ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

மக்களின் ஈடுபாடும் எம் சமூக கட்டுமானமும்


மக்களின் ஈடுபாடும் எம் சமூக கட்டுமானமும்
ஒரு சமூகம் என்பது அங்கு வாழும் மக்களின் கலை,பண்பாடு,பழக்க வழக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. அங்கு வாழும் மக்கள் தங்களின் கலாச்சாரமாக அவர்களின் மூதாதையர்கள் பின்பற்றி வந்த பல நடைமுறைகளை தொடர்ந்தும் பின் பற்றி வந்தார்கள்.பின அந்த சமூகத்தின் பழக்க வழக்கங்களில் ஒரு சில மாற்றங்களிற்கு உடபட்டு அது அடுத்த சந்த்திகளிடம் கையளிக்கப்படுகின்றது.

அவையாவன 1.ஆலய வழிபாடு.2,கல்வி.3.சுகாதாரம்.4.இயற்கையை கையாளுதல் என பலவாகும்.
இங்கே கல்வி எனும் பொழுது அது முன்பள்ளியில் ஆரம்பிக்கப்படும்.அப்போதைய காலங்களில் வீடுகளில் ஆரம்பித்த இந்த ஆரம்ப கல்வி முறை கால ஓட்டத்தில் ஒரு தனிப்பட்ட ஒருவரின் வழி நடாத்துதலில் அவரின் வீட்டில் அல்லது எங்காவது ஒரு பொதுவான இடத்தில் தொடர்ந்து நடைபெற்றது.

மனித வாழ்வில் பல மாற்றங்கள் எப்போதுமே தொடர்ந்து வருவதுண்டு.அது தனிப்பட்ட வரின் வாழ்வில் மட்டுமல்ல. சமூகங்களிலும் அது தேவை கருதி ஊடுருவும்.அப்படியான ஊடுருவல்கள் சில சமயம் நன்மைகளை பயப்பதும்.தீமையாகி கருகுவதும் உண்டு.

நான் இந்த ஆக்கத்தின் மூலம் எம் சமூக வாழ் மக்களிற்கும் தேவையான அத்தியாவசியாமான ஒருகட்டுமானத்தைப் பற்றி சற்று காத்திரமாக எழுத விழைகின்றேன்.

எந்த ஒரு நாடோ தேசமோ அல்லது ஒரு பட்டினமோ கிராமமோ அங்கு வாழும் மக்கள் அநேகமாக கல்வியை தங்களின் முதல் அத்தியாவசிய தேவையாக எடுத்து அதை கற்பதில் வெகு ஆர்வம் காட்டுவார்கள்.அதன் விளைவுகள் ஒவ்வொரு தனி குடும்பத்தின் பெருளாதார முறைகளினால் மேம்படுதலும் இடையில் விடுபடுவதுமாக காலம் கழிந்து கொண்டிருக்கும்.

ஆயினும் ஒவ்வொரு ஊரிலும் மிகமிக அத்தியாவசியமாக சனசமூகநிலையம்ஆலயம்,முன்பள்ளி என்பன அவ்வவ் சமூகத்தில் பாரிய இடத்தை பெற்றிருக்கும்.இந்த அடிப்படையில் நான் இங்கு எமது ஊரில் அமைக்கப்பட்ட முன்பள்ளியைபற்றியும் அதன் நிலைப்பாடுபற்றியும் சிறு பதிவை காலத் தேவைகருதி பதிகின்றேன்.

எமது ஊரில் காலம் காலமாக நடைபெற்று வந்த இந்த அரிவரி என அக்காலத்தில் அழைக்கப்பட் ஆரம்ப கல்வி முறை ஒரு நிலையான,அந்த ஊரிற்கே சொந்தமான இடத்தில் நடைபெறவில்லை.காரணம் இந்த ஊரிற்கு என்று ஒரு நிரந்திர கட்டிடம் இல்லாமையாகும்.
இதை எமது முன்னோர்கள் எவ்விதத்திலும் ஒரு தொலை நோக்குபார்வையால் அமைக்கவோ அன்றி அதன் தேவை கருதி எந்த ஆக்கபூர்வமான முன்னெடுப்பும் எடுத்தாக நான் அறிந்த வரையில் தெரியவில்லை.

இக் கட்டுரையின் நோக்கம் கடந்த காலத்தைபற்றி அலசுவதல்ல.நடைமுறைக் காலத்தில் நாம் இப்போது என்ன செய்கிறோம்.செய்யப் போகிறோம் என்பதைப்பற்றி சற்று சிந்திக்வேண்டி மட்டுமல்ல செயற்பட வேண்டியே இந்த இடுகை தொடர்கின்றது.

எம் ஊரிற்கான ஒரு முன் பள்ளி அதுவும் சொந்தமான நிலப்பரப்பில் தேவை என்பது எமது இளஞ் சந்ததியின் ஆர்வமாக இருந்தது.அதற்கான முயற்சிகளும் ஏலவே நடந்தது.
ஆயினும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றமாதிரி நிலைமை அமையவில்லை.எமது ஊரவனும் கனடாவாசியுமான திரு கந்தசாமி.பாலேஸ்வரன் அவர்களின் தனி மும்முரமான முயல்வால் முன்பள்ளிக்கான நிலம் சனசமூக நிலைய நிர்வாகத்திடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த நிலையில் எமது முன்பள்ளி கட்டப்பட்டு அதன்செயற்பாடுகள் முடுக்கி விடப்பட்டாலும் அதன் கட்டுமானம் பரிபூரணமாக நிறைவேற்றப்பட்டதா?

இந்த முன்பள்ளி நில.புலவாழ் மக்களின் நிதியினாலும் மேலும் .அரச நிதி உதவியினாலும் முன்னெடுப்பட்டு கட்டிடம் பூர்த்தியாக்கப்பட்டது.நாற் சந்தி நண்பர்கள் எனும் எமதூரக இளைஞர்களின் பெரு முயற்சியால் இந்த முன்பள்ளிக்கு ஒரு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அதுவும் நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை பயன்படுத்தக் கூடிய நிலைகள் பின்வரும் காரணத்தால் சரியாக உபயோகப்படுத்தமுடியவில்லை காரணம் காலநிலை.இந்த பூங்கா ஒரு சோலைவனமாக இல்லாவிட்டாலும் வெயிலின்.மழையின் தாக்கம் இல்லாமல் அது அமைக்கப்படவில்லை.இவ்வளவு செலவு செய்து கட்டப்பட்ட இந்த பூங்காவை முன் பள்ளி மாணவர்கள் பயன்படுத்க்கூடிய நிலைப்பாட்டை நாம் கவனத்தில் எடுக்கவேண்டியது காலக்கடமையாகும்.
எனவே இந்த சிறுவர் பூங்காவை வெயில்.மழை படாத ஒரு நிலையிலும் அதைச் சூழ குளிர்மையான சுவாத்தியத்தை ஏற்படுத்தக்கூடியமாதிரி அமைக்கவேண்டும்.இதற்கு நாம் செய்யவேண்டியவைகள்.

சிறுவர் பூங்காவின் மேற்பகுதியை குடை போன்ற அமைப்பாக உருவாக்கி.அதன் கீழ்ப்பகுதியில் சுற்றிவர அழகான பூங்கன்றுகளை நாட்டி அவற்றிற்கு தொடர் நீரோட்ட வசதியை ஏற்படுத்தவேண்டும்.இதற்கான சிறந்த ஆலோசனைகளை நிர்வாகம் உள்வாங்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.நிலப்பரப்பு கற்கள் அகற்றப்பட்டு தூய வெண்மணலால் நிரவப்படவும் வேண்டும்.

இன்னமும் முன்பள்ளியில் சீர்செய்யவேண்டியவைகள்.அங்கு என்னென்ன மரங்கள் நாட்டப்பட்டால் வேரூன்றும் என அறிந்து அம் மரங்களை நடுதல்.முக்கியமாக செம் மண் தேவையான அளவு கொள்முதல் செய்து முன் பள்ளியின் வாசல் பக்கமுள்ள மதில் கரையோரம் மிதமாக ஆழமாக பரவி மர நடுகையை மேற்கொள்ளலாம். எனதான பரிந்துரையாக.வேம்பு.தென்னை மரங்கள் .வாழைமரங்கள் நடுதல் சிறப்பென்றே எண்ணுகிறேன்.எனினும் உங்களின் தெளிவான நடைமுறையான எண்ணங்கள் மொருகேற்றட்டும்.
முன்பள்ளியை சூழ சுற்று மதில்க ள்முழுமையாக்கப்பட்டு வண்ணம்தீ ட்டவேண்டும்.. கட்டப்பட்ட அரங்கமோ வெயில்.மழை காலத்தில் பாதுகாப்பு இன்றி திறந்த நிலையில் உள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

முன் பள்ளி வாசலில் நிழல்பயன் தரு மரங்களை உள்பகுதியூடாக நடப்பட்டு பராமரிக்க ஆவன செய்தல் வேண்டும். அங்கு.கட்டப்பட்ட மல.சலகூட பாதை சீரமைக்கபட்டு பாவனைக்கு ஏற்றமாதிரி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்,
முன்பள்ளியின் உள்ளே வெளியே காவணிகள் அகற்றப்பட்டு சுத்தம்பேணுதல் மிக முக்கியமாகும்

எனவே இந்த ஆக்கத்தின் மூலம் ஊரவர்களை அன்பாக கேட்டுக்கொள்ள விழையும் நிலைப்பாடுகளாக உங்களின் பிறந்த நாள் நினைவாக விரும்பிய மரங்களை முன்பள்ளியில் நாட்டுங்கள்.வருடத்தில் இரு தடவையாவது ஊரகர்கள் சேர்ந்து சிரமாதனம் செய்தால் முன் பள்ளியை அழகாக பராமரிக்கலாம்.

இதை நிர்வாகம் மிகவும் கவனம் எடுத்து நிர்வாக அங்கத்தவர்களின் பங்களிப்புடன் ஊரவர்களை அழைத்து இப் பணிகளை ஆர்வமாக செய்தல் வேண்டும்.

மாதத்தில் ஒருநாளாவது நிர்வாக அங்கத்தவர்கள் இப் பணியை ஆரம்பித்து ஊரவர்களின் உதவியை பெற ஆவன செய்தலே ஆரோக்கிய முதல் படியாகும்.
ஏற்படும் செலவுகளை நாம் ஏற்போம்,முதலில் செயலாக காட்டுங்கள் மற்றவைகள் தாமாகவே உங்களை தேடிவரும்.அதாவது நிதியுதவியை குறிப்பிட்டேன்.

இவ்வளவு அருமையாக முனபள்ளியின் தேவைகள் அனைத்தும் அடங்கிய நிலையில் உள்ள இந்த கட்டுமானத்தை அழகாக சீராக்கி பராமரித்தலே நாம் எமது வருங்கால இளஞ் சந்த்தி யினர்க்கு கொடுக்கும் ஆழமான பரிசாகும்.வரும் இளம் சந்ததியினர் எம்மைப்போலவே கடந்த கால சந்ததியினரை இகழ்வாக நினைக்கும் நிலைமையை ஏற்படுத்தாமல் இருப்போமாக.

வெறுமனே எமது ஊரிலும் இவ்வளவும் உள்ளதே என புழுகுவதிற்காக அல்ல இந்த கட்டுமானங்கள்.நாம் இதை சரியான முறையில் பராமரித்து செம்மையாக்கி வரும் இளைய சந்த்தியிடம் ஒப்படைக்க வேண்டியது ஊரை நேசிக்கும் ஒவ்வொருத்தரின் காலக் கடனாகும்.
முன்னோர்கள் செய்த அல்லது செய்யாத தவறுகளை நாம் செய்யாமல் இருப்போமாக.
சும்மா ஒற்றுமையால் உயர்வோம் என சுலோகத்தில் மட்டும் எழுதி விடுப்பு பார்க்காமல் செயலாற்ற வாருங்கள்.முன்பள்ளி ஒரு பூஞ்சோலைவனமாகும்,மனமிருந்தால் ஆக்கலாம்.
ஆக்குவோம் என ஒரு முனைப்புடன் ஆகச் சிறந்த நோக்கத்துடன் எம்முடன் கரம் சேருங்கள் என எமது ஊரவர்கள் அனைவரையும் இந்த சிறு ஆக்கத்தின் மூலம் இரு கரம் நீட்டி தங்களின் காத்திரமான ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

இந்த கட்டுரையால் ஒரு முகமாவது தெளிவடைந்து செயலாற்ற முன் வந்தால் செழிப்பாகும்.
இந்த எதிர்பார்ப்பை முடிக்கும் முன் மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம்.அதாவது உங்களின் பிறந்த நாள் அல்லது உங்களின் பிள்ளைகள்,பேரப்பிள்ளகள்,உங்களின் இல்லத்தரசிகளின் எவருடையதாயிருந்தாலும் அவர்களின் ஞாபகமாக எதிர்கால நினைவுச் சாரலாக ஒரு பூங்கன்றையோ அன்றி நிழல்.பயன்தரு மரங்களையோ எமது முன் பள்ளியில் நாட்டி நீர் பாய்ச்ச ஏற்பாடும் செய்யுங்கள இது போதும் எம் முன்பள்ளி பசுமை பொங்கும் பெரும் சோலைவனமாக.

இந்த ஆண்டு விழாவிலிருந்து எம் முன்பள்ளி சிறார்களின் ஆடைகள் ஒரு சீருடை வடிவம் பெறுகின்றது எனும் மகிழ்வான சேதியுடன் உங்களிடம் இருந்த தற்காலிகமாக விடைபெறும்

நன்றி
என்றும் ஊரகனாக
சு.குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்