும் பேரழுகு
செம் மொழி என பெயர் கொண்ட என் மொழி
என்றும் பேச பேச இனிக்கும் அழகு அழகுதான்

உற்றாரும் சுற்றாரும் உறவுகளும்
எங்கள் சுற்றத்தை பேணி விட்டால் அழகுதான்.
கைத் தொழிலில் இருக்குதம்மா ஓரழுகு
அதைக் கற்றுக் கொண்டால் உன் வாழ்வு மிகை அழகு.

இயற்கை தந்த செல்வங்களோ எண்ணிலா.அதை
இயன்றவரை நுகர்ந்து கொள்ளல் அழகுதான்.
சுற்றுப் புற சூழலை பேணவே .நாம்
இன்பமாக இனிமையாக வாழவே.
செயற்கை முறை நுகர்வுகளை தவிர்த்து.நாம்
இயற்கையோடு வாழ்ந்திட்டால் அழகோ அழகுதான்.

அழகு




அழகு
அன்பு உள்ளம் கொண்டாய் நீயும் அழகு
ஆருயிராய் இணைந்திருந்தால் அழகு
இன்பம் ஒன்றே போற்றவேண்டும் அழகு
ஈதல் ஒன்றே என்றும் எங்கும் அழகு
ஈதல் ஒன்றே என்றும் எங்கும் அழகு

உறவுகளை காக்கவேண்டும் அழகு.அங்கு
ஊக்கம் கொண்டு பேணவேண்டும் அழகு
எங்கும் நாங்கள் காணபதெல்லாம் அழகு
ஏன் என்ற கேள்வி ஒன்றே பேரழகு...
எதிலும்
ஏன் என்ற கேள்வி ஒன்றே பேரழகு

ஐயம் இன்றி படிக்கவேண்டும் அழகு
ஒழுக்கம் கூட்டி ஒழுக வேண்டும் அழகு
ஓயாமல் இயங்க வேண்டும் அழகு, எதிலும்
ஓளவையாரை படித்து நீயும் ஒழுகு.
ஓளவையாரை படித்து நீயும் ஒழுகு

உற்றாரை பேணவேண்டும் உளமாய்.
உந்தன் பெற்றோரை மதிக்கவேண்டும் நியமாய்
சுற்றத்தாரை கவனமாக பேணி..நீ
கற்பதெல்லாம் உவந்து வரும் அழகாய்
நீ கற்றதெல்லாம் உவந்து வரும் அழகாய்

விளம்பரமும் நுகர்வுகளும்


விளம்பரமும் நுகர்வுகளும்

தேவைகளை அறிந்தே கொள்முதல் கொள்
தேனாக வாழ்வெழுத தேவைகளை சுருக்கு
ஆலைகளில் பொழிந்ததெலாம் ஆலாய்...
தொடர் ஊடகத்தில் விளம்பரமாய் வீதி வரும்.

பட்டொளி விட்டு பல சுவர்களை அலங்கரிக்கும்.
பத்திரிகைகளும் வானொலியும் துல்லியாமாய் ஆமோதிக்கும்.
விளம்பரம் போட்டால் அவனுக்கோ காசு.
விழுங்கி நீ வாங்கி விட்டால் விநியோகத்தனுக்கும் காசு

அந்தோ தேவையற்ற நுகர்வுகளால் உந்தனுக்கோ காவு
எந்த தேவைகளையும் பூர்த்தி செய்யாத்தால் நிந்தனுக்கோ ஆப்பு
எவனிடம் எது இருந்தாலும் இல்லையென்றாலும் உனக்கேன் இந்த ஈர்ப்பு
வாழ்வுத் தேவைகளை புரிந்து கொண்டால் உனக்கில்லை இழப்பு

மனங் கவரும் எத்தனையோ புதியவவைகள் உண்டு.\அவை
இனங் கவர்ந்து உனைக் கெளவ்வும் விளம்பரங்கள் உண்டு.
நின்று நீ நிதானி நிச்சயம் தேவையெனில் இன்னொரு முறை யோசி
தவிர்க்கவே முடியதெனில் தரமானதை நுகர்ந்திடு.

உபயோகமற்ற எதையும் ஆடம்பரத்திற்காய் வாங்காதே
ஆடம்பரத்தில் அழகு என்றுமே கொழித்ததில்லை.உன்
அழகில் ஆடம்பரம் செழிக்க உன்னை நீ தீட்டி எழு
விளம்பரங்களும் நுகர்வுகளும் வாழ்க்கைப் பாதைகள் இல்லை.

ஆசைகளிற்கு கட்டுப்போடு அரவங்களாய் உனை
இணைக்கும் ஒய்யாரங்களை மட்டுப்படுத்து
கவர்ச்சியாய் காணபவைகள் காலத்தில் நிலையில்லை
உவகை தேவையெனில் உவந்ததையே நீ ஆகாசி.

வரவுக்கு ஏற்ற செலவு செய்ய பழகு
ஏற்புடையதாயின் ஒரு பக்கம் சேமித்தெழு
ஈய்தல் ஒன்றையும் உன் மனக் கண் வைத்தொழுகு
வீண் விரயம் செய்வதில் விழிப்பாயிரு.

பந்தாவாக வாழ்வதில் பரவசம் நிலைக்காது
பாதைகளும் அதன்சுவடுகளும் நின் பாவனையிலே உண்டு
பரந்தாமனும்.சிலுவைகளும்.புத்தனின் தத்துவமும்
என்றுமே உன்னை செழுமைகளாய் ஆக்காது
அதுபோலவே இந்த விளம்பரங்களும் நுகர்வுகளும்....?

நன்றி என்றுமே
ஊரகனாக
சு.குமார்

மக்களின் ஈடுபாடும் எம் சமூக கட்டுமானமும்


மக்களின் ஈடுபாடும் எம் சமூக கட்டுமானமும்
ஒரு சமூகம் என்பது அங்கு வாழும் மக்களின் கலை,பண்பாடு,பழக்க வழக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. அங்கு வாழும் மக்கள் தங்களின் கலாச்சாரமாக அவர்களின் மூதாதையர்கள் பின்பற்றி வந்த பல நடைமுறைகளை தொடர்ந்தும் பின் பற்றி வந்தார்கள்.பின அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்களில் ஒரு சில மாற்றங்களிற்கு உடபட்டு அது அடுத்த சந்த்திகளிடம் கையளிக்கப்படுகின்றது.

அவையாவன 1.ஆலய வழிபாடு.2,கல்வி.3.சுகாதாரம்.4.இயற்கையை கையாளுதல் என பலவாகும்.
இங்கே கல்வி எனும் பொழுது அது முன்பள்ளியில் ஆரம்பிக்கப்படும்.அப்போதைய காலங்களில் வீடுகளில் ஆரம்பித்த இந்த ஆரம்ப கல்வி முறை கால ஓட்டத்தில் ஒரு தனிப்பட்ட ஒருவரின் வழி நடாத்துதலில் அவரின் வீட்டில் அல்லது எங்காவது ஒரு பொதுவான இடத்தில் தொடர்ந்து நடைபெற்றது.

மனித வாழ்வில் பல மாற்றங்கள் எப்போதுமே தொடர்ந்து வருவதுண்டு.அது தனிப்பட்ட வரின் வாழ்வில் மட்டுமல்ல. சமூகங்களிலும் அது தேவை கருதி ஊடுருவும்.அப்படியான ஊடுருவல்கள் சில சமயம் நன்மைகளை பயப்பதும்.தீமையாகி கருகுவதும் உண்டு.

நான் இந்த ஆக்கத்தின் மூலம் எம் சமூக வாழ் மக்களிற்கும் தேவையான அத்தியாவசியாமான ஒருகட்டுமானத்தைப் பற்றி சற்று காத்திரமாக எழுத விழைகின்றேன்.

எந்த ஒரு நாடோ தேசமோ அல்லது ஒரு பட்டினமோ கிராமமோ அங்கு வாழும் மக்கள் அநேகமாக கல்வியை தங்களின் முதல் அத்தியாவசிய தேவையாக எடுத்து அதை கற்பதில் வெகு ஆர்வம் காட்டுவார்கள்.அதன் விளைவுகள் ஒவ்வொரு தனி குடும்பத்தின் பெருளாதார முறைகளினால் மேம்படுதலும் இடையில் விடுபடுவதுமாக காலம் கழிந்து கொண்டிருக்கும்.

ஆயினும் ஒவ்வொரு ஊரிலும் மிகமிக அத்தியாவசியமாக சனசமூகநிலையம்ஆலயம்,முன்பள்ளி என்பன அவ்வவ் சமூகத்தில் பாரிய இடத்தை பெற்றிருக்கும்.இந்த அடிப்படையில் நான் இங்கு எமது ஊரில் அமைக்கப்பட்ட முன்பள்ளியைபற்றியும் அதன் நிலைப்பாடுபற்றியும் சிறு பதிவை காலத் தேவைகருதி பதிகின்றேன்.

எமது ஊரில் காலம் காலமாக நடைபெற்று வந்த இந்த அரிவரி என அக்காலத்தில் அழைக்கப்பட் ஆரம்ப கல்வி முறை ஒரு நிலையான,அந்த ஊரிற்கே சொந்தமான இடத்தில் நடைபெறவில்லை.காரணம் இந்த ஊரிற்கு என்று ஒரு நிரந்திர கட்டிடம் இல்லாமையாகும்.
இதை எமது முன்னோர்கள் எவ்விதத்திலும் ஒரு தொலை நோக்குபார்வையால் அமைக்கவோ அன்றி அதன் தேவை கருதி எந்த ஆக்கபூர்வமான முன்னெடுப்பும் எடுத்தாக நான் அறிந்த வரையில் தெரியவில்லை.

இக் கட்டுரையின் நோக்கம் கடந்த காலத்தைபற்றி அலசுவதல்ல.நடைமுறைக் காலத்தில் நாம் இப்போது என்ன செய்கிறோம்.செய்யப் போகிறோம் என்பதைப்பற்றி சற்று சிந்திக்வேண்டி மட்டுமல்ல செயற்பட வேண்டியே இந்த இடுகை தொடர்கின்றது.

எம் ஊரிற்கான ஒரு முன் பள்ளி அதுவும் சொந்தமான நிலப்பரப்பில் தேவை என்பது எமது இளஞ் சந்ததியின் ஆர்வமாக இருந்தது.அதற்கான முயற்சிகளும் ஏலவே நடந்தது.
ஆயினும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி நிலைமை அமையவில்லை.எமது ஊரவனும் கனடாவாசியுமான திரு கந்தசாமி.பாலேஸ்வரன் அவர்களின் தனி மும்முரமான முயல்வால் முன்பள்ளிக்கான நிலம் சனசமூக நிலைய நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் எமது முன்பள்ளி கட்டப்பட்டு அதன்செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டாலும் அதன் கட்டுமானம் பரிபூரணமாக நிறைவேற்றப்பட்டதா?

இந்த முன்பள்ளி நில.புலவாழ் மக்களின் நிதியினாலும் மேலும் .அரச நிதி உதவியினாலும் முன்னெடுப்பட்டு கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டது.நாற் சந்தி நண்பர்கள் எனும் எமதூரக இளைஞர்களின் பெரு முயற்சியால் இந்த முன்பள்ளிக்கு ஒரு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அதுவும் நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை பயன்படுத்தக் கூடிய நிலைகள் பின்வரும் காரணத்தால் சரியாக உபயோகப்படுத்தமுடியவில்லை காரணம் காலநிலை.இந்த பூங்கா ஒரு சோலைவனமாக இல்லாவிட்டாலும் வெயிலின்.மழையின் தாக்கம் இல்லாமல் அது அமைக்கப்படவில்லை.இவ்வளவு செலவு செய்து கட்டப்பட்ட இந்த பூங்காவை முன் பள்ளி மாணவர்கள் பயன்படுத்க்கூடிய நிலைப்பாட்டை நாம் கவனத்தில் எடுக்கவேண்டியது காலக்கடமையாகும்.
எனவே இந்த சிறுவர் பூங்காவை வெயில்.மழை படாத ஒரு நிலையிலும் அதைச் சூழ குளிர்மையான சுவாத்தியத்தை ஏற்படுத்தக்கூடியமாதிரி அமைக்கவேண்டும்.இதற்கு நாம் செய்யவேண்டியவைகள்.

சிறுவர் பூங்காவின் மேற்பகுதியை குடை போன்ற அமைப்பாக உருவாக்கி.அதன் கீழ்ப்பகுதியில் சுற்றிவர அழகான பூங்கன்றுகளை நாட்டி அவற்றிற்கு தொடர் நீரோட்ட வசதியை ஏற்படுத்தவேண்டும்.இதற்கான சிறந்த ஆலோசனைகளை நிர்வாகம் உள்வாங்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.நிலப்பரப்பு கற்கள் அகற்றப்பட்டு தூய வெண்மணலால் நிரவப்படவும் வேண்டும்.

இன்னமும் முன்பள்ளியில் சீர்செய்யவேண்டியவைகள்.அங்கு என்னென்ன மரங்கள் நாட்டப்பட்டால் வேரூன்றும் என அறிந்து அம் மரங்களை நடுதல்.முக்கியமாக செம் மண் தேவையான அளவு கொள்முதல் செய்து முன் பள்ளியின் வாசல் பக்கமுள்ள மதில் கரையோரம் மிதமாக ஆழமாக பரவி மர நடுகையை மேற்கொள்ளலாம். எனதான பரிந்துரையாக.வேம்பு.தென்னை மரங்கள் .வாழைமரங்கள் நடுதல் சிறப்பென்றே எண்ணுகிறேன்.எனினும் உங்களின் தெளிவான நடைமுறையான எண்ணங்கள் மொருகேற்றட்டும்.
முன்பள்ளியை சூழ சுற்று மதில்க ள்முழுமையாக்கப்பட்டு வண்ணம்தீ ட்டவேண்டும்.. கட்டப்பட்ட அரங்கமோ வெயில்.மழை காலத்தில் பாதுகாப்பு இன்றி திறந்த நிலையில் உள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

முன் பள்ளி வாசலில் நிழல்பயன் தரு மரங்களை உள்பகுதியூடாக நடப்பட்டு பராமரிக்க ஆவன செய்தல் வேண்டும். அங்கு.கட்டப்பட்ட மல.சலகூட பாதை சீரமைக்கபட்டு பாவனைக்கு ஏற்றமாதிரி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்,
முன்பள்ளியின் உள்ளே வெளியே காவணிகள் அகற்றப்பட்டு சுத்தம்பேணுதல் மிக முக்கியமாகும்

எனவே இந்த ஆக்கத்தின் மூலம் ஊரவர்களை அன்பாக கேட்டுக்கொள்ள விழையும் நிலைப்பாடுகளாக உங்களின் பிறந்த நாள் நினைவாக விரும்பிய மரங்களை முன்பள்ளியில் நாட்டுங்கள்.வருடத்தில் இரு தடவையாவது ஊரகர்கள் சேர்ந்து சிரமாதனம் செய்தால் முன் பள்ளியை அழகாக பராமரிக்கலாம்.

இதை நிர்வாகம் மிகவும் கவனம் எடுத்து நிர்வாக அங்கத்தவர்களின் பங்களிப்புடன் ஊரவர்களை அழைத்து இப் பணிகளை ஆர்வமாக செய்தல் வேண்டும்.

மாதத்தில் ஒருநாளாவது நிர்வாக அங்கத்தவர்கள் இப் பணியை ஆரம்பித்து ஊரவர்களின் உதவியை பெற ஆவன செய்தலே ஆரோக்கிய முதல் படியாகும்.
ஏற்படும் செலவுகளை நாம் ஏற்போம்,முதலில் செயலாக காட்டுங்கள் மற்றவைகள் தாமாகவே உங்களை தேடிவரும்.அதாவது நிதியுதவியை குறிப்பிட்டேன்.

இவ்வளவு அருமையாக முனபள்ளியின் தேவைகள் அனைத்தும் அடங்கிய நிலையில் உள்ள இந்த கட்டுமானத்தை அழகாக சீராக்கி பராமரித்தலே நாம் எமது வருங்கால இளஞ் சந்த்தி யினர்க்கு கொடுக்கும் ஆழமான பரிசாகும்.வரும் இளம் சந்ததியினர் எம்மைப்போலவே கடந்த கால சந்ததியினரை இகழ்வாக நினைக்கும் நிலைமையை ஏற்படுத்தாமல் இருப்போமாக.

வெறுமனே எமது ஊரிலும் இவ்வளவும் உள்ளதே என புழுகுவதிற்காக அல்ல இந்த கட்டுமானங்கள்.நாம் இதை சரியான முறையில் பராமரித்து செம்மையாக்கி வரும் இளைய சந்த்தியிடம் ஒப்படைக்க வேண்டியது ஊரை நேசிக்கும் ஒவ்வொருத்தரின் காலக் கடனாகும்.
முன்னோர்கள் செய்த அல்லது செய்யாத தவறுகளை நாம் செய்யாமல் இருப்போமாக.
சும்மா ஒற்றுமையால் உயர்வோம் என சுலோகத்தில் மட்டும் எழுதி விடுப்பு பார்க்காமல் செயலாற்ற வாருங்கள்.முன்பள்ளி ஒரு பூஞ்சோலைவனமாகும்,மனமிருந்தால் ஆக்கலாம்.
ஆக்குவோம் என ஒரு முனைப்புடன் ஆகச் சிறந்த நோக்கத்துடன் எம்முடன் கரம் சேருங்கள் என எமது ஊரவர்கள் அனைவரையும் இந்த சிறு ஆக்கத்தின் மூலம் இரு கரம் நீட்டி தங்களின் காத்திரமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

இந்த கட்டுரையால் ஒரு முகமாவது தெளிவடைந்து செயலாற்ற முன் வந்தால் செழிப்பாகும்.
இந்த எதிர்பார்ப்பை முடிக்கும் முன் மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம்.அதாவது உங்களின் பிறந்த நாள் அல்லது உங்களின் பிள்ளைகள்,பேரப்பிள்ளகள்,உங்களின் இல்லத்தரசிகளின் எவருடையதாயிருந்தாலும் அவர்களின் ஞாபகமாக எதிர்கால நினைவுச் சாரலாக ஒரு பூங்கன்றையோ அன்றி நிழல்.பயன்தரு மரங்களையோ எமது முன் பள்ளியில் நாட்டி நீர் பாய்ச்ச ஏற்பாடும் செய்யுங்கள இது போதும் எம் முன்பள்ளி பசுமை பொங்கும் பெரும் சோலைவனமாக.

இந்த ஆண்டு விழாவிலிருந்து எம் முன்பள்ளி சிறார்களின் ஆடைகள் ஒரு சீருடை வடிவம் பெறுகின்றது எனும் மகிழ்வான சேதியுடன் உங்களிடம் இருந்த தற்காலிகமாக விடைபெறும்

நன்றி
என்றும் ஊரகனாக
சு.குமார்

புறம் பேசுதல்


புறம் பேசுதல்
மனித வாழ்வில் பேசும் பொருளாக தன் உணர்வுகளை வெளிப்படுத்த மொழி எனும்ஒலி ஊட கம் பரிணாம வளர்ச்சியில் வாழ்வியலில் பெரும் பங்கு ஆற்றுகின்றது.இந்த ஆக்கத்தின் மூலம் நான் மொழியின் உருவாக்கத்தையோ அன்றி அதன் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எழுதவரவில்லை.

மாறாக நாம் எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் எண்ணங்களின் புற வடிவங்களைபற்றி எழுதலாம் என எண்ணி தொடருகிறேன்.

மனிதனின் இன்ப.துன்ப.மகிழ்வான.இகழ்வான தருணங்களை வார்த்தைகளின் தொகுப்பால் எம்மை நாம் புரிந்துணர்விற்கு ஆட்படுத்தி கொள்கிறோம்.முதலில் புறம் பேசுதல் இப்படியான வகைக்குள் அடங்கும் அவையாவன.முகத்திற்கு முன் சிரித்தும பேசி பின் அவர் போனபின் முதுகுக்குப்பின் சீறுதல்

இதை கவிஞன் இப்படி பாடி வை(த்)தான்.முகத்திற்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்குப்பின்னே சீறும்.முகத்துதி பேசும் வளையும் .குழையும்
காரியம் ஆனபின் மாறும்.

இரண்டாவது வகை! முத்திற்கு அஞ்சி வேசையாடல்.இங்கு வேசை என்பது வேடத்தை குறிக்கும் பின் மருவி வேசையானது.இப்போது பல ஊர்களில் இதை நல்லா நடிச்சாய் என குறிப்பிடுவார்கள்.
மேலும் நான் நம்பிட்டேன் என நக்கலாக கூறுவதை அனுபவத்திலும் கண்டுள்ளேன்.நிற்க!

ஒருவன் தனதான துயரங்களை தன் நம்பிக்கைக்குரியவரிடம் மனம் திறந்து பேசி தன்னை ஆற்றுகைப்படுத்தி கொள்வது.இயல்பானதே.வாழ்க்கையின் வரம்புகளில் ஒருவரில் ஒருவர் தங்கியும் தாங்கியும் வாழ்கின்றனர்.அதே போலவே மகிழ்வோ அன்றி தன் வாழ்வின அன்றாட நிகழ்வுகளை உரையாடல்களின் மூலம் வெளிப்படுத்தி தங்களின் நிலைப்பாடுகளை மற்றவர்களுடன் பகர்ந்து கொள்கின்றனர்.
இதில் பல முக்கியமான விடயங்களை ஒரு ஆலோசனை வேண்டி அல்லது உதவி கோரி அல்லது மாற்று வழி ஏதாவது இருப்பின் அதுபற்றி கதைத்திருப்பார்கள்.நம்பிக்கையின் அடிப்படையில் கதைக்கப்பட்ட செய்திகளை மற்றவர்களிற்கு தெரியவேண்டாம் என நினைத்து சொல்லப்பட்ட அவருடைய சாராம்சங்களை ஒரு புனைவுக்கும் உட்படுத்தி மற்றவர்களிடம் கூறி அவரை கிண்டல்பண்ணுவதும்.ஊரர்களே அறியும் வண்ணம் பறைசாற்றி நக்கல அடிப்பதுவும் அவரைப்பற்றி தூசிப்பதுவுமாக ஒரு சிலர் மட்டுமல்ல பலரால் நாளாந்தம் நடாத்தப்படும் ஒரு வித நட ப்பாகும்.இத் தகைசெயல்கள் ஊரில் மட்டுமல்ல உலகம் பூராகவுமே இந்த அவல நிலைதான் காணப்படுகின்றது.

மனித நேயங்களை மறந்து மற்றவர்களை நக்கல் அடிப்பது.சீண்டி அவரை ஒரு வித கோப தாபங்களிற்கு உட்படுத்துவது எவ்வகையிலும் பொருந்தாத செயற்பாடாகும்.இங்கு நம்பிக்கையின் ஆழவேர்கள் அடியோடு அறுந்து போய் இந்தநிலைக்கு ஆளானவரை மன நோய்க்குள் தள்ளி விட்ட பொரும் சோகம் நாம் வாழ்வியலில்நாளாந்தம் காண்படுவதுண்டு.

ஒரு சிலர் அதாவது இந்த செய்கையை செய்தவர்கள் எவ்வித மனத்தாங்கலோ மனு உறுத்தலோ இன்றி மீண்டும் அவருடன் உறவு கொண்டாட விழைவதே அபத்தத்தின் உச்சக் கட்டம்.இப்படியான புறம் பாடல்களை நாம் நாளாந்தம் கேட்டும் ஏன் அதில் உடன்பட்டுமே நாட்களை நகர்த்திக் கொண்டு போகின்றோம்.}

தொழில் நுட்பம் எவ்வளவோ உயர வளர்ந்தாலும் அதனூடகவும் இந்த புறம் பாடல்கள் இன்னமும் பல்கி பெருகத்தான் செய்கின்றது.இங்கு நான் எனது அனுபவத்தினூடாக சில நிகழ்வுகளை இடுகையாக இட்டு இந்த ஆக்கத்தை சுருக்கமாக முடிக்கின்றேன்.

ஒரு வீட்டில் ஒரு ஆணிற்கோ அன்று பெண்ணிற்கோ திருமணம் பேசப்பட்டு அவர்களைப்பற்றி இந்த சம்பந்தம் செய்ய உடன்படுபவர்கள் அவரவர் ஊர்களில் இது சம்பந்தமாக விசாரித்து தெளிவடைதல் நீதியான முறையே.இங்குதான் ஒரு சிலர் இப்படியாக ஒரு விபரத் திரட்டலின்போது அதாவது ஊரவர்களை விசாரிக்க வரும்போது.இல்லாத.பொல்லாத தம் கற்பனைக்கு புது வடிவம் கட்டி வரும் நபர்களுடன் கதைகட்டி விடுவதுண்டு.

ஆனால் சம்பந்தபட்வர்களுடன் கதைக்கும்போதோ நான் உங்களைப்பற்றி அந்த மாதிரி நல்லமாதிரியாக கூறினேன் என கதை விடுவார்கள்.
அதுமட்டுமல்ல தாம் ஏதோ சாதனை புரிந்ததாக தன்னை ஒருவித மனத்திருப்திக்கு உள்ளாவதாக ஒரு போலித் திருப்தியில் வாழ முனைகிறார்கள்.பிற்கா லத்தில் இந்த தவறுகளிற்காக மனம் வருந்தும் சில கோமாளிகளும் உண்டு.அப்படியான செய்கையால் பாதிப்படையும் நபர்களைப்பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை..

இன்னும் சிலர் தேவைகருதி கடன் வாங்குவது உண்டு.இதை அவரால் ஏற்படும் சந்தர்ப்பத்தால் உரியநேரத்தில் திருப்பி கொடுக்கமுடியாத நிலை ஏற்படும் போது இவர்களை புறம்சொல்லி சமுதாயத்தில் கேவலப்படுத்தும் பழக்கம் எந்த வகை நியாயமாகும்?

இது நட்பு வட்டாரத்திலும் உண்டு.மது அருந்தும் சிலர் போதைகாரணமாக அ்லது தான் ஏதோ நகைச்சுவை மன்னென நினைத்து மற்றவர்களை இப்படியான இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடுதல் சாதாரணமாகவே எப்போதும் நடப்பதாகும்.இதில் ஆக அதிமேதாவித்தனமாக சாதியையும் இழுப்பதுண்டு.சம்பந்தப்பட்ட நபர் மேலே குறிப்பிட்டவரின் மிகையான நண்பராகவும் அவருடன் நாளும் பொழுதும் நெருங்கி பழகியவரும் ஆவார்.

எந்த விடயமானாலும் இடம்.பொருள்.ஏவல் அறிந்து மனித்த்தன்மையுடன் நடக்கும் நபர்களும் உண்டு.இன்னொரு விடயம் தனக்கு தேவையான எதையும் இடைத்தரகர் மூலம் தெரியப்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்யும் சிலர் .தன் தேவைகள் முடிந்ததும்.அவரை புறம் சொல்லி தனக்குத் சம்பந்தப்பட்ட தன் பூர்த்தியான விடயத்திற்கும் தொடர்பே இல்லை என தப்பிக்க முனைந்தோரும் உண்டு.
ஆகவே மனிதராகிய நாம் ஆற்றிவு உள்ள ஒரு ஜீவனாக எம்மை நிலை நிறுத்துவதாயின் எந்த நிலையிலும்.எப்படியான சிக்கலிலும் தனக்குரிய நிலைப்பாட்டை ஒரு உரியமுறையில் தீர்ப்பதாயின் அதற்குரிய மாற்று. நேர்வழிமுறைகளை கையாளுதலால் இந்த புறம் பாடும் சமூக விழு(யூக)மியங்களில் இருந்து தம்மை தாமே காப்பாற்றி கொள்ளலாம்.எனினும் எமது சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படை இப்படியான செயலாக்கத்தால் கட்டுண்டு கிடபபதால் புறம் பாடும் இந்த இழிநிலையில் இருந்து விடுபடுதல் என்பது முயல் கொம்பே.
எனவே நாமே ஒவ்வொருத்தரும் இந்த இழிநிலைபற்றி சரியான ஒரு புரிந்துணர்தலை கைக்கொள வேண்டியது காலக் கடனாகும்.நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மானிட இனம்.விஞ்ஞானம் எத்தனையோ படிமுறைகளில் தன்னை சீர்திருத்தி வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இப்போமும் ந்கைச்சுவை எனும் பெயரிலும் .சும்மா எனும் ஒரு சாட்டில் பேரிலும் மற்ற்றவர்களை புறம்பாடும் இ்ந்த அறமற்ற செயலை தவிர்த்து முடிந்தால் ஒற்றுமையாக அஃதின்றேல் தனித்து தனித்துவமாக வாழ முனைவோமாக.
கதை பரப்புதல் கோள் மூட்டல்.இல்லாத கதைகட்டுதல் தவறாக புரிந்து கொண்டு கதையை மாற்றி வெளிவிடுதல்.சிண்டு முடிதல்.கோப மூட்டி வேடிக்கை பார்த்தல் என பல வகையான புறம் பாடுதலை ஒழித்து நியாயமான மனித தன்மைகளை கைக்கொள்வோமே.

நன்றி
என்றும் ஊரகனாக
சு.குமார்


வலைப்பதிவு காப்பகம்