ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

அழகு

                                               அழகு

இயற்கை எழில் கொஞ்சுகின்ற இலங்கையில்
நாம் காணுகின்ற காட்சி எல்லாம் அழகுதான்.
இயற்கை எழில் கொஞ்சுகின்ற இலங்கையில்
நாம் காணுகின்ற காட்சி எல்லாம் அழகுதான்

வங்கக் கடல் மூசுவதும் அழகுதான்.
அங்கு வாடி அமைத்து வாழும் அவரும் அழகுதான்
பண்ணிசைக்கும் நதிகள் எல்லாம் அழகுதான்
இங்கு பண்புடனே வாழும் மனிதம் அழகுதான்

இன்னிசைக்கும பறவைக் கூட்டம் அழகுதான்.அந்த
வனத்தில் வாழும் விலங்குகளும் அழகுதான்
பறக்கும் தும்பிக் கூட்டம் கூட அழகுதான்அந்த
வானம் பாடி கூட்டங்களும் அழகுதான்

ஒலிக்கும் அந்த ஆலயத்தின் மணிகளும்
அங்கு ஓம்புகின்ற பக்தர் கூட்ட அலைகளும்
ஒளியை வீசும் கதரவனின் உதயமும்
மாலை வேளை வீசும் நிலவின் ஒளியும் கூட அழகுதான்

மானிடமும் மனித நேய ஊக்கமும்
இங்கு ஊட்டி வைக்கும் பாசம் கூட அழகுதான்
பள்ளிக்கூட பருவமும் அழகுதான்
அங்கு பாடம் தரும் ஆசானும் அழகுதான்.

தாய் மொழியாம் தமிழ் மொழிதான் பேரழகு
அதை தந்து விட்ட தாயவளும் பேரழுகு
செம் மொழி என பெயர் கொண்ட என் மொழி
என்றும் பேச பேச இனிக்கும் அழகு அழகுதான்

உற்றாரும் சுற்றாரும் உறவுகளும்
எங்கள் சுற்றத்தை பேணி விட்டால் அழகுதான்.
கைத் தொழிலில் இருக்குதம்மா ஓரழுகு
அதைக் கற்றுக் கொண்டால் உன் வாழ்வு மிகை அழகு.

இயற்கை தந்த செல்வங்களோ எண்ணிலா.அதை
இயன்றவரை நுகர்ந்து கொள்ளல் அழகுதான்.
சுற்றுப் புற சூழலை பேணவே .நாம்
இன்பமாக இனிமையாக வாழவே.
செயற்கை முறை நுகர்வுகளை தவிர்த்து.நாம்
இயற்கையோடு வாழ்ந்திட்டால் அழகோ அழகுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்