சனி, 3 மார்ச், 2012

என் எண்ணக கனப்பு?


மெல்லவும்,சொல்லவும்
துணை வேண்டும்.
செல்லிடம் சேர நற்துணையும் வேண்டும்.
எங்கு தேட?
எதில் நாட?
எல்லாம் அரிதாரம் மூடிய அற்பனங்கள்.

ஆம்
சொல்ல முடியா வேதனை*
மெல்லவே முடியாத இழப்புக்கள்
செல்லெரிக்கும் நினைவுகள்
ஏன்
சொல்லரித்துப்போன துணைகள்
மலரும் நினைவுகளில்
மரித்துப்போன பல பயன் பாடுகள்
தரித்த இடம் தவறி
பாதை தவறிய பலா பலன்கள்

குறித்த இடத்தில் குவியம் மேய
தறித்துப்போன பல தடயங்கள்
வெறித்த பார்வையில் வேய்ந்ததான
குறிப்பிடவே தயக்கம் காட்டும் உணர்வுகள்
மதியிழப்பில் மானம் சூடிய உறவுகள்.

மாண்புகளை தொலைத்த
இல்லை
தொலைக்க வைத்த
நண்பர்கள் எனும் பெயரிலான
உறவுகள்
பண்புகளை பாழடித்த படித்த ஆனாலும்
படிப்பறிவற்ற பாளங்கள்.

சொல்லி ஆற்ற சொப்பனத்தில் மட்டுமே
வல்லினம் காண முடியும்.
பல்லி பலன் பார்க்கும்
பாழடைந்த சமூகத்தில்-நான்
பார்ப்பனரை வெறுக்கும்
நாத்திகனாம்.

கற்களிற்கு பாலாபிசேகம்
கனவில் கூட காட்டினால்
காயமாறும்.
கனவு நனவாகும் என
ஏற்றமிறைக்கும் இந்த
மாற்றமமைக்கா மானிடவர்க்கத்தில்-----???
என்
தாற்பாரியங்களை
அதனதன்
தோற்றங்களையும்,தேற்றங்களையும்
அதனூடான மாற்றங்களையும்
மறுதலிக்கும் இந்த
ஆற்றலற்ற சமூகம் என் உடன் பிறப்பு????

ஆதங்கம்
வெறும் வினாக்களையும்
வினையாற்றா
விகற்பங்களையுமே என்றும் சாரும்.
தூணகன்ற அத்திவாரமாய்
ஓரத்தில் நான்
ஓர்மங்களை கழுவேற்றி
பாரம் த(க)னைய பழுவேறுவேற்ற!
ஈரமில்லா இதயனாம்.
இழைக்கிறது இனம்???
இளைக்கின்றது மனமும்,மானமும்

வலைப்பதிவு காப்பகம்