வியாழன், 30 ஏப்ரல், 2009

சிரையாத சிலிர்ப்பேக சிலாகித்த சிரம் சிலிர்ப்பி

மல்லிகையின் வாசம் இன்றும் என்
நெஞ்சில் நெகிழ்வாய்,
அகக் கண்ணை அழுத்தும் நினைவு மட்டும்,
ஏக்கத்தின் சொரியலில்
ஏகாந்தமாய்,

இந்த ஆளுமை எனக்குள் மட்டுமா என்றால்!
அதுதான் இல்லை ஆதங்கம் அரற்றும்,
ஈழம் ஏந்தும்!
ஈரமான தமிழீழ மக்கள் அத்துணை நெகிழ்விலும்,
நெட்டுயிர்த்து,
நெடு மூச்செறிந்து,மனச் சிக்கலாய்
மருவி,இன்று நெடுமலையாய் வீச்செறிந்து,
வேகத் திடலின் வெம்மை தணிக்க,
பாரெங்கும்,வீதியில்
உரிமையின் ஓங்காரம் ஏக,தமிழீழ
தேசியக்கொடியுடன் தேச நேச நெஞ்சங்கள்,

சர்வ நாடுகளின் மனக் கதவை ஓயாமல் தட்டும்
பர்வத நதியின்
அலையாக,நெஞ்சம்
ஈழம் சுமந்து,மக்களின் ஏக்கங்கள் கலந்து
ஒவ்வொரு விநாடியும் ஓயாத ஓர்ம கொட்டொலிகள்,

பவனியின் பாதக் கதவுகள் பவ்வியம் சுரக்காதா?
பாவிகளாக்கி எம் இனம் அழிக்கும் ஆரியத்தை
ஆவியம் ஆக்காதா?,
அத்துணை எதிர்பார்ப்பு,அத்தனையும்
தேச விடியலின்
வேதங்கள்,
வெம்பி அனுதினமும்,சூம்பியதான உறவுகளின்,
ஓலங்களின் விடியல்களின்,
விதந்துரைப்பு,
வீம்பவும் முடியாமல்,விசும்பும்,
எண்ணத்தினை தூண்டவும் முடியாமல்,

சுட காடேகா!
சொந்தங்களின் சுமைகளை கங்குல்களாக,
மனதெரித்து,விடியல் நோக்கும் நேரியத்தின்
நெடும் பயணம்,வீரியமாகவே,வீறுநடை,
ஜன சங்கமத்துடன்,
ஒவ்வொரு ஜனநாயகத்திடமும்,திடமான ஆவண ஒப்படைப்பு,

ஒரு அசைவு செயலாக தேசம் விட்டு,
தேச எரிப்பு பயங்கரவாதியிடம் பகிரங்க வேண்டுதல்,
யாரிடம்?
அவன் பயங்கரவாதி
எப்படி மனிதம் புரிவான்?
எத்திசையில் அவன் இசைவான்?

ஏன் இந்த நிலை?
புரியாத புதிரில்லை
சூட்சுமமும்,ஒன்றும் பரம ரகசியமும் இல்லை,
ஆனால்
இங்குதான் இவர்களின் இயங்குதளம்
மூலஸ்தனத்தின் முகவரி,முகம் ஒ(ளி)ழித்தது.

உலகின் மூலைமுடுக்கெலாம்,
பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கப் போவதான,
பீரங்கி பிரச்சாரம்,
தீவிரவாதத்திற்கும்,பயங்கரவாதத்திற்கும்,
விடுதலை போராட்டத்திற்கும்,உள்ள
வி(த்)தியாசத்தை விபரமாக பிரித்து விரியாததன் எதிரொலியா?
புரியவில்லை?

தமிழனுக்கு ஓர் நாடு தரணி கொள்ளக்கூடாதென்ற
ஆதங்கத்தின் வக்கரிப்பு?
அங்கு அழிவது தமிழன்தான் என்பதான
வன்ம விரிப்பு,

மேற்குலகின் கனவு துறைமுகம் ஊடான அக்கறை
அற்பமான,ஆனாலும் மனிதம் தின்று இந்த
வல்லூறுகள்
வைக்கும் கண்ணின் காந்தாரம்,கைகளை ஆரியனிக்கு,
அடைவு வைத்தால்?
ஆகும் காரியம்,அது எப்படியோ காரீயமாகி விடும்
என்று புரியாத மதக(ளி)ழிப்பு.

இதற்கு உடனடித்தேவை கற்பகத் தூபத்தில் எப்படியும்
ஓர் அமைதி அது எந்த அழிவை இதப்படுத்தினாலும்,
தன் காரிய சித்தியின்
தித்திப்பிற்கானது,

சீனா,பாகிஸ்த்தான் ,ஒரு பக்க இணைப்பு,
மறு பக்கத்தால்
இந்தியா அமெரிக்காவுடனான அணு ஒப்பந்த கைச்சாத்து
தெற்காசிய வல்லரசாகும் கனவுகளில்
யார் கதா நாயகன்?என்ற ஏக்கத்தின்
எதிர்பார்ப்பின் தாற்பரிப்பு.

அதற்காக அங்கழியும் மனிதம்,அதன் பூர்வீகம்
அதன் கலை இன்னபிற
சுவடுகளின் சூத்திரம்!
எவன் இதை அகம் கொண்டான்.

திராவிடனின் திரவியம் ஒட்டு மொத்தமாக
சந்திக்கு,சந்தி துயில் கொள்ளும் கோவணத்
துண்டிற்கும் உதாவாத பரதேசிச் சாமிகளைத்தவிர
வேறென்ன பலம் கொண்டான்?
வேதம் ஊதி தேவாரம் ஓதி,
சாமிக்கும் பசியென்று பால் கொடுக்கும் இந்த
வக்கற்ற,தேசாந்திரிகளிற்கு,
உலகில் எங்கேனும்??,ஆளுமை மிகு
அரசுண்டா?அரவ, அணைக்கவேனும் வக்குண்டா?

கல்வியில், வேள்வியில் முன்னிலை வகுக்கும்
இந்த தமிழனிற்கு வீரத்தில்,சுதந்திர சுகானுபவத்தில்
சாசுவாதவான,
பற்றில்லை. ஏனெனில்
பாரில் அவனுக்கு ஓர் நாடில்லை,

உள்ளவனின் வீரத்தையும்,பரந்த தொலை நோக்கான
வீச்சான பார்வையின் அகத்தையும்,அதனூடான அரசையும்,
கொச்சைப்படுத்தி அவமதித்து
தன்னை ஆசுவாசப்படுத்தும் மோட்டுப் போக்குள்ள,
வால் பிடித்து விசுவாசம் தேற்றும் தன்மை,
இன்னமும் அற்றபாடில்லை,

அண்ணணின் அணியின் ஆளுமையை
அகலப்படுத்தவோ,
விசாலப்படுத்தி, அதை வேகம் முடுக்கவோ, இந்த
வேதினியில்
ஈழத்தமிழனில் பாதிப் பேருக்க கூட அந்த பாதிப்பில்லை,

இருந்ததும் கூட பாதி வழியில் தன் சுகமாற்ற பரந்தவீரத்தை
விற்ற துரோகம்,இன்று விஞ்சி நிற்கும் விதமென்றால் மிகையில்லை,
துரோகிகள் மிரிச்சு பிரித்தான்,அகன்ற நம்பிக்கையை
உறவாடிக்கெடுத்தான்
உற்றவன்,ஏற்றவன் என்று இந்த ரண்டகத்தாரை நம்ப
எம்மை
இரண்டகப்படுத்தியதன் உச்ச கட்ட பேரவலம்.
இன்று வன்னியின் பேரவலமாய் வலம் இந்த
இங்கு மையம் கொடி கட்டப்பட்டது,

கையகப் பாடான இயங்கு தளம் எதிரிக்கு எம்மவர்களாக
இயங்கியதாக, அரிதாரப்பூச்சாளர்களால்,இந்த இரண்டகர்களால்
ஐதாக்கப்பட்டதான, அவலங்கள்தான்.
மிகையில்லை
அண்மையில் கூட இதுதான் அரங்கேற்றம்.
அடிக்கடி அரங்கமாகின்ற வேரவலங்களை, வேதினியில்
வேறெங்கு காணமுடியும்,?

இந்தியனின் இயங்கு தளம் கூட ஆடு தளமாக களத்தில்
கனதி இழந்து சுருதி ஓய்ந்து
சுடுகாடாக்கப்பட்டு,இன்று
காடாத்து வெகு சீர்மையாய் சீர் கொள்ளப்பட்டிருக்கும்,

இந்த இழிய,ஊனர்கள்,ஈனர்களின்,
இரங்கு தள பேனயர்களின் பேதலிப்பகற்றப்பட்டிருப்பின்,
அல்லது ஊனமற்ற மானத்தை உறுதியாக கடைத்திருந்தால்,
அது என்னவோ?

பண்டாரவன்னியன் படை திரட்டும் போதெல்லாம்,
காக்கை வன்னியர்களும் களம் மாறுகின்றார்கள்,
தெளிவாகத்தானே வரலாற்றை வகுந்து படித்தார்கள்!

ஆகா!
அதனால்தான் இந்த ஊனப் புறங்களும்,பாரமாய் புறம் அகன்றார்கள்.
என்னவோ நான் கூட கற்கவில்லை, அப்புறம்
காக்கை வன்னியனிற்கு என்னவாயிற்றென்று,
ஒரு வேளை ஆயுள்முழுக்க அரசோட்சினானா?
புரிந்தவர்கள் பகன்றால் சிலவேளை இனி வரும் காலங்களில்
இந்த அவலம் சூட்ட யாரும் உளவழிக்கார்,உறவளிக்கார்.

எட்டப்பன்,
எந்த அவலம் கொண்டான்?
ஒட்ட வந்த பதவி சுகம் யாத்து,ஆந்திர கவர்னரானான?
எப்படியும் வரலாற்றில் ஓர் காத்திரமான
பதிவெய்தி தன் இனத்தின் பழி ஏந்தி எத்தனை
மக்களை நரபலியாக்கினான்?தன் சந்ததிக்கு
ஏற்றி வைத்த பாதை வெறும் உபாதைதானே
அது மட்டுமென்றால்
சிலாகிக்கலாம்,

உரிமையின் வீரியத்தை,
சுதந்திர வேட்கையின் பாரியத்தை,
மண்சார் தன் மங்கலத்தை,அதன் மகிமையை,
அதனூடான பூர்வீகத்தை,அதன் சாமான்யத்தை,
எந்தன் மண் எமக்களித்த வியால்பத்தை,
விலங்கிடாத எம் தேசத்தை,உலகின்
சொர்க்கபுரி என்றும்,பூமிப் பந்தின் பசுமைக் களஞ்சியத்தை,

இந்த வீணர் கூட்டம்
விரிவாக்கி அந்நியனின் பாதாசாரத்தில் பணிவாக,
கூனிக்குறுகி,அத்தனை ஆயாசத்தையும்,சத்தகற்றி
அடிபணிந்து என்று எம் விடியல் நிலத்தை கையகம்
அகற்றி கரிபீச்சி பூசினானோ,
அன்றைக்கு வந்தமர்ந்த அவலம்.

இன்று பூதாகரமாக எம் மண்ணால் ஆழக்காலூன்றி.
அகலமறுப்பாற்றும் கேவலம்,

ஆயினும்,
காலக் கனிவை உற்றுப் பூக்க மீள
உதயமாவார்கள்,கரிகாலத் தேவர்கள்,
பாரே பார்த்திரு!
பூபாளம் பண்ணிசைக்க அத்தனை ஆக்கிரமிப்பையும்
ஆழ உழுது அவனி வலம் சூட்ட
சூசகமாய் சூரிப்பார்கள் எங்கள்
சூரியத் தேவர்கள்,
சூனியமாக சூத்திரம் சூடவில்லை என
தோத்திரத்தான் பாத்திரமாய்
பகை விலக்கி,பாடானதாய் பார்த்திருந்த இகம்
புலியின் புத்தசைவில்

ஒலியின் ஓங்காரம் ரீங்காரிக்க- காரிருளகற்றி,
வையகம் எலாம் வைத்த கண் விழிகள்,
இமை மறுக்க,

இத்துணை சாதூரிய,சதுரங்கத்தின்,சாமர்த்தியத்தை
அத்துணை கொண்டு,அரங்கேற்றிய
வீரியங்களை வியாபமாக்கி, விதையாக்கிய
பதாகை யாத்த பார்வைகள் பவனியாக்கி,
முதிர முகிழ்வார்கள் அவனி
அதிர,அரசோச்சி.
சிருங்கார ரசம் சிதைந்ததான உலகப்பார்வையை
விலக்கி எங்கள் வேத மந்திரம் சலனமற்று

சகல திசை நோக்கியும் சந்தங்கள்
சாந்தங்களாய்
சிந்தொலிக்க,
நீரில் மிதந்த பந்தாக
உலகப் பந்தில் உதயம் காணும் தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்