வியாழன், 30 ஏப்ரல், 2009

சிரையாத சிலிர்ப்பேக சிலாகித்த சிரம் சிலிர்ப்பி

மல்லிகையின் வாசம் இன்றும் என்
நெஞ்சில் நெகிழ்வாய்,
அகக் கண்ணை அழுத்தும் நினைவு மட்டும்,
ஏக்கத்தின் சொரியலில்
ஏகாந்தமாய்,

இந்த ஆளுமை எனக்குள் மட்டுமா என்றால்!
அதுதான் இல்லை ஆதங்கம் அரற்றும்,
ஈழம் ஏந்தும்!
ஈரமான தமிழீழ மக்கள் அத்துணை நெகிழ்விலும்,
நெட்டுயிர்த்து,
நெடு மூச்செறிந்து,மனச் சிக்கலாய்
மருவி,இன்று நெடுமலையாய் வீச்செறிந்து,
வேகத் திடலின் வெம்மை தணிக்க,
பாரெங்கும்,வீதியில்
உரிமையின் ஓங்காரம் ஏக,தமிழீழ
தேசியக்கொடியுடன் தேச நேச நெஞ்சங்கள்,

சர்வ நாடுகளின் மனக் கதவை ஓயாமல் தட்டும்
பர்வத நதியின்
அலையாக,நெஞ்சம்
ஈழம் சுமந்து,மக்களின் ஏக்கங்கள் கலந்து
ஒவ்வொரு விநாடியும் ஓயாத ஓர்ம கொட்டொலிகள்,

பவனியின் பாதக் கதவுகள் பவ்வியம் சுரக்காதா?
பாவிகளாக்கி எம் இனம் அழிக்கும் ஆரியத்தை
ஆவியம் ஆக்காதா?,
அத்துணை எதிர்பார்ப்பு,அத்தனையும்
தேச விடியலின்
வேதங்கள்,
வெம்பி அனுதினமும்,சூம்பியதான உறவுகளின்,
ஓலங்களின் விடியல்களின்,
விதந்துரைப்பு,
வீம்பவும் முடியாமல்,விசும்பும்,
எண்ணத்தினை தூண்டவும் முடியாமல்,

சுட காடேகா!
சொந்தங்களின் சுமைகளை கங்குல்களாக,
மனதெரித்து,விடியல் நோக்கும் நேரியத்தின்
நெடும் பயணம்,வீரியமாகவே,வீறுநடை,
ஜன சங்கமத்துடன்,
ஒவ்வொரு ஜனநாயகத்திடமும்,திடமான ஆவண ஒப்படைப்பு,

ஒரு அசைவு செயலாக தேசம் விட்டு,
தேச எரிப்பு பயங்கரவாதியிடம் பகிரங்க வேண்டுதல்,
யாரிடம்?
அவன் பயங்கரவாதி
எப்படி மனிதம் புரிவான்?
எத்திசையில் அவன் இசைவான்?

ஏன் இந்த நிலை?
புரியாத புதிரில்லை
சூட்சுமமும்,ஒன்றும் பரம ரகசியமும் இல்லை,
ஆனால்
இங்குதான் இவர்களின் இயங்குதளம்
மூலஸ்தனத்தின் முகவரி,முகம் ஒ(ளி)ழித்தது.

உலகின் மூலைமுடுக்கெலாம்,
பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கப் போவதான,
பீரங்கி பிரச்சாரம்,
தீவிரவாதத்திற்கும்,பயங்கரவாதத்திற்கும்,
விடுதலை போராட்டத்திற்கும்,உள்ள
வி(த்)தியாசத்தை விபரமாக பிரித்து விரியாததன் எதிரொலியா?
புரியவில்லை?

தமிழனுக்கு ஓர் நாடு தரணி கொள்ளக்கூடாதென்ற
ஆதங்கத்தின் வக்கரிப்பு?
அங்கு அழிவது தமிழன்தான் என்பதான
வன்ம விரிப்பு,

மேற்குலகின் கனவு துறைமுகம் ஊடான அக்கறை
அற்பமான,ஆனாலும் மனிதம் தின்று இந்த
வல்லூறுகள்
வைக்கும் கண்ணின் காந்தாரம்,கைகளை ஆரியனிக்கு,
அடைவு வைத்தால்?
ஆகும் காரியம்,அது எப்படியோ காரீயமாகி விடும்
என்று புரியாத மதக(ளி)ழிப்பு.

இதற்கு உடனடித்தேவை கற்பகத் தூபத்தில் எப்படியும்
ஓர் அமைதி அது எந்த அழிவை இதப்படுத்தினாலும்,
தன் காரிய சித்தியின்
தித்திப்பிற்கானது,

சீனா,பாகிஸ்த்தான் ,ஒரு பக்க இணைப்பு,
மறு பக்கத்தால்
இந்தியா அமெரிக்காவுடனான அணு ஒப்பந்த கைச்சாத்து
தெற்காசிய வல்லரசாகும் கனவுகளில்
யார் கதா நாயகன்?என்ற ஏக்கத்தின்
எதிர்பார்ப்பின் தாற்பரிப்பு.

அதற்காக அங்கழியும் மனிதம்,அதன் பூர்வீகம்
அதன் கலை இன்னபிற
சுவடுகளின் சூத்திரம்!
எவன் இதை அகம் கொண்டான்.

திராவிடனின் திரவியம் ஒட்டு மொத்தமாக
சந்திக்கு,சந்தி துயில் கொள்ளும் கோவணத்
துண்டிற்கும் உதாவாத பரதேசிச் சாமிகளைத்தவிர
வேறென்ன பலம் கொண்டான்?
வேதம் ஊதி தேவாரம் ஓதி,
சாமிக்கும் பசியென்று பால் கொடுக்கும் இந்த
வக்கற்ற,தேசாந்திரிகளிற்கு,
உலகில் எங்கேனும்??,ஆளுமை மிகு
அரசுண்டா?அரவ, அணைக்கவேனும் வக்குண்டா?

கல்வியில், வேள்வியில் முன்னிலை வகுக்கும்
இந்த தமிழனிற்கு வீரத்தில்,சுதந்திர சுகானுபவத்தில்
சாசுவாதவான,
பற்றில்லை. ஏனெனில்
பாரில் அவனுக்கு ஓர் நாடில்லை,

உள்ளவனின் வீரத்தையும்,பரந்த தொலை நோக்கான
வீச்சான பார்வையின் அகத்தையும்,அதனூடான அரசையும்,
கொச்சைப்படுத்தி அவமதித்து
தன்னை ஆசுவாசப்படுத்தும் மோட்டுப் போக்குள்ள,
வால் பிடித்து விசுவாசம் தேற்றும் தன்மை,
இன்னமும் அற்றபாடில்லை,

அண்ணணின் அணியின் ஆளுமையை
அகலப்படுத்தவோ,
விசாலப்படுத்தி, அதை வேகம் முடுக்கவோ, இந்த
வேதினியில்
ஈழத்தமிழனில் பாதிப் பேருக்க கூட அந்த பாதிப்பில்லை,

இருந்ததும் கூட பாதி வழியில் தன் சுகமாற்ற பரந்தவீரத்தை
விற்ற துரோகம்,இன்று விஞ்சி நிற்கும் விதமென்றால் மிகையில்லை,
துரோகிகள் மிரிச்சு பிரித்தான்,அகன்ற நம்பிக்கையை
உறவாடிக்கெடுத்தான்
உற்றவன்,ஏற்றவன் என்று இந்த ரண்டகத்தாரை நம்ப
எம்மை
இரண்டகப்படுத்தியதன் உச்ச கட்ட பேரவலம்.
இன்று வன்னியின் பேரவலமாய் வலம் இந்த
இங்கு மையம் கொடி கட்டப்பட்டது,

கையகப் பாடான இயங்கு தளம் எதிரிக்கு எம்மவர்களாக
இயங்கியதாக, அரிதாரப்பூச்சாளர்களால்,இந்த இரண்டகர்களால்
ஐதாக்கப்பட்டதான, அவலங்கள்தான்.
மிகையில்லை
அண்மையில் கூட இதுதான் அரங்கேற்றம்.
அடிக்கடி அரங்கமாகின்ற வேரவலங்களை, வேதினியில்
வேறெங்கு காணமுடியும்,?

இந்தியனின் இயங்கு தளம் கூட ஆடு தளமாக களத்தில்
கனதி இழந்து சுருதி ஓய்ந்து
சுடுகாடாக்கப்பட்டு,இன்று
காடாத்து வெகு சீர்மையாய் சீர் கொள்ளப்பட்டிருக்கும்,

இந்த இழிய,ஊனர்கள்,ஈனர்களின்,
இரங்கு தள பேனயர்களின் பேதலிப்பகற்றப்பட்டிருப்பின்,
அல்லது ஊனமற்ற மானத்தை உறுதியாக கடைத்திருந்தால்,
அது என்னவோ?

பண்டாரவன்னியன் படை திரட்டும் போதெல்லாம்,
காக்கை வன்னியர்களும் களம் மாறுகின்றார்கள்,
தெளிவாகத்தானே வரலாற்றை வகுந்து படித்தார்கள்!

ஆகா!
அதனால்தான் இந்த ஊனப் புறங்களும்,பாரமாய் புறம் அகன்றார்கள்.
என்னவோ நான் கூட கற்கவில்லை, அப்புறம்
காக்கை வன்னியனிற்கு என்னவாயிற்றென்று,
ஒரு வேளை ஆயுள்முழுக்க அரசோட்சினானா?
புரிந்தவர்கள் பகன்றால் சிலவேளை இனி வரும் காலங்களில்
இந்த அவலம் சூட்ட யாரும் உளவழிக்கார்,உறவளிக்கார்.

எட்டப்பன்,
எந்த அவலம் கொண்டான்?
ஒட்ட வந்த பதவி சுகம் யாத்து,ஆந்திர கவர்னரானான?
எப்படியும் வரலாற்றில் ஓர் காத்திரமான
பதிவெய்தி தன் இனத்தின் பழி ஏந்தி எத்தனை
மக்களை நரபலியாக்கினான்?தன் சந்ததிக்கு
ஏற்றி வைத்த பாதை வெறும் உபாதைதானே
அது மட்டுமென்றால்
சிலாகிக்கலாம்,

உரிமையின் வீரியத்தை,
சுதந்திர வேட்கையின் பாரியத்தை,
மண்சார் தன் மங்கலத்தை,அதன் மகிமையை,
அதனூடான பூர்வீகத்தை,அதன் சாமான்யத்தை,
எந்தன் மண் எமக்களித்த வியால்பத்தை,
விலங்கிடாத எம் தேசத்தை,உலகின்
சொர்க்கபுரி என்றும்,பூமிப் பந்தின் பசுமைக் களஞ்சியத்தை,

இந்த வீணர் கூட்டம்
விரிவாக்கி அந்நியனின் பாதாசாரத்தில் பணிவாக,
கூனிக்குறுகி,அத்தனை ஆயாசத்தையும்,சத்தகற்றி
அடிபணிந்து என்று எம் விடியல் நிலத்தை கையகம்
அகற்றி கரிபீச்சி பூசினானோ,
அன்றைக்கு வந்தமர்ந்த அவலம்.

இன்று பூதாகரமாக எம் மண்ணால் ஆழக்காலூன்றி.
அகலமறுப்பாற்றும் கேவலம்,

ஆயினும்,
காலக் கனிவை உற்றுப் பூக்க மீள
உதயமாவார்கள்,கரிகாலத் தேவர்கள்,
பாரே பார்த்திரு!
பூபாளம் பண்ணிசைக்க அத்தனை ஆக்கிரமிப்பையும்
ஆழ உழுது அவனி வலம் சூட்ட
சூசகமாய் சூரிப்பார்கள் எங்கள்
சூரியத் தேவர்கள்,
சூனியமாக சூத்திரம் சூடவில்லை என
தோத்திரத்தான் பாத்திரமாய்
பகை விலக்கி,பாடானதாய் பார்த்திருந்த இகம்
புலியின் புத்தசைவில்

ஒலியின் ஓங்காரம் ரீங்காரிக்க- காரிருளகற்றி,
வையகம் எலாம் வைத்த கண் விழிகள்,
இமை மறுக்க,

இத்துணை சாதூரிய,சதுரங்கத்தின்,சாமர்த்தியத்தை
அத்துணை கொண்டு,அரங்கேற்றிய
வீரியங்களை வியாபமாக்கி, விதையாக்கிய
பதாகை யாத்த பார்வைகள் பவனியாக்கி,
முதிர முகிழ்வார்கள் அவனி
அதிர,அரசோச்சி.
சிருங்கார ரசம் சிதைந்ததான உலகப்பார்வையை
விலக்கி எங்கள் வேத மந்திரம் சலனமற்று

சகல திசை நோக்கியும் சந்தங்கள்
சாந்தங்களாய்
சிந்தொலிக்க,
நீரில் மிதந்த பந்தாக
உலகப் பந்தில் உதயம் காணும் தமிழீழம்.

செவ்வாய், 28 ஏப்ரல், 2009

பூங்காற்று வீச பூவான மென் உளம் கோர்த்து


ரசம் கெட்ட திரிசங்கு சாகரம்,பார்
தேர்தலில் ஈழத்தமிழனை திரிப்பெடுத்தி
ஊர்தலாக,ஊனம் கொள்ள, உளம் கொண்ட
பார் தல பயன்பாட்டில்,தமிழக ஈழ நேயம்
படைத்தோர் இயங்குவாரா?

உங்களின் ஆதங்கங்கள் ஆதார்சத்துடன்
ஏற்ற இனமான உணர்வின் ஊக்கங்கள்
மாற்றெய்தி,மூப்பெய்தி போகாது,மூடும்
நிலை காணாது.

அம்மையாரா?
ஐயனை மறந்தோர் நன்று.
இன்று எரியும் நெருப்பை நீருற்றி தணிக்கும்.
கன்றுள்ளம் கொண்ட காப்போரே தேவை.
என்றுள்ளம் ஏற்பாய் ஏதனம் ஊட்டும்
ஓளடதம்தான் மார்க்கம் ஐதில்லா நோக்கம்,

நேற்றைய நிலை நோற்றவர் மாற்றுவார்
நோயும் பாயும் தன் நிலை சார,இது மாற்றமில்லா
மாற்றம்,இங்கு தோற்றப்பாடு தொய்வற்றது,
தேற்றப்பாடு இயல்பானது,இயங்குதளம் தோற்றத்தின்
பற்றுதலின் பார்வைத்தளம் முன்னெடுப்பின்
முதிர்ச்சி முகம் ஏற்றும் உயர்ச்சி.

நேற்றையவரும்,இன்றைய எவரும் தவறாற்ற
தோற்றமும் உள்ளவர்களில்லை,
பாரினிலே,எந்த தேர்வினிலும்,தேசத்திலும்
குற்றமாற்றா குருபரனும் இல்லை,
காலம் மாற்றாத காயங்கள் உண்டா?
களம் இது தேர்தல் களம் எனினும்
மாற்று முகம் காட்டாத மகிமை அது தேவை.

பரர்ப்பனிய பார்வையகற்ற பாகம் மொண்டுள்ளம்
தேர்தலறிக்கை ஆறுதலாற்ற,
தேகம் சார் தேற்றி உள்ளம் ஓர் ஆறுதல் அகவ
தேசம் பார் தேவை கண்டு எம் கனதியான அவலம் அகற்ற
பாசமான தேர்வென நெகிழ்ந்துள்ளம் உனை வாழ்த்தும்,ஆயின்

ஏற்ற வாக்குறுதி உறுதி தளராமல்
ஆற்ற துயர் மாற்ற ஆளுமை கொள்,
அற்றதெல்லாம் தேற பற்றுதல் நீ பாராக்கு,
வெறும் பராக்கு காட்டாமல் பாவை,கன்னித் தகமே
தமிழகத்தின் அன்னையென்றுன்னை,
அகமகற்றும் அன்பை நீ நெறி கொள்வாயா?
மீண்டும் எம் குரல்வளை குதிர்த்து,
குரோதம் கொள்வாயா?

தற்போதைய நன் நம்பிக்கை நீ
தற்காலிக அரிதாரமாயின் அறமழிந்து போவாய்
தமிழன் என்ற தாற்பாரியம் தரணியில்
தமிழீழம் அரசோச்ச ஆன களம் ஆக்குவாய்,
ஏந்து தளம் விரித்து வியாபம் நோக்கி,

நொந்த ஈழத் தமிழின நுகர நீ நூற்பாய் தனிப் பாதை
வெந்ததெல்லாம் வெளி வானிலிருந்து உன்
சந்தம் வியாபிக்கும் ஆத்ம சாந்தி உனை ஆராதிக்கும்.
பந்தம்,தமிழ் பந்தம் உன் பாசறை நிறைக்கும்.
பாரினில் பூக்க தமிழீழம் பாசாங்கற்று பயனாற்று.

தமிழக உறவுகளின் பாசமிகு உணர்வதை
வதைக்காத,விதைக்கும் வியல்பம் கொள
புதைந்ததெல்லாம் புத்துயிர் பெற்று
பூக்கும் புன்னகை உன் புவனத்தில் ஓர்
பூங்காற்று வீச பூவான மென் உளம் கோர்த்து,

ஆவன செய் அவனித் தமிழினம் உன்
அகம் வாழ்த்த,கடமையை,அந்த கண்ணியத்தை,
அதனூடு ஒன்றும் கட்டுப்பாட்டின் உதய ஓங்காரத்தை
உன் மத்தம் கொள்,
உதிக்கும் தமிழீழம்.

திங்கள், 27 ஏப்ரல், 2009

தீதெய்தா நல் நம்பிக்கை கொள்வோம்


ஆடுதளத்தின் அரக்கர் கூட்டம் அகற்றப்படவேண்டியது,
நாடு தளத்தின் நன்னிலையாகும்,வெற்று வார்த்தைப் பலத்தில்,
குடும்பி கட்டும் குரல் வளை மாற குவலயம் குதிரும்.
வெதும்பி தமிழினம் வெந்தங்கே சாக்காண ஈன இந்தியன்
ஆங்கே குதூகலித்துக் களிப்பதோ?

ராஜீவின் பரம்பரை சொத்தா பாரதம்?,பாவி
மேவி எம் மண்ணில் குவித்த ரணம் ஆறுமா?
பாசிசம் படைத்தவன் பாசக் கயிறதை பரப்பி,
மோசம் கடைத்த வன்மம் கொஞ்சமா?உந்தன்
ஆசியைக் கடைந்து ஆற்றும் சிங்களம் பழி மொள்ள,
இத்தாலி மொண்டைச்சி மெத்தன மாற்றவா?
ஈழத் தமிழினம் இறைஞ்சிங்கு சாவதா?

தமிழகமே!
தங்கள் தடகளத்தில் இன்று அவசர
மாற்றம் வேண்டும்,
இதை ஆற்றி அவர் வஞ்சினம்மாற்றவே,வெங்களம்
ஆங்கு வெகுசனமாய்க் குவிக்கும்,
இந்தியன் ஆற்றும் சுடுகலப் பிரசன்னம்,அது சார்
கள பிரயோகம்,கருவிகளின் கவீதுகளும்,கடல்சார்
உசாத்துணையும்,உசுப்பேற்றும் உபகரணங்களும்,

ஓய்வு நிலை கொள்ள சிங்களன் அதன்,
ஆய்வு தளம் இழந்து,
மாய்வெய்தும் மகத்துவம் திகழும்.
வார்த்தைகளின் வாசமங்கே, தினமங்கே தினவெடுக்கும்,
ஈழ சாக்காடு ஏந்தியே தேர்தல் களம் ஒருங்கிணைக்கும்,
மாள,தினம் எங்கள் இனம் மாள இவர் ஏற்றும் பதவிகளில்,
நாளும் மாறும் இவர் வாக்குறுதி மாற்றி எமை தீண்டும்,
கொலைக் களத்தில் மாற்றம் வேண்டும்.இதை வேகும் வார்த்தை
கொண்டு நீ கையாளமல் கொள்ளும் செயல் வேண்டும் அது
உடனடியாக நிகழவும் வேண்டும்.


போதும் ஐயா!
தாய்த் தமிழகத்தின் தொப்பிள் உறவுகளே!
எங்கள் இறப்புக்ளின்,இழப்புக்ளின்
வேதனையின் சாரமும்,
அதன் சாயலும் இனியும் எங்களகம்
இதைத் தாங்கும் சக்தி இல்லை.
தங்கள் ஆசனத்திற்காக எங்கள் ஆஸ்த்தான சபையை

அவலப்படுத்தி எங்கள் எந்தையர் ஈழ
நிலமிழக்க,உங்கள்
ஆசனங்களை அலங்கரிக்கும் இந்த
கரிய நிலை வேண்டாமே,
எங்கள் உதிரம் சொரியும்,ஊனம் வழியும்
உறவும் அழியும்,தவிர்க்க நீ
கதிர் களமாம் தேர்தல் களத்தில்
எங்கள் நிலம் விழுங்கும்
நீலியரை தளமிழந்து மண் கவ்வ நீ
மதி தழுவும் நீதி எடு,
தமிழர் உணர்வதை கொள்ளாமல்
உரமாக்கி அவர் நிலம் மீட்க நீ
உளவுரண் ஏற்றி நில்லு,எங்கள் மன
வளம் வரைந்து வெல்லு.
ஆரியர் கூட்டத்தின் ஆக்கிரமிப்பல்ல,
இது ஈழத் தமிழினத்தை
அழிக்கும் வேட்டை,இந்த வேட்கை,
மற்றும் புத்தத்தின் மண்
ஆக்க ஆரியம் கொள்ளும் மன ஆட்சி,

திராவிடத்தின் திடமழிக்கும் திடசங்கற்பம்,அவர்
இருப்பழித்து,உளவுரணழித்து,ஈழ நிலம்
சிங்களமாக்கும்
கள நிலையின் கைங்கரியம்,
அரச மரம் நாட்டி ஆங்கு புத்தன் சிறு நீர் கழிக்க
குந்தினான் என்ற கூச்சல்,
குலவினான் ஆங்கே என்றொரு
குதூகலம்,
உருவாக்கப்பட்ட மகாவம்சத்திற்கான
ஆதாரத் தடயம்,வழி தேடி,
அது எங்கள் அன்னையர் நிலத்தடியில்
நுகம் கொள்ள,
எந்த வரையறையும் இல்லாத வஞ்சகம்,
அஃதின்றி வேறென்ன?
தங்கும் அவன் தடம்?இல்லாத ஒன்றை
உருவகிப்பதன் சிரம்,
சிங்களவனின் ஆதங்கம் அதனால்
இன்னமும் ஆங்காங்கு
உருக்கொள்ளும் புத்தனின் பித்தமேற்ற சாகரம்,

சகிக்க முடியவில்லை இந்த அரச பயங்கர
வாதத்தின் அநாகரீகம்
மதிக்க தமிழினம் மகுடம் சூட்டி எங்கள்
நிலம் தரித்த அந்த நிஜம்
வேண்டும் எங்களிற்கு,

இந்த ஆரியத்தின் ஆக்கிரமிப்பற்கு ஓர்
ஓங்கார ஒழிப்பது வேண்டும்.
அதை எம் தலைவன் தாற்பரரிப்பான்,எம்
தாய்க் கொடியே அந்த தகமையை
அங்கீகரிக்க வைக்க நீ மூசி உன்
பங்களிப்பை எங்கள் தளமாக்கு.
ஆதலால் அந்த நிலை தழுவ இன்று
அரங்கத்தில் நரவீச்சிருக்கும்
பேய்கூட்டத்தை பேதியாக்கி மீண்டும் தலை
காட்டா தார்மீகம் உங்கள் வசமாக வாசமாக்கு.

ஆயின் ஈழ நிலத்தையும் பங்களிப்பாக்கும்,பயன் தரு
பாகமாக்கும் பசுமையான உணர்வுகொள் உதயங்களை,
உந்தன் தேர்தலில் தெளிவாக்க,எங்கள் மண் செறிவாகும்.
பகை புலமகற்ற
வழிகாட்டி,வளமாக்கு.

வரும் வசந்தம் எங்களின் வாசலில்
தரும் சுகந்தத்திற்காய் வீச்சுடன்,போர் முகம்
தரித்திருக்கும்.
இஃதின்றேல் ஈழ நில வள(ர்)விற்காய்,
வாகை சூடா வகை இழந்தான் தமிழன்,
அதற்கு தாய்த் தமிழகமும் சாரமூட்டினான்
என தமிழ்த்
தாயின் கண்ணீரில் காலமெலாம் தமிழகத்
தமிழினம் துயர் துடைக்க மார்க்கமின்றி!.

புவனத்தில்
அகழ்வாராட்சியில் தமிழர் தம்
போராட்டமென எதிர்கால எம் புலர்வாழ்,
சந்ததி வரலாறு படிக்கும்.
துணை போகாத் தமிழகமென உன் அகமெரிக்கும்
ஆராட்சிகள் மட்டுமே ஆதங்கமாய் அலங்கரிக்கும்.
அவதானி,எங்களை அரங்கேற்றி
அவனத்தில் வலம் வர ஈழநகை தழுவ
தலைவன் கரம் இறுகப் பற்று
இழைவாகும் ஊனமற்ற ஈழ நாதம்.

உன் அகம் நிறைவாகும்,
ஊனமது சுரக்காத உன்னத வயல்
புளகாங்கிதம் கோர்க்க உளங்கள் எலாம்
சுதந்திரத்தின் சுகானுபவத்தின் செய்யுளாக,
சேமமான தேசங்கள் அடைகாத்த சீர் வியக்கும்.

இன்று அம்மையார் ஆமோதித்தா?
வாயார மனமார?
இந்த நிலை எங்கள் ஏக்கத்தின் தேற்றம்.
தாங்கு நிலை தகமாகும் ஆசனம் அவாள்
வசமாக,
தாக்கப் பிடிக்குமா?தான் ஈய்ந்த
வார்த்தையின் வாசம்,சுவாசம் சூட்டுமா?
துய்த்து ஈழவர் துயர் தூய்மையாய்
அகமெடுத்து
ஆற்றினால் தேறுவோம் அஃதின்றேல்,
அழ்ந்த வார்த்தையின் சுரமவள் மாற்றி,மீண்டும்
வரமதை மறந்தால் வன்னியிலென்ன?
வையகத்தில் தமிழனை!,
வேண்டாம் தீதெய்தா நல் நம்பிக்கை கொள்வோம்.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

வருவார்கள்,எங்கள் காத்திர,சரித்திர நாயகர்கள்


மனரூப ஆதங்கம் மனித முகங்களின் முகவரிகள்,
மாறுபடும் நிலை எய்த மாற்றம் கொள்ளும் யதார்த்தங்கள்,
தேவை கருதி தன் சுருதி மாற்றும் இயங்குதளங்கள்,சுகம்
நாறும் எனிலும் தன் இனம் விற்கும் சுதேகிகள்,இந்த தன்
நிலை சாற்ற,சார்ந்தவர் மன விகல்க்க விசுக்கல்கள்,
கல,கலக்க மாய்ந்திருக்கும் மன விகாரிகளின்,சல,சலக்கும்
சத்தியமற்ற சாரல்கள்.

இத்தனை விதைகளையும்,இவராக்கி இனம் விற்றெனினும்
சத்தென்பதாய் தன் வாழ் விரிப்பார்,இனம்
பாழ் நிலை பதப்படினும்,
நாய் விசித்த வால் அதன் குலைப்பு,எஜமான விசுவாசம்,
அதன் வாசம் சுகிக்கும்,மோகம்,அதன் வயப்பட்ட லீலைகள்,
தன்னகப்படுத்த இனம் சாக்காடு விரித்தாலும் தன் இலக்கற்ற
இலக்கில் இயங்கியே எங்கள் இனம் வித்தான் பயங்கரவாதிகளைவிட
இவன் வசக் கந்தகம் வாரி,பூக்காட்டில்,புன்னகை பறித்து,
புனல் வசந்தம் கருக்கி,வளமெலாம் வழித்தெடுத்து,வாழ்வெலாம்
கரித்துடைத்து,கசியும் குருதிக் கூட்டில் குலவிக் கொண்டான்,

எனினும் எய்த சுகம் சாற்றுவானா?
எட்டிய இலக்கதை கொய்தானா?
சுட்டி நிற்கும் யதார்த்தம் சுவைத்தானா?சுமை
கொண்ட மக்கள் இதயம் கொண்டானா?ஆயின்
இவன் ஆக்கிய அழிவுகள் வலம் வருவதை வகுத்து
எந்த குறி இவன் எங்கள் ஈழ மண்ணகப்படுத்த மையம் கொண்டான்?

புரியாத புதிர் இவன் அல்ல எங்கள் தகமை.
இவனிற்கு, இவன்சார் இரண்டகவாதிகளிற்கு, ஊனமுற்ற
உள்ளகம் கண்ட யோக்கியமற்ற, ஈனவாதிகளிற்கு,ஈழம்
காத்திருக்கும்,நூற்றிருக்கும்,பாகம் இனியும் தெரியாது,
அது அப்படியே வீற்றிருத்தல்,துரோகிகளிற்கல்ல எங்களிற்கே அழகு.
ஏற்ற தலைவன் களமாற்றும் நூதனம்,அவன் எழுதும் ஈழ சாசனம்
ஆஸ்த்தான சபை கொலுவிருக்க, ஆழுமைமிகு பட்டறிவின் பாதை,
வலுவெடுக்கும் வகை யாத்த சீர்தளம் சிந்து பாட,சிலாகிக்க சிந்தை கொள்
விந்தையின் வீற்றிருக்கை விசையாகும்,விதை வியாபிக்கும்
காலம் உன் வாசலில் காலப் பிரசவம் கண்கொள உன்
காலம் உன் கையகம் உதிர்ந்து சவக் காட்டில் நீ சாரமற்ற பிண்டமாய்.

வருவார்கள்,எங்கள் காத்திர,சரித்திர நாயகர்கள்,
பாரது பண்ணசைக்க,பாரில் தமிழ்க்கொடி இழைய,

பேர்லின் கவனயீர்ப்பு.

வியூகம் விதைக்கும் வீரியம்.


நிதம் தோறும் வதை முகம்,எங்கள்
தலம் தேக்கிய ரத்த வாடைகள்,அழு
தணலில் எல்லாமே ஆங்கு அறமிழந்த
நம்பிக்கை அகமிழந்து அரற்றும் ஆவணம்
யார் அதை ஏறிட்டார்?
எந்த மனிதம்
மானுடம் காத்தது?
எவன் எமை ஆற்றினான்?இல்லை தேற்றினான்?

ஏற்றய செவிகள் எலாம் எமை நோக்கி,
கருவிகளை எலாம் களைந்து காடையனிடம்
கை ஏந்தவே கட்டியம் சாற்றியது.எமை
யாருமே புரிந்து கொள திருவுளம் கொளவில்லை
கொல்ல மட்டுமே,கருவிகளும்,காப்பகங்களும்,
அரவணைப்பாய்,அதன் சாரமேற்றி,
ஊற்றெடுக்கும்,உறவுகளையும்,யோசனை சாற்றியது,
அதன் பால் பயங்கரவாதிகளின் பாதமேற்றி எமை
பரம பதம் ஏக்கியது.

சற்று முன்வரை, சடுதியான
எமை மேலும் சவக்காடு
ஏற்றி சகம் ஏற்றும் சப்தமற்ற
முகாரி,முண்டுகட்டி
சகாயம் கொண்டது சர்வம் அதை சுகித்து
சுமை மீட்டியது,
இன்னமும் எத்தனை சிலுவை சுமப்பது?
அத்தனையையும் யுகமாய் சுமக்க ஆதங்கம்
தங்க ஆற்றும் அத்துணை உறவுகள்.

போர்க்கொடி சுமந்து புவி வலம் வந்து,
அவலங்களின் அத்துணை வலியையும்,
வையகம் முன் வலிமையாய் வைத்து,
வைரமாய்,முகத்தின் முகவரி கேட்டு,
நீதிக்காய்,நிரந்தர தீர்விற்காய்,நிம்மதிக்காய்,
நீர்ப்பயமற்றதோர் நியாயம் கேட்டதும்,

அத்தனையும் இங்கு வலி இழந்து போகவா?
இத்தனை அறம் ஆதங்கமாய் விதந்தது?
இரும்பொறை ஒத்த மறவர்கள் அங்கு,
வரும் பகை ஒழித்து தரும் எங்கள் நிலம் பூக்க,
சத்தியமாய் ஓர் சதுரங்கம் நகர்த்தி சாத்தியமாய்
எம் தமிழீழம் சமைப்பார். உறுதியின் உயரமது.
உயரப் பவனி பவ்வியம் பகர்,பாரில்.

புதன், 22 ஏப்ரல், 2009

மானிடத்தை மதிப்போனே!


எல்லைகள் நீண்டிருக்கும்,எங்களக
தொல்லைகள் போல்!
உலகத்தாள்வாரின் உள்ளமுமா?
கொண்டிருக்கும்
கொலைஞர் கரம் பற்றி,
கொள்ள நீதி கேட்டிருக்கும்,கொலுவிழந்து
தள்ளாமை,தாங்காமல்,தனித்திருக்கும்,நிலை காண
தமிழினம் யாக்கும் நீதி வலுவிழந்து,
தரணியற்றுப் போவதற்கா?,பாரது
வழி வகுக்கும்.

வெல்ல வழி சகமிருக்கும்,
வேதம் அது அகமிருக்கும்,
சொல் தவிர்த்த தகமையது,
வல்வழைப்பை,வழிமறிக்கும்,
வாகை சூட வகுத்திருக்கும்,
வல்லமை வயம் கொள்ள,
வையகமே வழியைத்திற,

எத்தனை உறவிழப்பில்,
உந்தன் அகம் விழிப்பெய்தும்?,
உரிமை,மனித அவலம்,சுதந்திரம்,அதன்
சூட்சுமம்,
இத்தனை பாதையையும் நீயும் கடந்தே
இந்த நிலை எய்தியுள்ளாய்,வரலாற்றை
நினைத்து எழுது.

வரிந்ததை,
எங்களை தடைத்ததை,நீ
உடைத்து விட்டால்,
மானிட உரிமையை,நீ மதிப்பதை
அங்கீகரித்தால்,எங்கள் பாதையை நீ
அங்கீகரித்தால்,

கரிப்பது அற்று,இதுவரை கரைத்ததை விதைத்து
உரிய நிலை கொள்வோம்,உண்மையை புரிந்த நீ
பரிந்துரை,பார் நீ
பகையில்,புதைந்ததெல்லாம்
புத்துயிர் எய்தும்,பூம்புனல் பாயும்,இத்தனை
வித்தகமும் வீரியம் பெற எம்மை புரிந்து கொள்.

இந்த மானிட அவலத்தின் தாற்பாரியத்தை,தமிழினம்
தாங்க முடியாத,இனியும் ஒட்ட முடியாத மார்க்கம் தரித்ததை.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

யார் ஆற்றுவார் தேசிய உணர்வை?

பூர்வீகக் குடியான தமிழீழத் தமிழினம் தொடர்ந்தும் புலம் பெயர் நாட்டில் இன்றுவரை நடாத்தும் மனிதாபிமான கவனயீர்ப்பு,ஊர்வலங்கள்,மற்றும் மனிதாபிமானத்தை வலியுறுத்தும்கொட்டொலிகள்,பதாகைகள்,ஆவணப்படங்கள்,காணொளிகளில் இருந்து மீளாக்கம் செய்யப்பட்ட பிரதி ஒளிப்படங்கள்,இன்ன பிற அத்தாட்சிகள்,இணையங்களினூடான கள நிலைகள்,இவையனைத்தும் எமது இனம் அங்கு அனுதினமும் பயங்கரவாதிகளான மகிந்த பேரினவாதி,சிங்கள அரக்கர் கூட்டம் எமது மண்ணில் நடத்தும் அதி தீவிர இன அழிப்பை,கொத்துக் கொத்தாக எம் உறவுகளை,சொந்தங்களை,எம் இரத்த பந்தங்களை கொன்று குவிக்கின்றதை சர்வத்திற்கு வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர்..

இத்தனை இன அழிப்பின் சாரங்களை சந்தேகத்திற்கு இடமின்றி சர்வமாக்கியுள்ளோம்.இதன் உண்மைத் தன்மைகளை இதே சர்வதேசம் புரியாமல் இல்லை,அங்கு நடக்கும் ஒவ்வொரு ஆதாரமான இன அழிப்பின் சாரம் தினம் இவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்களின் உத்தியோக பூர்வமான தூதரகங்கள் மூலமும் அதிகாரபூர்வமாக, ஆழமாக அறிந்தே வைத்துள்ளனர்.ஆயினும் இவர்களின் வாய்மூல அறிக்கை இலங்கை அரசை எந்த ரீதியிலும் அடிபணிய வைக்கமுடியவில்லை. இதன் காரணத்தை உற்று நோக்கினால் அவை பின் வருமாறு அணி வகுத்து நிற்கின்றன.

1.இலங்கையில் நடக்கும் இன அழிப்பை இவ் சர்வதேச ஆதிமுதல் அலகலகாக அறிந்தே வைத்திருந்தாலும்,நமது விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாத முலாம் பூசி தெளிவாக்கி தம் நிலையாக்கி தேக்கி வைத்திருப்பதனால்,

2. இலங்கையில் தினம்,தினம் இறந்து போவது அப்பாவிமக்களென்பதும் அரக்கத்தனமாக பயங்கரவாத சிங்கள அரசிற்கு தாங்கள் தாரளமாகவே சகல கருவிகள் உட்பட நிதி,இராணுவ ஒத்துழைப்பு,வட்டியில்லாக் கடன் இறக்குமதி பொருட்களிற்கான வரி விலக்கு இப்படியான தன்னாலான சகல வளங்களையும் இனவாத பயங்கரவாதி சிங்களவன் மகிந்தாவிற்கு தன் எதிர்கால ஆளுமையை இந்த சிறீலங்காவில் தாராளமாகவே எதிர்பார்த்து,
உலகில் பயங்கரவாதத்தை முற்று முழுதாக அழிப்பதான உலக ஓழுங்கை மையப்படுத்தி,இது சார் உதவிகளை கொடுத்துவிட்டதை இன அழிப்பு புத்த இனம் இன்று போர் என்ற போர்வையில் தமிழினத்தை கருவறுப்பதை எந்த முகம் கொண்டு இலங்கை அரசை அழுத்தம் கொடுத்து இந்த அவலத்தை தடுப்பது?இவர்கள்எதைக்காரணம்கூறிஇலங்கைஅரசைவற்புறுத்த,இனவாதியோநான்பயங்கரவாதிகளைத்தான்இன்றுஅழித்துக்கொள்கின்றேன்,பொதுமக்கள் யாரும் காயமடையவோ,இறக்கவோ,அதாவது கொல்லப்படவோ இல்லை என்று மறுதலிப்பதை,இவர்களும் வாய்மூடி கைகட்டி மெளனமாகவே ஏற்றுக் கொண்டு,எதுவும் செய்ய முடியாத கையாலாகத் தன்மையை கக்கவோ,முழுங்கவோ முடியாமல் உள்ளனர்.

3.புலம் பெயர் நாடுகளில் புயலாய் மையம் கொண்டுள்ள போராட்டத்தை புறந்தள்ள முடியாத இக்கட்டான நிலையில் உள்ளனர் என்பது ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கங்களின் தற்போதைய நிலை உள்ளது என்றால் மிகையாகாது.

4.எனவே எப்படியாவது போர் நிறுத்தத்தை வலியுறுத்த முனையும் போது அங்கே ஆசியப் பிராந்திய வல்லரசாக யார் உள்ளாகப் போகின்றார்கள் என்ற பனிப் போராட்டத்தில் இந்தியா,சீனா இவற்றின் போட்டிப் பந்தயத்தில் இலங்கையை கையாள முழு உரிமையையும் இந்தியா முந்திக்கொண்டு,இனவாத பயங்கரவாதிக்கு தன்னுடைய பயங்கரவாத முகத்தை புதைத்து இன்று ஈழத்தில் இந்த அநியாயப் போரை முன் நகர்த்தும் அல்லது முழுமையாக நடத்திக் கொண்டுள்ளதை இந்த சர்வதேசமும் நன்கறியும்.ஏலவே இந்தியாவின் நல்லெண்ணங்களையும் இன்று அதனுடனான ராஜரீதியாலான உ(ள)றவுப் பேணல்களையும் எந்த ரீதியிலும் புறந்தள்ள முடியாத யதார்த்தத்தை தொடர்ந்தும் வேணவே சர்வதேசம் முனைப்புக்காட்டும் என்பது உண்மையாகும்.

5.அதே நேரம் சர்வதேசத்தில் புலம் பெயர் வாழ் ஈழ உறவுகள் இன்று லண்டன்,கனடா நோர்வே,டென்மார்க் போன்ற நாடுகளில் அபேட்சக உறுப்பினர்களை தேர்வுசெய்யும் வல்லமை உள்ளவர்களாக உள்ளதனால் அவர்களின் உணர்வுகளை புறந்தள்ள முடியாத யதார்த்தத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய தேர்தல் தேவைகளும் உள்ளது,இது இவர்களின் வாழ்வாதரப் பிரச்சனை ஒரு வகையில் கெளரவப்பிரச்சனையாக இவர்கள் மத்தியில் விசுவரூபம் எடுத்துள்ளதனால் இந்த சீமைச்சீமான்கள் எப்படியாவது எமத்தான இந்த ஆளுமையான பிரச்சனையில் ஆழமாக முனைப்பு காட்டவே முனைவர்.

6.ஆயின் எந்த ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கையை கைக் கொள்ளப்போகின்றார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பானதே,இந்த இடத்தில் மேலும் இவர்கள் கூர்மையாக கவனத்தில் கொண்ட சாரம் யாதெனில் புலம் பெயர் மக்கள் தற்போது தமது தேசியக் கொடியை தாராளமாகவே களம் கொள்ளச்செய்துள்ளனர் இந்த நிலையை ஐரோப்பிய ஒன்றியம்எக்காரணத்தைக்கொண்டும் தடை செய்யமுனையவில்லை,கனடா வாழ் ஈக இனத்தமிழர்களின் இடை விடாத போராட்டத்தின் தன்மையால் இயல்பாகவே விழைந்த ஈழம.தேசியத் தலையை,சுயநிர்ணயம் போன்ற முக்கியமான கொள்கைகளை இந்த நேரத்தில் முன் வைத்து வீதியில் இறங்கியதும்,அதை கனடரசாங்கம் அனுமதித்த்தும் இதனால் இன்னமும் புலத்தில் தேசியக்கொடியும் ,தமிழீழத் தலைமையின் ஒளிப்படமும் இன்று தங்கு தடையின்றி உலக வலம் வருவது எமது போராட்டத்தின் முதல் வெற்றியாகும்.இரண்டாவதாக தமிழீழத் தலைமையை புலம் வாழ் தமிழர்கள் எவ்வளவு வலிதாக,ஆழமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது இந்த ஐரோப்பிய,அமெரிக்க நாட்டினர்க்கு எமது தமிழ் உணர்வாளர்கள் முகத்தில் அறைந்தே வலிமையாக கூறியுள்ளதை இந்த நாடுகளும் மென்மையாகவே ஏற்றுள்ளனர் என்பது யதார்த்தமாகும்.இந்த அங்கீகரிப்பின் மூலம் நாம் ஓரளவு வெற்றி கொண்டுள்ளோம் என்பது உண்மையே.இவ்வளவையும் இவர்கள் தமதான கருத்தில் கொண்டே அடுத்த நகர்விற்கு ஏகுவார்கள்.

7.இனி இந்தியாவை நோக்கினால் அங்கு ஈழப்பிரச்சனை வலிதாகவே மக்களகம் பற்றியுள்ளதென்பது மிகத் தெளிவானது.தற்போது ஆட்சிக் கட்டிலில் கொலுவிருக்கும் இத்தாலி சோனியாவின் அதிகாரம் இனி ரசமிழந்து,கொதிப்புநிலை குன்றி வலுவாழக்கும் அறிகுறியே ஆங்கு ஆழமாக காலூன்றியுள்து. இந்த நிலை மே மாதம் நடைபெறும் தேர்தலின் முடிவுகளின்சாரம் வலிமையாகவே ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தும் ஆயின் அது எவ்வளவு வலிமையாக எங்களது போராட்டத்தின் பால் பணியாற்றும் என்பதை இப்போது கூறமுடியாதுவிட்டாலும் தமிழர் சார்பான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும் அதில் மாற்றெண்ணத்திற்கு மகிமையில்லை.அதனால்தான் இந்த ஏது நிலையை மையப்படுத்தி இந்தியத் தேர்தல் முடிவுறுதலிற்கு முன் ஈழப்போராட்டத்தை முடிவிற்குள் கொண்டு வரபடுபாதகன்உலகப் பயங்கரவாதி மகிந்தா படுபிரயத்தனப்படுகின்றான்,அதன் ஒரு கட்டமாகவே தன்னுடைய வன்னி நோக்கிய பிரவேசத்தை தனது மற்ற தேவைகளைப் புறந்தள்ளி அங்குள்ள இன வெறியர்களிற்கு உற்சாகமூட்டி இன அழிப்பை துரிதப்படுத்தி விரைவில் மற்ற தளங்களையும் கைப்பற்ற, எந்த இழப்புக்ளையும் புறந்தள்ளி முன்னெடுக்க தன் ஆசிகளை வலிந்து ஊட்டி தன் களம் நகர்ந்தான்.

ஆயினும் எவரும் எதிர்பார்ப்பதைப்போல் வன்னியின் கள,தள நிலை இல்லை என்பது யதார்த்தமாகும் உதாரணத்திற்கு கையிலெடுத்தால் இன்றும் வன்னியில் புலிகளின் குரல் வலிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும் அதே வேளை ஈழநாதம் தன் நாதத்தை தினசரி வாசகர் வசமாக்கி இயங்கு தளத்தில் இயங்குகின்றது,மேலும் எமதான ஊகத்திற்கப்பாற்பட்டது தேசியத் தலைமை என்பதும் கருத்தில் கொள்ளவேண்டிய நிஜமாகும்.

ஆக இவ்வளவு யதார்த்தங்களையும் சர்வதேசம் எந்தளவிற்கு தன் கவனத்தில் கொள்ளும்,அதன் பிரகாரம் எப்படியான தன் சார் வினைத்திறன் ஆற்றும்?அல்லது எல்லாவற்றையும் புறந்தள்ளி இந்தியாவில் ஏற்படும் ஆட்சிமாற்றத்திற்கேற்ப தனது அரசியல் சதுரங்கக்காயை நகர்த்தும்.எனினும் நாம் தற்போது எடுத்துள்ள இந்த போராட்டங்களை எவ்வித தொய்வின்றி முன்னெடுப்பது முக்கியமாகும். நாம் எந்த தேசத்தின் உதவிகளையும் எமக்கு சார்பாக மாற்றவேண்டுமெனில் இப்படியானசத்தியவேள்விகளாலேயேமுடியும்,அதைவிட்டுஎந்தவிதமானவன்முறைகளையோ,மற்றும்ஆத்திரமூட்டும் செய்கைகளையோ முன் னெடுப்பதை அறவே தவிர்ப்பது சாலச் சிறந்ததாகும்.

உணர்ச்சி வயப்படுதலால் எம் படுதலம் பாழ்,தாழ் நிலையே கைக்கொள்ளும் என்பதை அகம் கொண்டு தொடர்ந்து தேசப்பணியை அகமாக முன்னெடுப்போம்,
இந்த கட்டுரையின் நோக்கத்தின் சாரப்படும் உண்மை எதுவெனில்,எமது புலப் போராட்டமும்,இந்தியாவில் ஏற்படும் அரசியல் மாற்றமும் நிச்சயமாக ஒரு ஒரு அங்கீகாரத்தை எமக்கு ஏற்படுத்தும் என்றே புலப்படுகின்றது.களம் எப்போதும் தன் வீரியப்பணியாற்றும்,அதற்கு நாமும் தொடர்ந்து தளம் பற்றும் ஆழம் புரிதலினூடாக நீட்சிப்படுத்த,புலத்தில் தொடர் போராட்டம் களம் ஆற்றவேண்டிய சீரியப்பணியை கரம் கொள்வோம்.காலம் எம் காயமாற்ற புலம் தன் பூர்வீக இனம் காக்க,தன் இனம் காக்க சுயமற்ற பங்களிப்பை பலப்படுத்துவோம்.

எங்குமே விடுதலைப் போராட்டங்கள் வெறுமை கொண்டதாக சரித்திரமோ பதிவோ இல்லை என்பது கண்கூடு,ஆக எங்கள் அறப் போர் புலத்தில் அறமாற்ற,களத்தில் எம் விடுதலைப் போரளிகள் ஊக்கமுற,வன்னி மக்கள் வளம் பெற நாங்கள்தான் முன் நின்று சாலப்பணியாற்ற வேண்டும் செய்வோமக.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற வலிதான செற்கொட்டை,தமிழீழத் தலைவன் பிரபாகரனே என்ற பிரம்மாஸ்த்திரத்தை

தமிழீழத் தேசியக் கொடி சுமந்து போர்க்கொடி தூக்குவோம்,துவட்சியின்றி தொடர்ந்து எம் இன மக்கள் துயர் நீக்க உயர் கொள்வோம்.
வெல்வோம் என்றே நிறை கொள்வோம்,
கொல்லும் பயங்கரவாதியை புறம் கொள்வோம்.
வல்லோன் பிரபா கரம் பற்றி
வனைய ஈழ மலர் கொள்வோம்.

சனி, 18 ஏப்ரல், 2009

இசைவாயா? இரப்பாயா?


உலகே உந்தன் கண்ணைத் திற,உன்,
உறங்கு நிலையாக்கும் மனச் சாட்சி திற,
போதும் நீ தரித்த அரிதாரம்.
போடு நீதியான மனுசாரம்.
மாற்று உந்தன் மறுப் புலத்தை,
மனக் கோலம் பூட்டி,
மனத்தைக் கொத்தி கருக்காதே,
மறைவாய் இனியும் நீ உதவாதே.

எங்கள் உறவெல்லாம் உலகான்றான்.
உந்தன் வலுவால் வதைக்கின்றான்,
நித்தம் எங்கள் உறவெல்லாம்,
செத்து மடியும் நிலை பாராய்.

கருவும்,
உருக்கொள்
சிசுவும்,பூவும்
இளம் பிஞ்சும்,இளமை பரவும் நெஞ்சும்,
தன் இனிய சந்ததி இயல்பாய் மருவும்
பாட்டன்,பூட்டியும்,

தேனினுமினிதாய் வாழ்வு காண,
தேமாங்கிசைக்கும் தேர்வெடுக்க,
வாழ்வின் வசந்தம் சிந்து பாட,
வானம் பாடியாகும் குமரிகளும்,
குமரர்களும்,

பயிலும் பாடம் நோக்கி நின்ற,
பள்ளிக்கூட குழாம்களை,
பக்குவமான ஆசிரியர்களை,
அள்ளி,
ஆரியன் அழித்தே ஆக்குகின்றான்
அற்று இந்த இனம் அறவே ஈழம் நீங்க!

நோயில் மடியில் நோத்திருந்து மருவ
நோக்கும் மருத்துவமனை,
ஆன்ம பலத்தில் அவர் தேக்க ஆன
கோயில்,குளமெலாம்,
தொழுதே வாழ்வின் கடைநிலையை,
காத்திரமாய் அவர்கள் கடவுளென்றும்,
நாடிச் செல்லும் திருத்தலங்கள்,
அற்ற வயல் வெளி ஆர்ப்பெடுக்கும் ஆறு,குளம்
இன்ன பிற வாழ்வாதார வளமெலாம்,
குண்டு போட்டே கு(றி)ழி பறித்தான்,

ஆரியப் பயங்கரவாதி பய(ல)னழித்தான்.
எத்தனை உயிர்கள் அவலங்களால்,
அவயங்கள் இழந்து,
உறவுகள் இழந்து,
உற்ற துணை இழந்து,இழக்க
யாதுமற்ற உலகிழந்து எவன் துணைநாடுவார்?.

கிழக்கில் உதயமென்றும்,வடக்கில்
வசந்தமென்றும்,
வசமாய் வானப் புளுகேந்தி
ஆரியக்கூத்தை சீராக்கி இந்தியன் செயலாற்றும்
அவலப் போக்கை,
நாங்கள் தகர்ப்போம்

ஆயின் நீ ஆற்ற வேண்டியதெல்லாம்,
எங்கள் தேசியம்,
சுயநிர்ணயம்,
சூரியத் தலைமை,
இத்தனையையும் நீ அங்கீகரித்தால்,
அத்துணை போதும்.

அறமாற்ற இங்கே ஆயிரமாயிரமாய்,
வன்னியை மட்டுமென்ன?
வளமான ஈழத்தையே வையத்தில் ஆக்குவோம்
நிலமாக்கி அதை உலக நிகராக்குவோம்,
இயல்பான வாழ்வதை வசம் கொள்வோம்
செயல் வீரர் தகமை திசையோங்க.

சலிக்காமல் தீ முட்டிய என் தேசத்துறவே,


புனிதா,பரமா எவ்வித சுயநலமற்ற,
தேச யோகியே!தன் சுயமகற்றிய சுதேசியே!
உன் இணையற்ற இந்த யாகம்
ஜெயிக்குதோ? இல்லையோ?
யானறியேன்!

ஆயினும்,ஆதங்கம் எம் அகமாக!
நோற்ற எண்ணம் தேற்றவேண்டும் ஊற்றாக உறுக்கும்
மாற்றம் வேண்டும்,நாற்றெடுத்து,நீ
ஈத்த விதையின் வீச்சு விஸ்வரூபம் எடுத்தாள

தேசங்கள் அதை சர்வமாக்கி
இறப்பெய்து,இழக்கவேறின்றி வேகும் எம்
வன்னியின் வாழ்வு சிதைப்பகற்றி,சிறு ஆசுவசாமேனும்
கொள!

பயங்கரவாதியாம் மகிந்தாவின் வால் தொங்கி
வளம் சிதைக்கும் இந்தியனின் வர்ம முகம் விலக வேண்டி,
சலிக்காமல் தீ மூட்டிய
என் தேசத்துறவே,

உனதான சாத்வீகத்தின் சங்கதிகள்
வெறும் சந்ததி மட்டும் சாற்றாமல்
பெரும் கனதியான,
பாதிப்பொன்றை பதிவு செய்ய,
பாதகமற்ற நியமம் கொள்ள,

நீதி எப்போதும் நிலை தடுமாறாது,ஆயினும்
அது அசிரமாய் அகன்றகலாது,சாதிக்கும் ஆற்றல்
மேவ சாந்தமாய்,சலனமற்று மெளனம் காத்து
பெரும் நெருப்பெறிந்து உன் சந்தி வரும்,

அதுவரை!
சலனங்களையும்,சபலங்களையும்,வெறுப்புக்களையும்
உன் மனமொப்ப!
மாற்று ரூபம் தரித்து,மயம்கம் ஆக்க வரும்,
செய்திகளை,திரிப்பெடுத்து மாற்றங்களை ஊட்டவரும்,
மாய ஜாலம் கூட்டி வர கோலம் கொள்ளும்,

நிபந்தனைகள் நின் வாசல் வரும்,
நிந்தனைகள் சூட்டி உன் நிறைவில் ஊனம் சூட்டும்
இத்தனை முயல்வுகளும் ஊனம் வடிய பயங்கரவாதியாம்,,
மகிந்தாவின் எடுபிடி,நாய்க்கூட்டமொன்று,தங்களையும்
தமிழனென்று?

நாமம் பிறப்பில் மட்டுமே,என்ற தாக்கம்
தரித்த தரித்திரங்கள் எம் விடிவெள்ளியில் விழர்ந்த
கரும் புள்ளிகளின் கருமம் தாயக வேள்வியை தாக்கி தாங்கி,
தங்களையும் ரட்சகர்களாய் ரசம் சூழ உனை புணர்வார்,

புரியாத சங்கதியல்ல உனக்கு,
ஆயினும் சஞ்சலங்களின்,
வன்மம் சாற்றிய சாதூரியங்களை ராஜரீதியாய்,
ரணம் சுனைப்பாய் ராக லயத்தை லாவகமாய்
சிலாகிப்பாய்,
சிதிலங்களை சினமகற்றி சீராக்கும் உன் சிரம்
சுமந்த யாகம்,
உனைச்சுற்றி எப்போதும் உளம் கொளும்

இளையோர் உலகம் உனைத் தாங்க
உன்னதம் கொள்ளும் உன்
உன்னத நோக்கம் தரை கொள்ளும் சாக்காடு
சடுதி மாற்றமாக்க சார்ந்திருக்கும் எங்கள் தாகம்

உலகம் கொள்ளும் அடுத்த உலா ஒழுங்கமைப்பு
உலகத் தமிழர் எதிர்பார்ப்பு.
உவகையா?
இல்லை மீண்டும் உகர்ப்பா?
ஏதோ முடிவொன்று
முடி சூடும் நாள் வெகு தொலைவில்லை. உன்
நாதம் கோர் நாயம் நவிலும்,
சேதியும் தொலைவில்லை.

எவர் மனச்சாட்சி எதைச் சார்ந்து அறமாற்றும்?
விடை தெரியாக் கேள்வி மனம் கொள!
தடை தாண்டி வெற்றி கொள்வாய்.
தாகம் தீர்க்கும் தண்மை மொள்வாய்.

வியாழன், 16 ஏப்ரல், 2009

பயங்கரவாதியே நீ எந்த படுதலம் பரவ?


பார்வையிலே ஓர்மம் சுமந்து பேரழிவுப் பயங்கரவாதி,எந்த
போர்வையை சுமந்து போக்களம் ஏவுகின்றான்?
தேர்தலுடன் தோய்ந்திருக்கும் தோய்மனத்தில் தோதாக,
பார்தலம் பார்க்க கொடும் பாவிகளுடன் மோச நடை.
வேர்த்துப் போய் விடக்கூடாதென்ற வேதனையின்,
வெப்பியாரத்தை,
ஒப்பீட்டளவிலும் ஓம்பக்கூடாதென்ற,
கெப்பறையின் கொப்பறை கொதிநிலையின் கொடுமை.
கொஞ்சமும் விஞ்ச விடக் கைகூடும்.
கள நிலை கைமாறும்.

வெஞ்சமரில் வென்றதெல்லாம் வேகிப்பனிப் பைகளாகி,
மஞ்சம் தந்த மயக்க நிலை மங்களமாய் மங்கிவிடும்.
தஞ்சம் கொண்ட கோடரிக் கொம்புகளும் கொக்கரிக்கும்..
கோர்த்து முகை விடும் கோரமுகி எண்ணங்களை,
யாத்தவர் வென்றிடவா வன்னி நாம் வந்து நின்றோம்,?
யாத்தெடுக்க வெற்றி இன்னும் நாழிகையில் நம் வசமென
போர்வெறியை ஏற்றிடவே போர்வையுடன் இவன்.

தமிழர் தாம் சிந்திய குருதி வாசம் மொந்திடவே,
புத்தனிற்கு ஈந்து தந்த நரபலியால் சாந்திடவே,
தமிழரின் ரத்தமென்றால் தகமை கொஞ்சம் மேலாண்மை,
கொள்ளும் என்ற கொக்கரிப்பின் வக்கரிப்பின் வைரியமாய்,
பயங்கரவாதிகளான பரம்பரை சிங்களவனிற்கு வெறியூட்டி,
வேகம் கொள, கொன்று குவி எனும் யாகம் கொலுவரிக்க,
தாகத்துடன் தரை மிதித்தான்,
வன்னி மண்ணின் வலு குறைவாம்,
என்றெண்ணி ஏகாந்தம் கொள அவன் படை சார்ந்தான்.

வீசும் காற்று என்றுமே திசை பார்த்து,
ஓர்மமாய் வீசாது.
காசு பார்த்து கலகலக்கும் காற்றல்ல எம் தேசக்காற்று.
தீயாய்,துவம்சித்துய்த்து,
விழலின்றி வீச்சுப் பெறும்
பெறு பேறு எப்போது?

பார்த்திருக்க!
பெறும்,
வியூகம் விதிர் விதிர்க்க வீசப்போகும்
வீரியத்தின் விசை பார்த்து விசனத்திலும்,
நம்பிக்கையின் நகலாய் வன்னி நிலம்

இத்தனை இழப்புகளிலும் ஈழம் சமைக்க
ஈகத்துடன் இமயமாய் இறக்காத நம்பிக்கையில்
ஊனமான உடல்தான் ஆயினும்,
ஊனமில்லா உறுதியின் மொள்ளலுடன்.
வணங்காத வன்னி மண்ணின் வசமான
மைந்தர்கள்.வைரியே
அகம் கொள்.

திங்கள், 13 ஏப்ரல், 2009

புலத்தில் களம் கொள்ளும் காலக் கொள்வனவு



நான்எதை யாசிக்கின்றேனோ,அதை நீயும் சுவாசியென்று கூறினால், அல்லது வற்புறுத்தினால் அது அராஜகமாகும்,ஆனால் இன்று ஈழத்தில் ஊனப்படுத்தி,உதாசீனப்படுத்தி,படு கேவலமாக தமிழினத்தைபகடையாக்கி,படுவேசித்தனமாக்கும்சித்தசுத்திகரிப்பேநடக்கின்றது.இதுவேநடைமுறையான யதார்த்தமாகும் இந்த நிலை,இழி வலை என்றறுக்கப்படுகின்றதோ??அன்று வசப்படும் ஈழத்தின் சுவாசவாசம்.

ஆண்டாண்டு ஆண்ட,பின் அடிமைப்பட்டு,ஏறத்தாழ 350 வருட வதகளிப்பின் பிற்பாடு பாடு கரியாக்கி எம்மை பாதகன் சிங்களவனிடம் அடகு வைத்துப்போன பிரிட்டனின் பதவி சார் பதகளிப்பால் எம்மை சுமார் இல்லை சரியாக 61 வருடத்திற்கு முன் அடையாளமாக சாதூரியமாகஅடகுவைத்துஅமரராகிவிட்டஎமதுமுன்னையமூத்தசந்ததியைஎனதானவார்த்தையடலில்அழைத்தால்தொலைநோக்கற்ற,முட்டாள்கள்.அந்தமுகிழ்வுகளை இன்றைய இளைய சந்த்திகளிற்கும் அழியாத அவமானமாக்கிப்போன,இழவுநிலைசார்தந்த அன்றைய அரசியல்வாதிகளின்சரித்திரப்பிழைஇன்றுஅதன்அறுவடையை,இவ்வளவுஇழிவாக,இனமழிந்து,பாரியஇழப்பேற்று,வருங்காலசந்திகள்அழிந்து,ஊனமாகி,முடமாகி,மனநோயாளியாக்கி,மற்றெல்லாம் புலம் பெயர்ந்து,எத்தனை அறிவு ஜீவிகளை இந்த (இனவாதபேயரக்கர்களால்நாம்இழந்தோம்,மருத்துவர்கள்,பொறியியலாளர்கள்,சமூகசீர்திருத்தவாதிகள்,அறிவுயால்பெரியோர்கள்,அடுத்ததலைமுறையை ஆதார்சமாக அரவணைத்து செல்ல வேண்டியமூதறிஞர்கள்,இப்படிஎத்தனை,எத்தனையோநம்அறிவுச்செல்வங்கள்,அத்தனையையும்இழப்பதற்குமூலகாரணமேஅன்றைய,அறிவற்றஅல்ல,அல்ல,அறிவுசார்சுயநலவாதிகளின்,தன் நலப்பேறின் தீவினைப்பயன் இன்று வன்னிவரை நீண்டு,அடுத்த கணம் இன்னமும் எத்தனை நரபலியை இந்த இனவெறி ராஜபக்சாவின் இனவெறிக்கும்பல் தரப்பலி கொள்ளுமோஎன்று தளம்,களம்,புலம் வாழ் தமிழீழத் தமிழரகளின் நெஞ்சகத்தை கிலிக்கொள்ள வைத்த பெருமை அன்றையஅறிவிலிகளால்நாம்இன்றுஅனுபவிக்கும்,ஆற்றவெண்ணாக்கொடுமைகளின்தோற்றத்தின் தேற்றமாகும்

இத்தனைக்கும் முகம் கொடுக்கவேண்டியது எங்களது தலையாய கடமையாகும் ஏனெனில் நடந்தவைகளைதிரும்ப,திரும்பமீட்டு,எம்மைவருத்திக்கொள்வதில்யாதும்திருந்தப்போவதிலை,திரும்பவரப்போவதில்லை.

எரிவதை எடுத்தால் கொதிப்பது தணியும்,ஆதலால் நாம் ஆற்ற வேண்டிய தாயகக் கடமையைகளம்கொள்வோம்,தளம்வெல்வோம்,புலம்பெயர்ந்துவாழ்ந்தாலும்,களம்கொண்டுவாழ்ந்தாலும்தமிழரிற்கேஉரிய,சிறந்த,தார்மீக,பரம்பரை,பரம்பலாகஊறியகல்விச்செல்வம்,அதனூடான அரசியல் அறிவு,உலக ஒழுங்கை கையகப்படுத்தும் ஆளுமை,இன்னமும்இந்தபிரபஞ்சத்தில் மற்றநாடுகளின்சகலவிதமான,அதாவதுபொருண்மிய,கணணித்தொடராளுமை,கடல்,வான்,நீர்,நிலம் பூகோள தடவியல் அத்தனை,அத்தனை ஆற்றல் கொண்ட ஆற்றலாளர்கள் இப்போதும் தமிழீழத்தை நேசிக்கும் வல்லாண்மை ஆளுனர்கள் குறைவில்லாமல் எங்களிடையே போதியளவு உள்ளனர்

இத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல் எம் இனத்தை ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து மீட்டு நேயம் மிக்க ஈழத்தை தரணியாக்கும் அவன் ஆற்றலை நான் மேலே குறிப்பிட்ட தேச ஜீவிகளின் கரக் கொடுப்பால்,எம் புலவாழ் மக்களின் அகக் கொடையால் நேரடியாக குறிப்பிட்டால் மேலதிகமாக நிதிக்கொடை,நீதிக்கொடை,மேலும் ஆளுமைமிக்க வளக்கொடை,இத்தனையாலான பலக்கொடையை எம் தலைவனின் தளமாக்கினால்,அவன் களமாக்கினால்,ஈழம் வலம் வரும்.

இதைத்தான் தலைவன் 2002ம் ஆண்டு போர் ஓய்வுகாலத்தில் மிகவும் ஆணித்தரமாக புலம் பெயர் வாழ் மக்களிடம் எதிர் பார்த்து விட்ட கோரிக்கை பின்வருமாறு அமைகின்றது. மிகவும் சுருக்கமாகவே குறிப்பிடுகின்றேன்,
வலிமையே வாழ்வு தரும்,இந்த அறிக்கை மூலம் அவர்கள் எதிர்பார்த்த்து,நிதி அதன் மூலமான கருவிக் கொள்வனவு,நாங்கள் கருமம் ஆற்றவில்லை என்று நான் இங்கு குறை கூறவரவில்லை ஆயினும் சில கொள்வனவுக் கப்பல்கள் இந்திய இராணுவத்தின் உதவிமூலம் எம் தாயகம் நோக்கி வந்தபோது அழிப்புக்குள்ளானது,யாவரும் அறிந்த விடயம் என்றே கருதுகின்றேன்
ஆனால் அந்த இழப்பை ஈடுசெய்ய மேலதிகமான கொள்வனவுகளை ஆதர்சமாக கருமம் ஆற்றவில்லையென்பது மிகத் தெளிவானது,அஃதின்றி இந்த தேசியக்கடமையை ஆற்றி இருந்தால் இன்று எம் தேசிய விடுதலை வீர்ர்களிடம் பல் குழல் எறிகணை முதற்கொண்டு,சாம்வகையிலான ஏவுகணைகள் அவன் வசமாக்கியிருந்தால் இன்று வன்னி இந்த வன்முகம் கண்டிரா>இல்லையென்று மறுதலிக்கமுடியாது.

2002ல் ஏ9பாதை திறப்புவிழாவுடன் மாவீரக்கனவுகளை பலர் கைகழுவி விட்டு இலங்கைக்கு ஆனந்தக்கூத்தாடவும்,தம் தற்போதைய வாழ்நிலையை ஊரில் பறை சாற்றவே பலர் பாவித்தார்கள் என்றால் அது மிகையாகாது,அதற்காக எல்லோரையும் குறை கூறமுடியாது,ஆயினும் இது நிதர்சனம்,இந்த நேரத்தில்தான் தலைவனில் அந்த ஆதார்ச எதிர்பார்ப்பை அகமாக்கியிருந்தால்?சரி இப்போதை புல நிலையை கருத்தில் எடுத்தால் அது பின்வரும் நிலைசாய்ந்து தலை கொள்கின்றது.

மேலும் தற்போதைய இந்த ஆர்ப்பாட்டபேரணிகளை ஆக்கிரமிப்பு ராணுவம் மாவிலாற்றில் முகங்கொள்ளும்போதே,புலம் பெயர் மக்கள் முகங் கொண்டிருந்தால் வன்னி மக்கள் இந்த ,தற்போதைய நிலையை அகங் கொண்டிரார்.சரி இப்போது மட்டும் எத்தனை சத விகித மக்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணிகளை அகங்கொள்கின்றார்கள்,

இங்கே நான் யாரையும் நோக வைப்பதான நிலையை அகங்கொள்ளவில்லைஆதங்கத்தின்எல்லைஎன்னை அங்கலாய்க்க,ஆதார்சம் எங்கள் அன்னைபூமி எம் முகம் நோக்க இதை எழுதுவது தவிர்க்கமுடியாத
தவமாக்குகின்றது,புலம் பெயர் வாழ் மக்களில் எத்தனை பேர் இப்படியான பேரணிகளில் தம்மை இழைத்துள்ளனர்,சத்தியமாக உங்கள் தார்மீக நெஞ்சகத்தை தொட்டு விடைசாற்றுங்கள்.

உதாரணமாக இங்கே நான் வைக்கும் சாரம் எனைமட்டுமில்லை அடிக்கடி இது போன்ற ஊர்வலங்கள்,ஆர்ப்பாட்ட பேரணியில் முகங் கொடுக்கும் தமிழீழத்தை நேசிக்கும்,யாசிக்கும் பலரில் வலம் வரும் கேள்வியாகும்.ரணமாகும் சாரம் இதுதான் இங்கே ஜேர்மனியில் வாழும் தமிழர்கள் 100பேர் என எடுத்தால் அதில் 20முதல் 22விகிதமக்களே பங்காற்றுகின்றார்கள் என்பது சத்தியமான உண்மை,இதுவே கடைசி 65விகிதமக்கள் பங்காற்றியிர்ப்பார்களானால் தமிழீழம் எப்போதே எம் வசமாகியிருக்கும்.இதையே பூமிப்பரப்பொங்கும் பரந்து வாழும் புலம் பெயர்சார் தமிழர் வினையாற்றியிருந்தால்?இப்போதாவது செய்வார்களா>?


என்னக வேண்டுகோள் இப்படியாக முகங்கொள்கின்றது.தற்போது உலகப்பரப்பெங்கும்எம் இளையோர்களால் முன்னெடுக்ப்படும் தற்போதைய பேரணிகள்,உண்ணாநிலைப்போராட்டங்களை,கவனயீர்ப்புப்போராட்டங்களை,தார்மீகமாக,நெஞ்சகத்தை நிலை நிறுத்தி அவர்களின் இந்த ஆத்மார்த்மான செயல்பாட்டிற்கு உற்சாகம் ஊட்டி,உறுதுணையாகி,இயல்பான பங்களிப்பை அந்த களத்தில் ஆற்றுங்கள்,வீட்டிற்குள் முடங்கி குற்றம் குறை கூறி உங்களை நீங்களே தரம் குறைத்து,அவர் அகம் நோக காரியமாற்றாதீர்கள் என்று தாழ்மையாக,உரிமையுடன்,உவகையாக இந்த ஆக்கம் மூலம் கேட்டுக்கொள்கின்றேன்,அதுமட்டுமல்ல இந்த ஊர்வலங்கள் நடக்கும் இடங்களில்,உண்ணாநோன்பாற்றும் தளங்களில் உற்ற உறுதுணையாகி பங்கெடுங்கள்.எங்கெங்குஇந்த நிலைப்பாடாற்றுகின்றார்களோ,அங்கு உங்கள் தரிசனங்களைஉளநிறைவோடுசெயலாற்றுங்கள்,தயவுசெய்து,பார்வையாளராக எப்போதும் ஆற்றும் இந்த வரலாற்றுத் தவறுகளை களைந்து வலம் வர இப்போதே களம் நோக்கி உங்கள் அடுத்தகட்ட நகர்வு அசையட்டும்.இதன் அறுவடை எமக்கு சாதகமான பல நல் வினையை நம் வசமாக்கும்.

ஆக,தற்போதைய நில,உள ஆக்கிரமிப்பு இனவாதத்தை வேரறுத்து,எம் தலைமையை வலுப்படுத்தி,எம் தாயக காப்பாளர்களை,உள,வளப்படுத்த புலம் வாழ் தமிழர்களால் இன்னமும் வீச்சாக்கி தாயகம் நோக்கிய பணியை தாராளமாக தாமதமின்றி முன்னெடுப்போம்,யாரோ சமீபத்தில் கூறியது போல எம் கஞ்சி எம் கையில் நாம் யாருக்கஞ்சி வாழவேண்டும்.இது எப்போது சாத்தியமென்றால் எம் நாடு எம் வசமாகும்போதே.அதாவது எம் ஈழம் வசப்படவேண்டுமானால் புலம் வாழ் தமிழர்களின் பலம் பரணியெங்கும் வலமாகி களத்தை பலப்படுத்த விழையும் வினைசார் வினை அது தமிழீழமாக மலர!

இனியும் தூங்கினால் ஒரே தீத் தூக்கம்தான்,இப்ப இல்லாத விழிப்பு இகத்தில் தமிழன் என்ற இனம் இலங்கையில் இருந்ததான வரலாறே ,இல்லையென்ற இழி நிலைதான். வருங்காலசந்ததிகள் வரலாற்றில்தான் படித்து வசப்படவேண்டிய பாழ் நிலைதான் கூடும்,எமக்கு முந்திய சந்த்திகள் செய்த அதே வரலாற்றுப்பிழையை நாமும் விட்டு, எமதான வருங்காலச் சந்ததிக்கு நாம் ஆற்றிய தேசச் சேவை எது?எனபதான கேள்விக்கு எப்படியான விடையை முன்வைக்கப்போகின்றோம். அந்த இழிநிலையினையகற்ற ஆளுமையான எம் அகம்சார் நல் வினையாற்ற இன்றே,இப்போதே,உடனடியான நல்வினையாற்ற ஒற்றுமையுடன் எங்கள் கரங்களை தேசம் நோக்கி யாகமாற்ற வெற்று உறுதி கொள்ளாமல் செயல் வீரனின் அடி அணியவோம்,புலத்திலும் புலியாவோம்.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

அர்த்மற்ற போர் நிறுத்தம் ஓர் ஆய்வு


இன்று இனவாத அரசு போர் ஓய்வை 48மணித்தியாலம்முன்நிறுத்தியதன்சாரம்,அதைதெளிவாகவே கூறியுள்ளதை நோக்கினால் அதில் கைகூடும் தன் நலம் அங்கே முன் நிலைப்படுத்தியதைதெளிவாகவேகாணலாம்.இதில் ஒன்றும் இனவாதஅரசுமறைப்பெதையும்செய்யவில்லைதன்நிலையில்தன்தனியரசுசார்புத்தாண்டுநோக்கியதான,தன்ஆக்கிரமிப்புஇராணுவத்திற்கு ஓய்வு கொடுக்கவேண்டியதன் ஆளுமையை முன் நிலைப்படுத்தி மீண்டும் சர்வதேசத்திற்கு காது குத்தி கயமை புரிகின்றது.

யதார்த்தம்என்னவென்றால்புத்தாண்டுவிடுமுறையென்றும்,தன்இனமக்களின் கேளிக்கையை விமர்சையாக தினவெடுக்கவிட்டு,வடபகுதி மக்களையும் வில்லங்கமாக,(ஒட்டுக்குழுக்களின் உதவியுடன்)தனது சிங்களப்புத்தாண்டை கொண்டாட வற்புறுத்துவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதில் உண்மைத்தன்மையை மறுதலிப்பின்றி ஏறுறுக்கொள்ள கடந்தகால பல நிகழ்வுகள் கட்டியம்கூறிநிற்கின்றன,கிளிநொச்சியைஇராணுவம்வல்வளைப்பின்மூலம்தன்னகப்படுத்தியதையும்,வன்னியைவிட்டுபொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறஅனுமதிக்குமாறு வழமைபோல் ஒட்டுக்குழுக்களின் வல்லாண்மையுடன் மக்களை வலியுறுத்தி,இராணுவ மயமானபயத்தைஏற்படுத்தி,ஒருபோலித்தனமானஊர்வலத்தைநடத்திதன்விசுவாசத்தைமீண்டும்ஒருமுறைஇந்தஒட்டுக்கழுகுகள்ஒப்பேற்றிக்கொண்டுதன்நிலையைநிலைப்படுத்திக்கொண்டது.

இவை கடந்தகால யதார்த்தங்கள்,ஆனால் தற்போதையஇந்த48மணித்தியால போர்நிறுத்தம்,இராணுவம்தன்னைஆசுவாசப்படுத்தி,தன்பாரியஇழப்புக்களை,மறைத்து இராணுவ தேவையை இட்டு நிரப்ப தனக்கு தேவைப்படும் இந்த நேர இடைவெளியை பயன்படுத்துகின்றது,அஃதின்றிதான்எந்தஇழப்புக்களும்தனதானபடைக்குஇல்லையென்றால்இரசாயன,விஷக்குண்டுகளைபயன்படுத்ததேவையேஇருந்திருக்காது,இதுகளயதார்த்தம்.இதன்மூலம்விடுதலைப்புலிகளிற்குபாரியசேதம்என்றதனதானபிரச்சாரம்மலினப்படுத்தப்பட்டுள்ளது,அதாவது தானே தனக்கு தன் தலையில் மண் அள்ளிப்போட்டுள்ளது,இதன் சாரம் யாதென நோக்கினால் தனதான ஊடகபிரசாரங்கள்மூலம் புலம் பெயர் மக்களின்உளவுரணை சிதைப்பதையே மையப்படுத்தி வலங்கொள்கின்றது.

இதன் சாரம்மிகவும்தெளிவானதுஅதாவதுகளத்தில்போரைபலப்படுத்துவதில் மட்டுமல்ல, புலத்தில் சர்வதேசம் நோக்கிய பிரச்சாரங்களைமுன்னெடுப்பது வரை தமிழர்களாகிய புலம்,பலம் தாங்கிய புலம் வாழ் மக்களாகிய எங்கள் கைகளிலே உள்ளதென்பது ஒன்றும் பரமரகசியம்இல்லை,ஆகஅடிப்படைஇந்தஅம்புவீச்சுஎங்களைநோக்கியேகுறிகொள்ளப்படுத்ப்படுகின்றது,இன்றையநேயர்அவர்ஒருமருத்துவர்என்பதுமுக்கியமாககவனத்தில்கொள்ளப்படவேண்டியது அவசிமாகின்றது,அவர் இன்று வானொலியில் தனதான பார்வையை பகிரும் போது குறிப்பிட்டமுக்கியவிடயம்கீழே.அதற்குமுன்இந்தஇடுகையைநான்கையில்கரம்கோர்க்க,இந்தமருத்துவரின்நியாயமானவாதம்,அத்துடன்நான்நெருடல்என்றஇணையத்தளத்தில்பார்த்தசிலஒளிப்படங்களும்,அதன் சார்பாக ஒளிப்படநிபுணர்கள் முன் வைத்த ஆதாரங்களும் என் ஆக்கத்திற்கு வலு சேர்க்க,இதோ இன்று மருத்துவர் தந்த சிறு ஆனால் ஆளுமைமிக்க ஆதாரம்,

இறந்தஉடலங்களைஎந்தஒருமருத்துவராலும்உடனேஅடையாளப்படுத்தமுடியும்,அது இறந்து எவ்வளவுகாலம்என்பதையும்,அதுஒளிப்படமாகஇருந்தாலும்கூட,

இராணுவம் களத்தில்ஏற்கெனவேவீரமரணம்அடைந்தமாவீர்ர்களின்,சிலஉடலங்களையும்,பொது மக்களின் பல உடலங்களையும் ஒளிப்படமாக்கி தனதான வால் பிடி ஊடகங்களிலும் தன் வினைசார் இணையங்களிலும் வெளியிட்டு தான் ஏதோ மகத்தான வெற்றியீட்டியுள்ளதாக ஒரு மாயப்பிரம்மையை தனது சிங்கள மொட்டையர்களிற்கும்,தனது ஒட்டக்குழு மூலம் தங்களையும்தமிழ்ஊடகங்கள்எனதம்பட்டம்அடிக்கும்வால்பிடிஊடகம்மூலம்பரப்புரைத்துதம்மைதாமேஏமாற்றியதோடுமட்டுமில்லாமல்,தனதான மக்களையும் ஏமாற்றி,,,,இது ஒன்றும் எங்களிற்கு தேவையற்ற சமாச்சாரங்கள் என நாம் ஒதுக்கமுடியாது,காரணமே இங்குதான் மையம் கொள்கின்றது,

எமது விடுதலைசார் சில மக்கள் இந்த ஊடகங்களை பார்த்து மனச்சோர்வடைவதை,இன்றும் நான் எனதான சொந்த அனுபவமாக காண்கின்றேன்.உண்மையில் கள யதார்த்தம் யாரும், ஏன் நானும்கூடத்தான் எந்த ஒரு ஊகங்களயும் வைத்து கட்டுரை எழுதமுடியாது.கள யதார்த்ம் அதை கையாளும்,அல்லது அங்கு வதியும் வன்னி மக்கள் அவர்கள் கூட சரியானகளநிலைகளை கூறுவார்களோ யான் அறியேன்.

எங்கள் ஆக்கங்கள் எமை ஆசுவாசப்படுத்த யாரும் கையாளுவதில்லை,பல
ஊடகவியலாளர்கள் தமது ஊகங்களையும் மேலும் தமதான களநிலைத்தொடர்பான சில ஊடகர்களின்தொடர்புகளையும்முறையாககையாண்டுதங்களதுசிறப்பான,ஆதாரமான,யதார்த்தமானசெய்திகளைதருகின்றார்கள்.ஆனால்தற்போதையகளநிலையையாரும்விதந்துரைக்கமுடியாது,எனபதுதான் உண்மை.ஆயினும் களத்தில் இராணுவம் எக்கச்சக்கமான பேரிழப்பை சந்தித்துள்ளது என்பது நடைமுறை உண்மை,இல்லையெனில் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏற்கெனவே வன்னி முழுவதையும் கைப்பற்றியிருக்கும்.அத்துடன் பேரினவாதி தனியனாக புலிகளுடன் மோதி வெற்றி பெறுவதென்பது என்றுமே பகல் கனவாத்தான் இருக்கும்.இப்போது மட்டுமென்னஇராணுவம்சீனா,இந்தியா,பாகிஸ்த்தான்,அமெரிக்கா,பங்களாதேசம்,ஈரான்,இன்னமும் பல நாடுகளின் கருவிகளுடனும்,இந்தியாவின்நேரடியானபலவகையானஇயங்குதளத்துடன் மோதியும் தனது எந்த குறிக்கோளையும் அடையமுடியாமல் பொது மக்களை நரபலியெடுத்து,சோனியாவிற்கு ஓமம் வளர்த்து யாகமாக்குகின்றது.இந்த வேள்வியின் மூலம் இந்தியாவோ,மகிந்தாவோ உற்ற பலன் அடையப்போவதில்லை என்பதை காலம் விரைவின் களமாக்கும் என்பது உறுதி.

அதாவது இந்த வல் வளைப்பு மூலம் இலங்கை ராணுவம் கண்டதெல்லாம் மனித அவலங்களும் தன் இராணுவ இழப்புக்களும்,இலங்கையில் பொருளாதார இழப்புக்களும்,மறு புறமாக பார்த்தால் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை வல் வளைப்பச் செய்து சிறுவர்,பெரியோர்,பிஞ்சு,பெண்கள்,இப்படியாக எங்கள் இன மக்களை பேரழிவிற்கு உள்ளாக்கி,பேரவலம் தந்தும்,பெருவாரியான மக்களை பல் குழல் எறிகணைமூலம் படுகொலை செய்து,தன் வலயத்திற்குள் மக்களை படுகாயத்திற்கு உள்ளாக்கி தனது வலையத்திற்குள் எடுத்ததன் மூலம் பெண்களை வல்லுறவுகளிற்கு உட்படுத்தி,ஆண்களை படுகொலை செய்து,பாரிய இனவழிப்பை செயததன் மூலம் தமிழரின் இன விருத்தியையும்,அவலப்படுத்தி பேர் அநியாயம் விளைத்துள்ளது.

இதில் முக்கியமாக புலிகளின் பல முனைத்தாக்குதல் மூலம் தன் 58,59,போன்ற போரிடும் சக்தியாக கருதப்பட்ட பல அணிகள் பாரிய இழப்புக்களை சந்தித்து போரிடும் ஆற்றலை அறவே இழந்து இன்று இரசாயன,விஷக்குண்டுகளை வீசி பேரழிவை மக்களிற்கு ஏற்படுத்தி தானும் அதில் மாண்டு,இன்று தன் நிலையை சீராக்க, புத்தாண்டிற்கான போர் நிறுத்தம் எனக் கூறி தன்னை அடுத் கட்ட இன அழிப்பிற்கு தயார் நிலைப்படுத்த இந்த கால கட்டத்தை பயன்படுத்தும் என்பதே கள நிலையாகும்.இந்த அர்த்தமற்ற போர் நிறுத்த அறிவிப்பிற்கு வழமைபோலவே புலிகள் தமதான எந்த எதிர் வினையையும் ஆற்றாமல் தங்களின் அடுத்தகட்ட நகர்வுகளிற்கு வழமை போலவே சீர்படுத்திமீண்டும்தற்பாதுகாப்பிற்கான தமது நிலைகளை நேர் செய்வார்கள் என்றே கருத இடமுள்ளது.ஆயினும் தொடரும்களநிலை விரைவில் பாரிய மாற்றத்தை தமிழீழப்புலிகள் சார்பான தளத்தை ஏற்படுத்தும் என்று தாராளமாகவே எதிர்பார்க்கலாம்.

கன்னியின் காதல் போல் காந்தளமாய் கவரட்டும்

எண்ணம் ஏற்புடையதாயின் சிந்தனைகள் ஓங்கட்டும்,
கன்னம் இடமால் கம்பீரமாய் கலக்கட்டும்,
சின்னம் சிறப்பிட சிந்தாமல் சிலிர்க்கட்டும்.
வன்மம் வதியாமல் வகுந்தெங்கும் வனையட்டும்.
மென்மையாய் வருடியே மிதமாகி மிளிரட்டும்.

வன்னியின் நிலைகூட வதிவதாய் வகிடட்டும்,
கன்னியின் காதல் போல் காந்தளமாய் கவரட்டும்,
கந்தகக் காற்றகன்று காதோரம் கவியட்டும்,
எந்தகத் தாய்நிலம் ஏந்திழையாய் ஏகட்டும்.
எத்திசையும் இசைவாக ஏகமாய் ஏற்றட்டும்

அகதி வாழ்வின் அசுமத்தங்கள் அனர்த்தமாய்,
சகதி வாழ்வது ,விகுதியின் விருத்தங்களாய்,
விதிவதி பாழாகி விம்மலது கருத்தங்கலாய்,
பதிவதி போலாகி பசுப்பகங்கள் ஒறுத்தல்களாய்,
கதியது சீழாகி கலையட்டும் கார் மேகங்களாய்.

தெளிர்வான நீரோடையாய்,தேகம் சூட்டும் தேமாங்கமாய்,
ஒளிர்வான ஊரோடையில் மிளிர்வான மிடுக்குடுத்தி,
தளிர்ப்பான தமிழ்போலே தளிர்வோடு தழுவுவோமே,
விளிர்ப்பான வியல்போடு விழுதெறிந்து விரிவோமே,

களிப்பான எண்ணம் ஐயா,காண்போமா வையம் தன்னில்.
நெளிப்பான நிலை இருக்கே,நெக்குருக்கி அகம் இருக்கே,
சுழி(ளி)ப்பான (சு)ஒட்டப்பனும்,சுகிப்பதற்காய், தன் சுகத்தை,
சுழல் மாற்றி விட்டானே சுட்டதுவே தமிழீழம்,
எட்டிடுமோ இந்த லயம் ஏறிடுமோ எங்கள் கொடி?

நெருப்பெறிந்து எதிரியவன் எங்களகம் வந்தாலும்,
விருப்பெறிந்து வந்தானா?வில்லங்கமாய் விழ(ழு)ப்புண் ஏந்த,
உருப்பெறிந்து,உயிர் விதையெறிந்து,உயிரான ஈழம் மீட்க,
கருக்கொண்ட கனல் மூசிப் புலிகள் களம் காக்க,
உறுப்பெறிந்து ஓடுவான்,உயிர் காக்க அவன் நாணுவான்,

தெரு காக்கும் நாய்கூட அவன் முன் அசுரனாகும்,
திருவாக இவனெங்கே? தினவெடுத்து தினமிருப்பான்,
திருநாளது உருவாக அருக்கொள்ளும் இவன் வாழ்வும்.
செழிப்பான செயல் விரித்து, விழி எறிந்து வியப்போமே,
வாளிப்பான வயல் அகன்று வகுந்தெடுப்பான் தமிழீழம்
ஆழியன் பெயர் பிரபாகரன் அதுவே எங்கள் பிரம்மாசுரம்
.

சனி, 11 ஏப்ரல், 2009

எமையே மீண்டும் நீ கொய்வாயா? கொல்வாயா?


பதை பதைத்து நெஞ்சம் பதறிக் குதற,
பகை அங்கே விஞ்சி பாழ் வினையாற்ற,
முகை இழந்து இங்கே முடமாகிப் போவோமா?
முதுகெலும்பு இறைந்து முகம் மாறிப் போவோமா?

இதைத்தான் இனவாதி பார்த்து நின்றான்.
இழைந்த உசாத்துணையும் இணைந்து நிறைந்தான்.
உழையும் உள்ளத்தை உதிரியாக்கி,
தழையும் தமிழுணர்வை தரவையாக்கி,
விழையும் வினையை விதைத்து நின்றான்.

இழவுகள் இறைத்து புதைத்து வைக்க,
இந்தியக் கைக்கூலியை இறக்கி வைத்தான்.
இதயம் புரியா இனவாதி கன்னடன்
அவனாய்கைகொடுக்க,
கயமைகள் களம் சார்ந்து புணர்ந்திருந்தான்,எங்கள்
உறவெலாம் உரமாய் புதைத்துளர்ந்தான்.

ஒவ்வொரு நொடியும் இழவு விழும்,எங்கள்
இனமழித்தே கணைகளெல்லாம் இறுதியாக்கும்,
சுய பரிதாபம் ஒப்பவா நாம் இங்கிருப்போம்?
சுயரூபம் விரித்து சுழலாவோம்,சுதந்திர
தீபம் ஏற்றவே தினவெடுப்போம்.

சர்வ மெங்கும் அணியானோம்,எங்கள்
சர்வாங்கங்களை அங்கே சதிராக்கினோம்
பூர்வ நிலம் தாங்கிய பூர்வீகக்குடிகள் அதை
புலமாக்கி,
புலரும் தமிழீழ தேசத் தேவையை அணியாக்கி,

நெடிய துயர் தாங்க முடியாது,நெடி துயர் மாளும்,
நிலை வேணி,
இன்றே,இப்போதே முறையாக்க!
தலை சாய்க்க வேண்டி சர்வமான துணை கோரி.

காரும்,
அரூப நிலைகாட்டி கழிக்காதே,அர்த்தமான
சொரூப ரூபம் தானாக்கி,.தமிழர்
உருவ நிலைதனை உருக்காமல் உயிர்
தருகத் தகமை நீ தாங்கவேண்டும்.
செய்வாயா?இல்லை எமையே மீண்டும் நீ
கொய்வாயா? கொல்வாயா?

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

படியும் நிலை சாரும்,ஒடியும் தளை யாவும்,


இனம் ஒன்று ஈழத்தில் ஈனமாகி போவதா?அன்றி
ஊனமாகி உழைவதா?இந்த தானத்தில்தான் தமிழர்
கானாகி கரையுதே தினம் தீயாலே எரியுதே.இதை
தானாகி உணராமல்,தக்க நிலை பேணாமல்,புலம்
வீணாகி உளர்வதா?இல்லை வீசும் தறைமாற்றி
வாழும் தரைமீதில் போர்க்கொடி ஏந்தி எம்
நீதி,நியாயம் நிர்ப்பந்திப்போம்,இதை
ஆளுமை கொள்
நிலையாய்,நிர்ப்பயமின்றி,நிமிர்வுடன் நிதம் சாருவோம்,
அங்கு இலையுதிர்வாய்,இனமங்கு இறைந்து,இறப்பதின்
தங்கு நிலை பாங்கின்,உண்மைநிலை உருக்கி பொங்கி
உளமாற்றும் உபாதை உரத்து கூறிஉற்ற வழி சாற்றுவோம்,இனவாத
இன அழிப்பை இகமறியக் கூறி இன்னா வழி யாசிப்போம்

தருக்கர் அங்கே தளமற்று வாழும் எம்
இருக்கைகளை பல்குழல் எறிகணைகளால் ஆன தம்சார்
கருவிகளால் கருக்கும் எங்கள் உறவின் நிலைசாற்றி,
ஊடுருவும் இந்தியனின் ஆளுமையை உரத்தியம்பி,
நாடுகொள் எந்தையரின் காலச்சுவடழிக்கும்,
பாடு பொருள் நிதம் உரத்தெடுத்து,உரிமைப்போர் தொடுத்து
புலத்தில் எம் போராட்டம் புனிதப்பணியாய் திறனெடுப்போம்

பூமிப்பந்தெங்கும் புனிதப்போராட்டம் புயலாக மையம் கொள,
ஆமியின் அட்டகாசங்கள் அலைஅலையாய் புலம் புணர,
சர்வதேசத்தின் சதி முகம் சந்தி,சந்தியாய் வெளிச்சம் சூட்ட,
சாரம்சம் மேவும் எம் சாவுக் களம் விபரமாற்ற,ஏற்றத் தாழ்வற்ற
களம் கொள்வோம்,ஏவுகணையாக்கும் எங்கள் தலம் ஏற்போம்.

புலம் கொண்ட அணியாலே புலமாகும் புலர் காண்போம்.
கலம் காணும் கதியாலே கதிர் வீசும் காலை நோற்போம்
வலம் ஏகும் எங்கள் வளத்தாலே வந்தனம் தனை நூற்போம்,
நிலம் யாவும் தங்கும் தளமான தகம் தாங்குவோம்.

போராட்டம் இங்கு புலத்தில் பலம் சேர்க்க,
விடியும் நாளெண்ணி நாம் வினையமாய் வினையாற்ற,
படியும் நிலை சாரும்,ஒடியும் தளை யாவும்,
கடியும் கணையாலே கடிதான தளை சாய்ப்போம்.
முடியும் முடிசூடி முத்தமிழ் அங்கு முனைவாகும்.

பூபாளம் இயங்க புன்னகைத் தேசமாய்

சிராய்ப்பு கொள உளம் கூடுமோ?
உராய்ப்பு கொண்ட களம் மீளுமோ?
வீராப்பு கொண்டே தளம் சூழவே,உன்
வாரய்ப்பாய் பலம் கூட்டுவாய்,அந்த
மராப்பாய் மனம் ஏகுமே,வளம்
கூராய்ப்பாய் குலவிக் கூவுமே.

வன்னியின் உறவு தினம் களச்சாவாய்,
அன்னியன் தரவு கனம் மனச் சாவாய்,புலம்
கன்னியாய் எண்ணி கண்ணீர் சாவாய்,உன்னி
குன்னிக் கூனி மனப் பாளம் வெடிக்கும்,வெந்து
மென்னி குறண்டு இனம் வரண்டு பலம் வெடிக்கும்.

விசக்குண்டு ஆங்கு வீசி விளரி இனம் சாக
மலக்குண்டு வீசி அன்று தோற்ற ஆரியம் இன்று
இலக்காய் எங்கள் இனம் மீதொரு இரசாயக்குண்டு
பரீட்சித்து பார்க்க தமிழர் வானரக் கூட்டம்தான்,
வரிகள் தந்த யதார்த்தம் இது.

வதைத்து இந்தியன் களமாக எங்களினத்தை
வாரி புதைத்து வகையாக தன் சூட்சுமத்தை சூசகமாய்
காரியமாக்க, தன் விஞ்ஞான வளமாக்க தமிழன் ஒத்திகை பாலம்.
எத்தனை உயிரை ஓரேயடியாக ஒதுக்கமுடியும் என்பதில்
அத்தனை லயிப்பு!

ஆக்கிரமிப்பின் வலி எமக்கு.
வலி மட்டும் என்றால் அது
வாகையான இருப்பெமக்கு,ஆனால்
அன்னைமண்ணில் அத்தனையும் பலியென்பதே
ஆதங்கமான கலி எமக்கு, ஆதாரமான புலிகளே
பலி என்பான் பாதக அரக்கர் இனம்.
பார் பதை,பதைத்து பலிக்கடாவாக
பாவியான இனம் அங்கு,பாதகர்களால்,
நரபலியான நாதியற்ற,பாதையற்ற பாவியர் தாம் எங்கும்.

பார் எங்கும் பரவிக் கிடக்கும் ஜனநாயக பாசறையே!
ஊர் பிரித்து,எம் உறவழித்து,விசவாய்வு விதந்தூட்டும்,இதயமற்றவர்களிற்காக,நீ
தாராளமாக தயவுகாட்டி ஏராளமாக எல்லாம் ஆ(ஏ)ற்றுகின்றாய்,எனில்
கார் ஆழமாக நாம் கருவி ஏந்துவதில் கருணையை எம்மில் நீ
பார் ஆக்கி பரிந்துரைக்கலாமா?

நாம் சுதந்தாரத்திற்காய் சுடு கருவி சூடும்
சுதந்திர, போராட்ட வீர்ர்களேயன்றி,பயங்கரவாதிகள் இல்லை.
எம் பாதை சமைத்து பாரில் பலமான பாலமமைக்க,
தோள் சுமக்கும் கருவிகளுடன்,தேசியக் கொடியுடனும்,
தேசம் சமைக்கும் எங்கள் தேசியத் தலைமையுடனும்.

தேகம் வீழ்ந்தாலும் சேதாரமாகாத தேசிய இனம்,
சூழசைத்து,,பாரம் சுமக்கும்,
புவனத்தில்!
பூபாளம் இயங்க புன்னகைத் தேசமாய்
பூமித் தளத்தில் பூங்காவியமாய் பூத்திருக்கும்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

விரிந்திருக்கும் பாதையெங்கும் விஷமிருக்கும்,


களம் கடந்த வன்முறை புலம் பெயர் நாட்டில்
தளம் திறந்து கொண்டதே,இதை மனம்
திறந்து ஏற்பதா?இல்லை,முளையிலேயே
உறந்தறுப்பதா?மாற்று வழி ஏது?ஆயின்
மார்க்கம் யாது?

யேர்மனியில் அராஜகம் கத்தியின் செருகலால்,
நுகம் கொண்டு,பிரான்சில்,லண்டனில்,
இன்று பூமிப்பந்தின் தொடக்கப் புள்ளியெனப்படும்,
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மையங்கொண்டதை,
அகம் எப்படி மையப்படுத்துவது?.

தளம் திறந்த தர்க்கர்க்கே தம் திறன் காட்டாமல்,
உளமுடைந்து,உணர்வடக்கி,சினம் செதுக்கி,சீற்றம்
ஆழப்புதைத்து, அருகி வந்த எம் மண்ணின் மைந்தர்களே,
பொறுத்தருள்க

பொருது களத்தில் மண் மைந்தர்கள் பொங்கி
உழுது, உருப்புடைத்து,உறையவைக்கும் ரணம்
சொடுக்க இங்கு ரசம் குன்றும் இந்த
ராட்சதர்களின் ரட்சகம்.சாரம்சயனிக்கும்.

புலம் பெயர் நாட்டில் எமதான
பலம் காட்டி எமை நாமே சுருக்காமல்,
இன்னமும் அகம் வேகம் கொள, அணியங்கள்
திண்மையாய் திறனாற்ற..உறுதி கொள்.

உளவுரணில் கைவைக்கும் இன்னோர் வகை
புலவுரண் இது,எமை பணியவைக்க இது ஒரு பாணி
களவுரணில் களம் காண முடியாதவர்களின் மனச்,
சிதைவின் மறுபக்கம்,

தோல்வி எங்கே புலத்திலும்,
தமைத் தழுவி, தகம் சுணைந்து, சுரம் குன்றி, யுக நகையாகி,
யுத்தம் களம் கழுவி,நழுவி, பழம் பாலாகி பணிந்திடும்
பாரில் ஈழநகை புரிந்திடும் என்பதான தகளிப்பு.

புலத்திலும், தமிழீழப் புலிக்கொடி புன்னகை பூச்சூடுவதை,
வலத்திலும், தன் ஆக்கிரமிப்பின் அடையாளம் புதைவதை,
கல(க்)கத்தில் ஊட்டி எம் களப்பணியை கரைப்பதில்,
நுகத்தில் எம் நுதனங்கள் நுகப்பதை,நீண்ட முடியாத,
இனவாதிகளின் இள(ழ)க்கமான இதயவலிகள் இவை.

போர்களத்தின் கோரமுகம் உலகாட்சி கொள்வதை,
தருக்கர்களின், சாரமுகம் சாட்சியாய் சர்வமாவதை,
அரக்கர்களின் அட்டூழியங்களின் அரக்கத்தனம்,
பூமித்தளத்தின் புலமெலாம் புணர்வதை,
அகம் கொள்ளமுடியாத ஆற்றாமையின் தாளுமை.

முகங்கொள்க
தமிழ் மணங் கொண்டவரே.
தளராதீர்,தகவும் முகம் கொள்வீர்,
உலாவரும் உறுதுணை கொள்வீர்.

விழ,விழ எழும் வீரியம் நுகம் கொள்க.
விழாத நகை கொள்ளும் முகம் கொள்க,
தளராத தலைவனின் தகம் கொள்க,தானைத்
தலைவனின் தர முயற்றும் தாகம் கொள்க.

இன்று, நீ ஏற்ற இகழ்ச்சியின்அனுபவம்,
உணர்வுள்ளம் கொண்ட தமிழீழத் தமிழர்களின்
உளவுரணின் இன்னுமோர் நீட்சி.
ஒன்றுமட்டும் உறுதி கொள்.
சுய இரக்கம் மட்டும் சுரக்காதே,சுகிக்காதே,
எவரும் எமக்கான அனுதாபம் ஆற்றவில்லையே
என்பதான ஆதங்கம் அரற்றாதே.அகட்டாதே..

விரிந்திருக்கும் பாதையெங்கும் விஷமிருக்கும்,
திரிந்திருக்கும் உறவிருக்கும்,
பரிந்திருக்கும்,எமைப் புரிந்திருக்கும்
பூபாளம் கூட பூப்படைந்திருக்கும்.ஆதலால்
ஏற்ற துறை தேர்ந்தெடுப்போம்,உற்ற
துணையாயிருப்போம்,

அற்ற உறவெல்லாம்
அடைத்து உரிதான உளம் வேணுவோம்.
விரிவான,பரிவான பகலவன் பாகம் சூடுவோம்.
தெரிவான ஈழ நகை சூட,உரிமையான திறன்
சுரப்போம்,உளவுரண் பேணி,
உரிமைப்போர் தினமெடுப்போம்,தீண்டாத,
பரிதி பணிமுடிப்போம்.

சனி, 4 ஏப்ரல், 2009

puthuvai

puthuvai

Thalai Nimirvu Part-2 (DVD Cliz) : Eelaman.net

Thalai Nimirvu Part-2 (DVD Cliz) : Eelaman.net

மறுகச் சினம் கொள்வான் மருக்கலைய மறத்தமிழன்


மக்களை கேடயங்களாக்கி மறமாற்றார்,அவர்
மானிட கவசமாகி மக்களை காத்து நிறைவார்.
மாமனித சுவாசமே, மகத்தான திறத்தாலே
மனித மன்றில் முடிசூடி மாவீரம் மலர்ப்போரே!

உருவாக்குவதை அருகாக்குவான் ஆக்கிரமிப்பு அந்நியன்
கருச்சிதைவாக்கி உளச் சிதைவை உருவாக்குவான்,முனைய
வெருகச் சிதை மூட்டி,வெங்களத்தில் சங்கறுத்து,
மறுகச் சினம் கொள்வான் மருக்கலைய மறத்தமிழன்,
ஒன்றிணைத்து, சிரம் கொள்,ஒழுங்கமைப்பான்
ஓங்கார போரொலிக்க தமிழர்,ஓளடதத் தலைவன்.
புனித வலயங்கள் புனையும்
கரிகாலச் சிற்பிகள்,பரி பாலனின் வித்தகர்கள்.

மரியும் மகிந்தாவே!
புரியும் உனக்கு ஆயினும்,
புத்த மத மற்ற பித்த புத்தி
வரிந்து கொண்டு வன்புணர்வு கொளும் உன்
வக்கிரப் புத்தி உளம் கொள உனை விடா?
எனில் அது ஆரிய அழிவுப் பத்தி.

மனிதாபிமானமென்றும்,மகிந்தாவின்,
மாபெரும் வெற்றியென்றும்,
மனிதப் புதைகுழி புதைத்து,
புனிதப் போரென்றும், மனித பேரவலம் விதைத்து,
புத்தனின் தத்துவப் புதல்வரென்று,புலமெலாம்
புலம்பும்,உன் பித்த புத்தி,

எந்த கள யதார்த்தங்களையும் வரையும்
ஊடகங்களையும்,அதன் சார் புத்தி ஜீவிகளையும்,
களையும்?,
உனதான வெந்தணல் புத்தி,
எந்த நிலை வரைய இறுகப் பூண்டிருந்தாயோ?
அந்த வலை அறுத்து, நிலை தறித்து,
வளம் கொள்வோம்,உனை பூண்டாக்கி,

உலகப் போர் பூண கிட்லர்க்கு ஓர் கோயபல்ஸ்,
இதே மார்க்கம் நாண உனக்கு ஓர் கோத்தபாயா?
அதே கிட்லரின் ஆதார்ச
சேனைக்கொரு பிறீட்றிட்ஸ் பவுலோஸ்
சேதாரம் கொள உனக்கு சரத்பொன்சேகா ஆக?
சரித்திரம் உளம் நீ கொண்டிருந்தால்
தரித்திரம் உன் வளம் கண்டிரா?

வரிசையாக உன் வாசலில் எந்த
சிங்கள சிப்பாயும்,ஏன்,
உன் வா(ச)ல் ந(ய)க்கும்
ஒட்டுக்குழுக்களும் கூட
வரிந்து உன் வளம் சேர்க்கார்,காண்பாய் நீ
எரித்து உன் நினைவை கனவாக்கும் கரிகாலன் பேரொளி
சரித்து, வரித்து ஈழ எல்லையாக்கி தமிழ் வாசல்
தெளிப்பார் வாகையாகி உன் வாசல் பிரிப்பார்.

இன்றைய வன்னி நிலை நாளை உன்
வாசல் செழி(றி)க்கும்,யார் கண்டார்?
உன் இனமே உனை சகதியாக்கி,
மகிந்த சிந்தனையின் சித்த ஆர்த்தம் கேட்கும்.

அந்தோ நினதான
புதைந்த சித்தம் யாக்க புவியில் சிங்கதேசம்
சிந்(த்)தை கொளா?

அன்று
செங்கொடி சங்கொலிக்க செவ்வானம் விதைந்துரைக்க
செழுமை காணும் உலகத் தமிழினம்.அந்த
சிலிர்ப்புடன் எம் சிந்தையான சிகப்பு ஈழம்.

தகமையான தமிழீழம்,

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

www.seithy.com

www.seithy.com

வலைப்பதிவு காப்பகம்