திங்கள், 13 ஏப்ரல், 2009

புலத்தில் களம் கொள்ளும் காலக் கொள்வனவு



நான்எதை யாசிக்கின்றேனோ,அதை நீயும் சுவாசியென்று கூறினால், அல்லது வற்புறுத்தினால் அது அராஜகமாகும்,ஆனால் இன்று ஈழத்தில் ஊனப்படுத்தி,உதாசீனப்படுத்தி,படு கேவலமாக தமிழினத்தைபகடையாக்கி,படுவேசித்தனமாக்கும்சித்தசுத்திகரிப்பேநடக்கின்றது.இதுவேநடைமுறையான யதார்த்தமாகும் இந்த நிலை,இழி வலை என்றறுக்கப்படுகின்றதோ??அன்று வசப்படும் ஈழத்தின் சுவாசவாசம்.

ஆண்டாண்டு ஆண்ட,பின் அடிமைப்பட்டு,ஏறத்தாழ 350 வருட வதகளிப்பின் பிற்பாடு பாடு கரியாக்கி எம்மை பாதகன் சிங்களவனிடம் அடகு வைத்துப்போன பிரிட்டனின் பதவி சார் பதகளிப்பால் எம்மை சுமார் இல்லை சரியாக 61 வருடத்திற்கு முன் அடையாளமாக சாதூரியமாகஅடகுவைத்துஅமரராகிவிட்டஎமதுமுன்னையமூத்தசந்ததியைஎனதானவார்த்தையடலில்அழைத்தால்தொலைநோக்கற்ற,முட்டாள்கள்.அந்தமுகிழ்வுகளை இன்றைய இளைய சந்த்திகளிற்கும் அழியாத அவமானமாக்கிப்போன,இழவுநிலைசார்தந்த அன்றைய அரசியல்வாதிகளின்சரித்திரப்பிழைஇன்றுஅதன்அறுவடையை,இவ்வளவுஇழிவாக,இனமழிந்து,பாரியஇழப்பேற்று,வருங்காலசந்திகள்அழிந்து,ஊனமாகி,முடமாகி,மனநோயாளியாக்கி,மற்றெல்லாம் புலம் பெயர்ந்து,எத்தனை அறிவு ஜீவிகளை இந்த (இனவாதபேயரக்கர்களால்நாம்இழந்தோம்,மருத்துவர்கள்,பொறியியலாளர்கள்,சமூகசீர்திருத்தவாதிகள்,அறிவுயால்பெரியோர்கள்,அடுத்ததலைமுறையை ஆதார்சமாக அரவணைத்து செல்ல வேண்டியமூதறிஞர்கள்,இப்படிஎத்தனை,எத்தனையோநம்அறிவுச்செல்வங்கள்,அத்தனையையும்இழப்பதற்குமூலகாரணமேஅன்றைய,அறிவற்றஅல்ல,அல்ல,அறிவுசார்சுயநலவாதிகளின்,தன் நலப்பேறின் தீவினைப்பயன் இன்று வன்னிவரை நீண்டு,அடுத்த கணம் இன்னமும் எத்தனை நரபலியை இந்த இனவெறி ராஜபக்சாவின் இனவெறிக்கும்பல் தரப்பலி கொள்ளுமோஎன்று தளம்,களம்,புலம் வாழ் தமிழீழத் தமிழரகளின் நெஞ்சகத்தை கிலிக்கொள்ள வைத்த பெருமை அன்றையஅறிவிலிகளால்நாம்இன்றுஅனுபவிக்கும்,ஆற்றவெண்ணாக்கொடுமைகளின்தோற்றத்தின் தேற்றமாகும்

இத்தனைக்கும் முகம் கொடுக்கவேண்டியது எங்களது தலையாய கடமையாகும் ஏனெனில் நடந்தவைகளைதிரும்ப,திரும்பமீட்டு,எம்மைவருத்திக்கொள்வதில்யாதும்திருந்தப்போவதிலை,திரும்பவரப்போவதில்லை.

எரிவதை எடுத்தால் கொதிப்பது தணியும்,ஆதலால் நாம் ஆற்ற வேண்டிய தாயகக் கடமையைகளம்கொள்வோம்,தளம்வெல்வோம்,புலம்பெயர்ந்துவாழ்ந்தாலும்,களம்கொண்டுவாழ்ந்தாலும்தமிழரிற்கேஉரிய,சிறந்த,தார்மீக,பரம்பரை,பரம்பலாகஊறியகல்விச்செல்வம்,அதனூடான அரசியல் அறிவு,உலக ஒழுங்கை கையகப்படுத்தும் ஆளுமை,இன்னமும்இந்தபிரபஞ்சத்தில் மற்றநாடுகளின்சகலவிதமான,அதாவதுபொருண்மிய,கணணித்தொடராளுமை,கடல்,வான்,நீர்,நிலம் பூகோள தடவியல் அத்தனை,அத்தனை ஆற்றல் கொண்ட ஆற்றலாளர்கள் இப்போதும் தமிழீழத்தை நேசிக்கும் வல்லாண்மை ஆளுனர்கள் குறைவில்லாமல் எங்களிடையே போதியளவு உள்ளனர்

இத்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல் எம் இனத்தை ஆக்கிரமிப்பாளனிடம் இருந்து மீட்டு நேயம் மிக்க ஈழத்தை தரணியாக்கும் அவன் ஆற்றலை நான் மேலே குறிப்பிட்ட தேச ஜீவிகளின் கரக் கொடுப்பால்,எம் புலவாழ் மக்களின் அகக் கொடையால் நேரடியாக குறிப்பிட்டால் மேலதிகமாக நிதிக்கொடை,நீதிக்கொடை,மேலும் ஆளுமைமிக்க வளக்கொடை,இத்தனையாலான பலக்கொடையை எம் தலைவனின் தளமாக்கினால்,அவன் களமாக்கினால்,ஈழம் வலம் வரும்.

இதைத்தான் தலைவன் 2002ம் ஆண்டு போர் ஓய்வுகாலத்தில் மிகவும் ஆணித்தரமாக புலம் பெயர் வாழ் மக்களிடம் எதிர் பார்த்து விட்ட கோரிக்கை பின்வருமாறு அமைகின்றது. மிகவும் சுருக்கமாகவே குறிப்பிடுகின்றேன்,
வலிமையே வாழ்வு தரும்,இந்த அறிக்கை மூலம் அவர்கள் எதிர்பார்த்த்து,நிதி அதன் மூலமான கருவிக் கொள்வனவு,நாங்கள் கருமம் ஆற்றவில்லை என்று நான் இங்கு குறை கூறவரவில்லை ஆயினும் சில கொள்வனவுக் கப்பல்கள் இந்திய இராணுவத்தின் உதவிமூலம் எம் தாயகம் நோக்கி வந்தபோது அழிப்புக்குள்ளானது,யாவரும் அறிந்த விடயம் என்றே கருதுகின்றேன்
ஆனால் அந்த இழப்பை ஈடுசெய்ய மேலதிகமான கொள்வனவுகளை ஆதர்சமாக கருமம் ஆற்றவில்லையென்பது மிகத் தெளிவானது,அஃதின்றி இந்த தேசியக்கடமையை ஆற்றி இருந்தால் இன்று எம் தேசிய விடுதலை வீர்ர்களிடம் பல் குழல் எறிகணை முதற்கொண்டு,சாம்வகையிலான ஏவுகணைகள் அவன் வசமாக்கியிருந்தால் இன்று வன்னி இந்த வன்முகம் கண்டிரா>இல்லையென்று மறுதலிக்கமுடியாது.

2002ல் ஏ9பாதை திறப்புவிழாவுடன் மாவீரக்கனவுகளை பலர் கைகழுவி விட்டு இலங்கைக்கு ஆனந்தக்கூத்தாடவும்,தம் தற்போதைய வாழ்நிலையை ஊரில் பறை சாற்றவே பலர் பாவித்தார்கள் என்றால் அது மிகையாகாது,அதற்காக எல்லோரையும் குறை கூறமுடியாது,ஆயினும் இது நிதர்சனம்,இந்த நேரத்தில்தான் தலைவனில் அந்த ஆதார்ச எதிர்பார்ப்பை அகமாக்கியிருந்தால்?சரி இப்போதை புல நிலையை கருத்தில் எடுத்தால் அது பின்வரும் நிலைசாய்ந்து தலை கொள்கின்றது.

மேலும் தற்போதைய இந்த ஆர்ப்பாட்டபேரணிகளை ஆக்கிரமிப்பு ராணுவம் மாவிலாற்றில் முகங்கொள்ளும்போதே,புலம் பெயர் மக்கள் முகங் கொண்டிருந்தால் வன்னி மக்கள் இந்த ,தற்போதைய நிலையை அகங் கொண்டிரார்.சரி இப்போது மட்டும் எத்தனை சத விகித மக்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணிகளை அகங்கொள்கின்றார்கள்,

இங்கே நான் யாரையும் நோக வைப்பதான நிலையை அகங்கொள்ளவில்லைஆதங்கத்தின்எல்லைஎன்னை அங்கலாய்க்க,ஆதார்சம் எங்கள் அன்னைபூமி எம் முகம் நோக்க இதை எழுதுவது தவிர்க்கமுடியாத
தவமாக்குகின்றது,புலம் பெயர் வாழ் மக்களில் எத்தனை பேர் இப்படியான பேரணிகளில் தம்மை இழைத்துள்ளனர்,சத்தியமாக உங்கள் தார்மீக நெஞ்சகத்தை தொட்டு விடைசாற்றுங்கள்.

உதாரணமாக இங்கே நான் வைக்கும் சாரம் எனைமட்டுமில்லை அடிக்கடி இது போன்ற ஊர்வலங்கள்,ஆர்ப்பாட்ட பேரணியில் முகங் கொடுக்கும் தமிழீழத்தை நேசிக்கும்,யாசிக்கும் பலரில் வலம் வரும் கேள்வியாகும்.ரணமாகும் சாரம் இதுதான் இங்கே ஜேர்மனியில் வாழும் தமிழர்கள் 100பேர் என எடுத்தால் அதில் 20முதல் 22விகிதமக்களே பங்காற்றுகின்றார்கள் என்பது சத்தியமான உண்மை,இதுவே கடைசி 65விகிதமக்கள் பங்காற்றியிர்ப்பார்களானால் தமிழீழம் எப்போதே எம் வசமாகியிருக்கும்.இதையே பூமிப்பரப்பொங்கும் பரந்து வாழும் புலம் பெயர்சார் தமிழர் வினையாற்றியிருந்தால்?இப்போதாவது செய்வார்களா>?


என்னக வேண்டுகோள் இப்படியாக முகங்கொள்கின்றது.தற்போது உலகப்பரப்பெங்கும்எம் இளையோர்களால் முன்னெடுக்ப்படும் தற்போதைய பேரணிகள்,உண்ணாநிலைப்போராட்டங்களை,கவனயீர்ப்புப்போராட்டங்களை,தார்மீகமாக,நெஞ்சகத்தை நிலை நிறுத்தி அவர்களின் இந்த ஆத்மார்த்மான செயல்பாட்டிற்கு உற்சாகம் ஊட்டி,உறுதுணையாகி,இயல்பான பங்களிப்பை அந்த களத்தில் ஆற்றுங்கள்,வீட்டிற்குள் முடங்கி குற்றம் குறை கூறி உங்களை நீங்களே தரம் குறைத்து,அவர் அகம் நோக காரியமாற்றாதீர்கள் என்று தாழ்மையாக,உரிமையுடன்,உவகையாக இந்த ஆக்கம் மூலம் கேட்டுக்கொள்கின்றேன்,அதுமட்டுமல்ல இந்த ஊர்வலங்கள் நடக்கும் இடங்களில்,உண்ணாநோன்பாற்றும் தளங்களில் உற்ற உறுதுணையாகி பங்கெடுங்கள்.எங்கெங்குஇந்த நிலைப்பாடாற்றுகின்றார்களோ,அங்கு உங்கள் தரிசனங்களைஉளநிறைவோடுசெயலாற்றுங்கள்,தயவுசெய்து,பார்வையாளராக எப்போதும் ஆற்றும் இந்த வரலாற்றுத் தவறுகளை களைந்து வலம் வர இப்போதே களம் நோக்கி உங்கள் அடுத்தகட்ட நகர்வு அசையட்டும்.இதன் அறுவடை எமக்கு சாதகமான பல நல் வினையை நம் வசமாக்கும்.

ஆக,தற்போதைய நில,உள ஆக்கிரமிப்பு இனவாதத்தை வேரறுத்து,எம் தலைமையை வலுப்படுத்தி,எம் தாயக காப்பாளர்களை,உள,வளப்படுத்த புலம் வாழ் தமிழர்களால் இன்னமும் வீச்சாக்கி தாயகம் நோக்கிய பணியை தாராளமாக தாமதமின்றி முன்னெடுப்போம்,யாரோ சமீபத்தில் கூறியது போல எம் கஞ்சி எம் கையில் நாம் யாருக்கஞ்சி வாழவேண்டும்.இது எப்போது சாத்தியமென்றால் எம் நாடு எம் வசமாகும்போதே.அதாவது எம் ஈழம் வசப்படவேண்டுமானால் புலம் வாழ் தமிழர்களின் பலம் பரணியெங்கும் வலமாகி களத்தை பலப்படுத்த விழையும் வினைசார் வினை அது தமிழீழமாக மலர!

இனியும் தூங்கினால் ஒரே தீத் தூக்கம்தான்,இப்ப இல்லாத விழிப்பு இகத்தில் தமிழன் என்ற இனம் இலங்கையில் இருந்ததான வரலாறே ,இல்லையென்ற இழி நிலைதான். வருங்காலசந்ததிகள் வரலாற்றில்தான் படித்து வசப்படவேண்டிய பாழ் நிலைதான் கூடும்,எமக்கு முந்திய சந்த்திகள் செய்த அதே வரலாற்றுப்பிழையை நாமும் விட்டு, எமதான வருங்காலச் சந்ததிக்கு நாம் ஆற்றிய தேசச் சேவை எது?எனபதான கேள்விக்கு எப்படியான விடையை முன்வைக்கப்போகின்றோம். அந்த இழிநிலையினையகற்ற ஆளுமையான எம் அகம்சார் நல் வினையாற்ற இன்றே,இப்போதே,உடனடியான நல்வினையாற்ற ஒற்றுமையுடன் எங்கள் கரங்களை தேசம் நோக்கி யாகமாற்ற வெற்று உறுதி கொள்ளாமல் செயல் வீரனின் அடி அணியவோம்,புலத்திலும் புலியாவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்