சனி, 18 ஏப்ரல், 2009

இசைவாயா? இரப்பாயா?


உலகே உந்தன் கண்ணைத் திற,உன்,
உறங்கு நிலையாக்கும் மனச் சாட்சி திற,
போதும் நீ தரித்த அரிதாரம்.
போடு நீதியான மனுசாரம்.
மாற்று உந்தன் மறுப் புலத்தை,
மனக் கோலம் பூட்டி,
மனத்தைக் கொத்தி கருக்காதே,
மறைவாய் இனியும் நீ உதவாதே.

எங்கள் உறவெல்லாம் உலகான்றான்.
உந்தன் வலுவால் வதைக்கின்றான்,
நித்தம் எங்கள் உறவெல்லாம்,
செத்து மடியும் நிலை பாராய்.

கருவும்,
உருக்கொள்
சிசுவும்,பூவும்
இளம் பிஞ்சும்,இளமை பரவும் நெஞ்சும்,
தன் இனிய சந்ததி இயல்பாய் மருவும்
பாட்டன்,பூட்டியும்,

தேனினுமினிதாய் வாழ்வு காண,
தேமாங்கிசைக்கும் தேர்வெடுக்க,
வாழ்வின் வசந்தம் சிந்து பாட,
வானம் பாடியாகும் குமரிகளும்,
குமரர்களும்,

பயிலும் பாடம் நோக்கி நின்ற,
பள்ளிக்கூட குழாம்களை,
பக்குவமான ஆசிரியர்களை,
அள்ளி,
ஆரியன் அழித்தே ஆக்குகின்றான்
அற்று இந்த இனம் அறவே ஈழம் நீங்க!

நோயில் மடியில் நோத்திருந்து மருவ
நோக்கும் மருத்துவமனை,
ஆன்ம பலத்தில் அவர் தேக்க ஆன
கோயில்,குளமெலாம்,
தொழுதே வாழ்வின் கடைநிலையை,
காத்திரமாய் அவர்கள் கடவுளென்றும்,
நாடிச் செல்லும் திருத்தலங்கள்,
அற்ற வயல் வெளி ஆர்ப்பெடுக்கும் ஆறு,குளம்
இன்ன பிற வாழ்வாதார வளமெலாம்,
குண்டு போட்டே கு(றி)ழி பறித்தான்,

ஆரியப் பயங்கரவாதி பய(ல)னழித்தான்.
எத்தனை உயிர்கள் அவலங்களால்,
அவயங்கள் இழந்து,
உறவுகள் இழந்து,
உற்ற துணை இழந்து,இழக்க
யாதுமற்ற உலகிழந்து எவன் துணைநாடுவார்?.

கிழக்கில் உதயமென்றும்,வடக்கில்
வசந்தமென்றும்,
வசமாய் வானப் புளுகேந்தி
ஆரியக்கூத்தை சீராக்கி இந்தியன் செயலாற்றும்
அவலப் போக்கை,
நாங்கள் தகர்ப்போம்

ஆயின் நீ ஆற்ற வேண்டியதெல்லாம்,
எங்கள் தேசியம்,
சுயநிர்ணயம்,
சூரியத் தலைமை,
இத்தனையையும் நீ அங்கீகரித்தால்,
அத்துணை போதும்.

அறமாற்ற இங்கே ஆயிரமாயிரமாய்,
வன்னியை மட்டுமென்ன?
வளமான ஈழத்தையே வையத்தில் ஆக்குவோம்
நிலமாக்கி அதை உலக நிகராக்குவோம்,
இயல்பான வாழ்வதை வசம் கொள்வோம்
செயல் வீரர் தகமை திசையோங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்