ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

புறம் பேசுதல்


புறம் பேசுதல்
மனித வாழ்வில் பேசும் பொருளாக தன் உணர்வுகளை வெளிப்படுத்த மொழி எனும்ஒலி ஊட கம் பரிணாம வளர்ச்சியில் வாழ்வியலில் பெரும் பங்கு ஆற்றுகின்றது.இந்த ஆக்கத்தின் மூலம் நான் மொழியின் உருவாக்கத்தையோ அன்றி அதன் பரிணாம வளர்ச்சியைப்பற்றி எழுதவரவில்லை.

மாறாக நாம் எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் எண்ணங்களின் புற வடிவங்களைபற்றி எழுதலாம் என எண்ணி தொடருகிறேன்.

மனிதனின் இன்ப.துன்ப.மகிழ்வான.இகழ்வான தருணங்களை வார்த்தைகளின் தொகுப்பால் எம்மை நாம் புரிந்துணர்விற்கு ஆட்படுத்தி கொள்கிறோம்.முதலில் புறம் பேசுதல் இப்படியான வகைக்குள் அடங்கும் அவையாவன.முகத்திற்கு முன் சிரித்தும பேசி பின் அவர் போனபின் முதுகுக்குப்பின் சீறுதல்

இதை கவிஞன் இப்படி பாடி வை(த்)தான்.முகத்திற்கு நேரே சிரிப்பவர் கண்கள்
முதுகுக்குப்பின்னே சீறும்.முகத்துதி பேசும் வளையும் .குழையும்
காரியம் ஆனபின் மாறும்.

இரண்டாவது வகை! முத்திற்கு அஞ்சி வேசையாடல்.இங்கு வேசை என்பது வேடத்தை குறிக்கும் பின் மருவி வேசையானது.இப்போது பல ஊர்களில் இதை நல்லா நடிச்சாய் என குறிப்பிடுவார்கள்.
மேலும் நான் நம்பிட்டேன் என நக்கலாக கூறுவதை அனுபவத்திலும் கண்டுள்ளேன்.நிற்க!

ஒருவன் தனதான துயரங்களை தன் நம்பிக்கைக்குரியவரிடம் மனம் திறந்து பேசி தன்னை ஆற்றுகைப்படுத்தி கொள்வது.இயல்பானதே.வாழ்க்கையின் வரம்புகளில் ஒருவரில் ஒருவர் தங்கியும் தாங்கியும் வாழ்கின்றனர்.அதே போலவே மகிழ்வோ அன்றி தன் வாழ்வின அன்றாட நிகழ்வுகளை உரையாடல்களின் மூலம் வெளிப்படுத்தி தங்களின் நிலைப்பாடுகளை மற்றவர்களுடன் பகர்ந்து கொள்கின்றனர்.
இதில் பல முக்கியமான விடயங்களை ஒரு ஆலோசனை வேண்டி அல்லது உதவி கோரி அல்லது மாற்று வழி ஏதாவது இருப்பின் அதுபற்றி கதைத்திருப்பார்கள்.நம்பிக்கையின் அடிப்படையில் கதைக்கப்பட்ட செய்திகளை மற்றவர்களிற்கு தெரியவேண்டாம் என நினைத்து சொல்லப்பட்ட அவருடைய சாராம்சங்களை ஒரு புனைவுக்கும் உட்படுத்தி மற்றவர்களிடம் கூறி அவரை கிண்டல்பண்ணுவதும்.ஊரர்களே அறியும் வண்ணம் பறைசாற்றி நக்கல அடிப்பதுவும் அவரைப்பற்றி தூசிப்பதுவுமாக ஒரு சிலர் மட்டுமல்ல பலரால் நாளாந்தம் நடாத்தப்படும் ஒரு வித நட ப்பாகும்.இத் தகைசெயல்கள் ஊரில் மட்டுமல்ல உலகம் பூராகவுமே இந்த அவல நிலைதான் காணப்படுகின்றது.

மனித நேயங்களை மறந்து மற்றவர்களை நக்கல் அடிப்பது.சீண்டி அவரை ஒரு வித கோப தாபங்களிற்கு உட்படுத்துவது எவ்வகையிலும் பொருந்தாத செயற்பாடாகும்.இங்கு நம்பிக்கையின் ஆழவேர்கள் அடியோடு அறுந்து போய் இந்தநிலைக்கு ஆளானவரை மன நோய்க்குள் தள்ளி விட்ட பொரும் சோகம் நாம் வாழ்வியலில்நாளாந்தம் காண்படுவதுண்டு.

ஒரு சிலர் அதாவது இந்த செய்கையை செய்தவர்கள் எவ்வித மனத்தாங்கலோ மனு உறுத்தலோ இன்றி மீண்டும் அவருடன் உறவு கொண்டாட விழைவதே அபத்தத்தின் உச்சக் கட்டம்.இப்படியான புறம் பாடல்களை நாம் நாளாந்தம் கேட்டும் ஏன் அதில் உடன்பட்டுமே நாட்களை நகர்த்திக் கொண்டு போகின்றோம்.}

தொழில் நுட்பம் எவ்வளவோ உயர வளர்ந்தாலும் அதனூடகவும் இந்த புறம் பாடல்கள் இன்னமும் பல்கி பெருகத்தான் செய்கின்றது.இங்கு நான் எனது அனுபவத்தினூடாக சில நிகழ்வுகளை இடுகையாக இட்டு இந்த ஆக்கத்தை சுருக்கமாக முடிக்கின்றேன்.

ஒரு வீட்டில் ஒரு ஆணிற்கோ அன்று பெண்ணிற்கோ திருமணம் பேசப்பட்டு அவர்களைப்பற்றி இந்த சம்பந்தம் செய்ய உடன்படுபவர்கள் அவரவர் ஊர்களில் இது சம்பந்தமாக விசாரித்து தெளிவடைதல் நீதியான முறையே.இங்குதான் ஒரு சிலர் இப்படியாக ஒரு விபரத் திரட்டலின்போது அதாவது ஊரவர்களை விசாரிக்க வரும்போது.இல்லாத.பொல்லாத தம் கற்பனைக்கு புது வடிவம் கட்டி வரும் நபர்களுடன் கதைகட்டி விடுவதுண்டு.

ஆனால் சம்பந்தபட்வர்களுடன் கதைக்கும்போதோ நான் உங்களைப்பற்றி அந்த மாதிரி நல்லமாதிரியாக கூறினேன் என கதை விடுவார்கள்.
அதுமட்டுமல்ல தாம் ஏதோ சாதனை புரிந்ததாக தன்னை ஒருவித மனத்திருப்திக்கு உள்ளாவதாக ஒரு போலித் திருப்தியில் வாழ முனைகிறார்கள்.பிற்கா லத்தில் இந்த தவறுகளிற்காக மனம் வருந்தும் சில கோமாளிகளும் உண்டு.அப்படியான செய்கையால் பாதிப்படையும் நபர்களைப்பற்றி இவர்கள் சிந்திப்பதே இல்லை..

இன்னும் சிலர் தேவைகருதி கடன் வாங்குவது உண்டு.இதை அவரால் ஏற்படும் சந்தர்ப்பத்தால் உரியநேரத்தில் திருப்பி கொடுக்கமுடியாத நிலை ஏற்படும் போது இவர்களை புறம்சொல்லி சமுதாயத்தில் கேவலப்படுத்தும் பழக்கம் எந்த வகை நியாயமாகும்?

இது நட்பு வட்டாரத்திலும் உண்டு.மது அருந்தும் சிலர் போதைகாரணமாக அ்லது தான் ஏதோ நகைச்சுவை மன்னென நினைத்து மற்றவர்களை இப்படியான இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடுதல் சாதாரணமாகவே எப்போதும் நடப்பதாகும்.இதில் ஆக அதிமேதாவித்தனமாக சாதியையும் இழுப்பதுண்டு.சம்பந்தப்பட்ட நபர் மேலே குறிப்பிட்டவரின் மிகையான நண்பராகவும் அவருடன் நாளும் பொழுதும் நெருங்கி பழகியவரும் ஆவார்.

எந்த விடயமானாலும் இடம்.பொருள்.ஏவல் அறிந்து மனித்த்தன்மையுடன் நடக்கும் நபர்களும் உண்டு.இன்னொரு விடயம் தனக்கு தேவையான எதையும் இடைத்தரகர் மூலம் தெரியப்படுத்தி தன் தேவைகளை பூர்த்தி செய்யும் சிலர் .தன் தேவைகள் முடிந்ததும்.அவரை புறம் சொல்லி தனக்குத் சம்பந்தப்பட்ட தன் பூர்த்தியான விடயத்திற்கும் தொடர்பே இல்லை என தப்பிக்க முனைந்தோரும் உண்டு.
ஆகவே மனிதராகிய நாம் ஆற்றிவு உள்ள ஒரு ஜீவனாக எம்மை நிலை நிறுத்துவதாயின் எந்த நிலையிலும்.எப்படியான சிக்கலிலும் தனக்குரிய நிலைப்பாட்டை ஒரு உரியமுறையில் தீர்ப்பதாயின் அதற்குரிய மாற்று. நேர்வழிமுறைகளை கையாளுதலால் இந்த புறம் பாடும் சமூக விழு(யூக)மியங்களில் இருந்து தம்மை தாமே காப்பாற்றி கொள்ளலாம்.எனினும் எமது சமுதாயக் கட்டமைப்பின் அடிப்படை இப்படியான செயலாக்கத்தால் கட்டுண்டு கிடபபதால் புறம் பாடும் இந்த இழிநிலையில் இருந்து விடுபடுதல் என்பது முயல் கொம்பே.
எனவே நாமே ஒவ்வொருத்தரும் இந்த இழிநிலைபற்றி சரியான ஒரு புரிந்துணர்தலை கைக்கொள வேண்டியது காலக் கடனாகும்.நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மானிட இனம்.விஞ்ஞானம் எத்தனையோ படிமுறைகளில் தன்னை சீர்திருத்தி வளர்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் இப்போமும் ந்கைச்சுவை எனும் பெயரிலும் .சும்மா எனும் ஒரு சாட்டில் பேரிலும் மற்ற்றவர்களை புறம்பாடும் இ்ந்த அறமற்ற செயலை தவிர்த்து முடிந்தால் ஒற்றுமையாக அஃதின்றேல் தனித்து தனித்துவமாக வாழ முனைவோமாக.
கதை பரப்புதல் கோள் மூட்டல்.இல்லாத கதைகட்டுதல் தவறாக புரிந்து கொண்டு கதையை மாற்றி வெளிவிடுதல்.சிண்டு முடிதல்.கோப மூட்டி வேடிக்கை பார்த்தல் என பல வகையான புறம் பாடுதலை ஒழித்து நியாயமான மனித தன்மைகளை கைக்கொள்வோமே.

நன்றி
என்றும் ஊரகனாக
சு.குமார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்