ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

யார் ஆற்றுவார் தேசிய உணர்வை?

பூர்வீகக் குடியான தமிழீழத் தமிழினம் தொடர்ந்தும் புலம் பெயர் நாட்டில் இன்றுவரை நடாத்தும் மனிதாபிமான கவனயீர்ப்பு,ஊர்வலங்கள்,மற்றும் மனிதாபிமானத்தை வலியுறுத்தும்கொட்டொலிகள்,பதாகைகள்,ஆவணப்படங்கள்,காணொளிகளில் இருந்து மீளாக்கம் செய்யப்பட்ட பிரதி ஒளிப்படங்கள்,இன்ன பிற அத்தாட்சிகள்,இணையங்களினூடான கள நிலைகள்,இவையனைத்தும் எமது இனம் அங்கு அனுதினமும் பயங்கரவாதிகளான மகிந்த பேரினவாதி,சிங்கள அரக்கர் கூட்டம் எமது மண்ணில் நடத்தும் அதி தீவிர இன அழிப்பை,கொத்துக் கொத்தாக எம் உறவுகளை,சொந்தங்களை,எம் இரத்த பந்தங்களை கொன்று குவிக்கின்றதை சர்வத்திற்கு வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர்..

இத்தனை இன அழிப்பின் சாரங்களை சந்தேகத்திற்கு இடமின்றி சர்வமாக்கியுள்ளோம்.இதன் உண்மைத் தன்மைகளை இதே சர்வதேசம் புரியாமல் இல்லை,அங்கு நடக்கும் ஒவ்வொரு ஆதாரமான இன அழிப்பின் சாரம் தினம் இவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்களின் உத்தியோக பூர்வமான தூதரகங்கள் மூலமும் அதிகாரபூர்வமாக, ஆழமாக அறிந்தே வைத்துள்ளனர்.ஆயினும் இவர்களின் வாய்மூல அறிக்கை இலங்கை அரசை எந்த ரீதியிலும் அடிபணிய வைக்கமுடியவில்லை. இதன் காரணத்தை உற்று நோக்கினால் அவை பின் வருமாறு அணி வகுத்து நிற்கின்றன.

1.இலங்கையில் நடக்கும் இன அழிப்பை இவ் சர்வதேச ஆதிமுதல் அலகலகாக அறிந்தே வைத்திருந்தாலும்,நமது விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாத முலாம் பூசி தெளிவாக்கி தம் நிலையாக்கி தேக்கி வைத்திருப்பதனால்,

2. இலங்கையில் தினம்,தினம் இறந்து போவது அப்பாவிமக்களென்பதும் அரக்கத்தனமாக பயங்கரவாத சிங்கள அரசிற்கு தாங்கள் தாரளமாகவே சகல கருவிகள் உட்பட நிதி,இராணுவ ஒத்துழைப்பு,வட்டியில்லாக் கடன் இறக்குமதி பொருட்களிற்கான வரி விலக்கு இப்படியான தன்னாலான சகல வளங்களையும் இனவாத பயங்கரவாதி சிங்களவன் மகிந்தாவிற்கு தன் எதிர்கால ஆளுமையை இந்த சிறீலங்காவில் தாராளமாகவே எதிர்பார்த்து,
உலகில் பயங்கரவாதத்தை முற்று முழுதாக அழிப்பதான உலக ஓழுங்கை மையப்படுத்தி,இது சார் உதவிகளை கொடுத்துவிட்டதை இன அழிப்பு புத்த இனம் இன்று போர் என்ற போர்வையில் தமிழினத்தை கருவறுப்பதை எந்த முகம் கொண்டு இலங்கை அரசை அழுத்தம் கொடுத்து இந்த அவலத்தை தடுப்பது?இவர்கள்எதைக்காரணம்கூறிஇலங்கைஅரசைவற்புறுத்த,இனவாதியோநான்பயங்கரவாதிகளைத்தான்இன்றுஅழித்துக்கொள்கின்றேன்,பொதுமக்கள் யாரும் காயமடையவோ,இறக்கவோ,அதாவது கொல்லப்படவோ இல்லை என்று மறுதலிப்பதை,இவர்களும் வாய்மூடி கைகட்டி மெளனமாகவே ஏற்றுக் கொண்டு,எதுவும் செய்ய முடியாத கையாலாகத் தன்மையை கக்கவோ,முழுங்கவோ முடியாமல் உள்ளனர்.

3.புலம் பெயர் நாடுகளில் புயலாய் மையம் கொண்டுள்ள போராட்டத்தை புறந்தள்ள முடியாத இக்கட்டான நிலையில் உள்ளனர் என்பது ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கங்களின் தற்போதைய நிலை உள்ளது என்றால் மிகையாகாது.

4.எனவே எப்படியாவது போர் நிறுத்தத்தை வலியுறுத்த முனையும் போது அங்கே ஆசியப் பிராந்திய வல்லரசாக யார் உள்ளாகப் போகின்றார்கள் என்ற பனிப் போராட்டத்தில் இந்தியா,சீனா இவற்றின் போட்டிப் பந்தயத்தில் இலங்கையை கையாள முழு உரிமையையும் இந்தியா முந்திக்கொண்டு,இனவாத பயங்கரவாதிக்கு தன்னுடைய பயங்கரவாத முகத்தை புதைத்து இன்று ஈழத்தில் இந்த அநியாயப் போரை முன் நகர்த்தும் அல்லது முழுமையாக நடத்திக் கொண்டுள்ளதை இந்த சர்வதேசமும் நன்கறியும்.ஏலவே இந்தியாவின் நல்லெண்ணங்களையும் இன்று அதனுடனான ராஜரீதியாலான உ(ள)றவுப் பேணல்களையும் எந்த ரீதியிலும் புறந்தள்ள முடியாத யதார்த்தத்தை தொடர்ந்தும் வேணவே சர்வதேசம் முனைப்புக்காட்டும் என்பது உண்மையாகும்.

5.அதே நேரம் சர்வதேசத்தில் புலம் பெயர் வாழ் ஈழ உறவுகள் இன்று லண்டன்,கனடா நோர்வே,டென்மார்க் போன்ற நாடுகளில் அபேட்சக உறுப்பினர்களை தேர்வுசெய்யும் வல்லமை உள்ளவர்களாக உள்ளதனால் அவர்களின் உணர்வுகளை புறந்தள்ள முடியாத யதார்த்தத்திற்கும் முகம் கொடுக்க வேண்டிய தேர்தல் தேவைகளும் உள்ளது,இது இவர்களின் வாழ்வாதரப் பிரச்சனை ஒரு வகையில் கெளரவப்பிரச்சனையாக இவர்கள் மத்தியில் விசுவரூபம் எடுத்துள்ளதனால் இந்த சீமைச்சீமான்கள் எப்படியாவது எமத்தான இந்த ஆளுமையான பிரச்சனையில் ஆழமாக முனைப்பு காட்டவே முனைவர்.

6.ஆயின் எந்த ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கையை கைக் கொள்ளப்போகின்றார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பானதே,இந்த இடத்தில் மேலும் இவர்கள் கூர்மையாக கவனத்தில் கொண்ட சாரம் யாதெனில் புலம் பெயர் மக்கள் தற்போது தமது தேசியக் கொடியை தாராளமாகவே களம் கொள்ளச்செய்துள்ளனர் இந்த நிலையை ஐரோப்பிய ஒன்றியம்எக்காரணத்தைக்கொண்டும் தடை செய்யமுனையவில்லை,கனடா வாழ் ஈக இனத்தமிழர்களின் இடை விடாத போராட்டத்தின் தன்மையால் இயல்பாகவே விழைந்த ஈழம.தேசியத் தலையை,சுயநிர்ணயம் போன்ற முக்கியமான கொள்கைகளை இந்த நேரத்தில் முன் வைத்து வீதியில் இறங்கியதும்,அதை கனடரசாங்கம் அனுமதித்த்தும் இதனால் இன்னமும் புலத்தில் தேசியக்கொடியும் ,தமிழீழத் தலைமையின் ஒளிப்படமும் இன்று தங்கு தடையின்றி உலக வலம் வருவது எமது போராட்டத்தின் முதல் வெற்றியாகும்.இரண்டாவதாக தமிழீழத் தலைமையை புலம் வாழ் தமிழர்கள் எவ்வளவு வலிதாக,ஆழமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது இந்த ஐரோப்பிய,அமெரிக்க நாட்டினர்க்கு எமது தமிழ் உணர்வாளர்கள் முகத்தில் அறைந்தே வலிமையாக கூறியுள்ளதை இந்த நாடுகளும் மென்மையாகவே ஏற்றுள்ளனர் என்பது யதார்த்தமாகும்.இந்த அங்கீகரிப்பின் மூலம் நாம் ஓரளவு வெற்றி கொண்டுள்ளோம் என்பது உண்மையே.இவ்வளவையும் இவர்கள் தமதான கருத்தில் கொண்டே அடுத்த நகர்விற்கு ஏகுவார்கள்.

7.இனி இந்தியாவை நோக்கினால் அங்கு ஈழப்பிரச்சனை வலிதாகவே மக்களகம் பற்றியுள்ளதென்பது மிகத் தெளிவானது.தற்போது ஆட்சிக் கட்டிலில் கொலுவிருக்கும் இத்தாலி சோனியாவின் அதிகாரம் இனி ரசமிழந்து,கொதிப்புநிலை குன்றி வலுவாழக்கும் அறிகுறியே ஆங்கு ஆழமாக காலூன்றியுள்து. இந்த நிலை மே மாதம் நடைபெறும் தேர்தலின் முடிவுகளின்சாரம் வலிமையாகவே ஒரு வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தும் ஆயின் அது எவ்வளவு வலிமையாக எங்களது போராட்டத்தின் பால் பணியாற்றும் என்பதை இப்போது கூறமுடியாதுவிட்டாலும் தமிழர் சார்பான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும் அதில் மாற்றெண்ணத்திற்கு மகிமையில்லை.அதனால்தான் இந்த ஏது நிலையை மையப்படுத்தி இந்தியத் தேர்தல் முடிவுறுதலிற்கு முன் ஈழப்போராட்டத்தை முடிவிற்குள் கொண்டு வரபடுபாதகன்உலகப் பயங்கரவாதி மகிந்தா படுபிரயத்தனப்படுகின்றான்,அதன் ஒரு கட்டமாகவே தன்னுடைய வன்னி நோக்கிய பிரவேசத்தை தனது மற்ற தேவைகளைப் புறந்தள்ளி அங்குள்ள இன வெறியர்களிற்கு உற்சாகமூட்டி இன அழிப்பை துரிதப்படுத்தி விரைவில் மற்ற தளங்களையும் கைப்பற்ற, எந்த இழப்புக்ளையும் புறந்தள்ளி முன்னெடுக்க தன் ஆசிகளை வலிந்து ஊட்டி தன் களம் நகர்ந்தான்.

ஆயினும் எவரும் எதிர்பார்ப்பதைப்போல் வன்னியின் கள,தள நிலை இல்லை என்பது யதார்த்தமாகும் உதாரணத்திற்கு கையிலெடுத்தால் இன்றும் வன்னியில் புலிகளின் குரல் வலிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும் அதே வேளை ஈழநாதம் தன் நாதத்தை தினசரி வாசகர் வசமாக்கி இயங்கு தளத்தில் இயங்குகின்றது,மேலும் எமதான ஊகத்திற்கப்பாற்பட்டது தேசியத் தலைமை என்பதும் கருத்தில் கொள்ளவேண்டிய நிஜமாகும்.

ஆக இவ்வளவு யதார்த்தங்களையும் சர்வதேசம் எந்தளவிற்கு தன் கவனத்தில் கொள்ளும்,அதன் பிரகாரம் எப்படியான தன் சார் வினைத்திறன் ஆற்றும்?அல்லது எல்லாவற்றையும் புறந்தள்ளி இந்தியாவில் ஏற்படும் ஆட்சிமாற்றத்திற்கேற்ப தனது அரசியல் சதுரங்கக்காயை நகர்த்தும்.எனினும் நாம் தற்போது எடுத்துள்ள இந்த போராட்டங்களை எவ்வித தொய்வின்றி முன்னெடுப்பது முக்கியமாகும். நாம் எந்த தேசத்தின் உதவிகளையும் எமக்கு சார்பாக மாற்றவேண்டுமெனில் இப்படியானசத்தியவேள்விகளாலேயேமுடியும்,அதைவிட்டுஎந்தவிதமானவன்முறைகளையோ,மற்றும்ஆத்திரமூட்டும் செய்கைகளையோ முன் னெடுப்பதை அறவே தவிர்ப்பது சாலச் சிறந்ததாகும்.

உணர்ச்சி வயப்படுதலால் எம் படுதலம் பாழ்,தாழ் நிலையே கைக்கொள்ளும் என்பதை அகம் கொண்டு தொடர்ந்து தேசப்பணியை அகமாக முன்னெடுப்போம்,
இந்த கட்டுரையின் நோக்கத்தின் சாரப்படும் உண்மை எதுவெனில்,எமது புலப் போராட்டமும்,இந்தியாவில் ஏற்படும் அரசியல் மாற்றமும் நிச்சயமாக ஒரு ஒரு அங்கீகாரத்தை எமக்கு ஏற்படுத்தும் என்றே புலப்படுகின்றது.களம் எப்போதும் தன் வீரியப்பணியாற்றும்,அதற்கு நாமும் தொடர்ந்து தளம் பற்றும் ஆழம் புரிதலினூடாக நீட்சிப்படுத்த,புலத்தில் தொடர் போராட்டம் களம் ஆற்றவேண்டிய சீரியப்பணியை கரம் கொள்வோம்.காலம் எம் காயமாற்ற புலம் தன் பூர்வீக இனம் காக்க,தன் இனம் காக்க சுயமற்ற பங்களிப்பை பலப்படுத்துவோம்.

எங்குமே விடுதலைப் போராட்டங்கள் வெறுமை கொண்டதாக சரித்திரமோ பதிவோ இல்லை என்பது கண்கூடு,ஆக எங்கள் அறப் போர் புலத்தில் அறமாற்ற,களத்தில் எம் விடுதலைப் போரளிகள் ஊக்கமுற,வன்னி மக்கள் வளம் பெற நாங்கள்தான் முன் நின்று சாலப்பணியாற்ற வேண்டும் செய்வோமக.தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற வலிதான செற்கொட்டை,தமிழீழத் தலைவன் பிரபாகரனே என்ற பிரம்மாஸ்த்திரத்தை

தமிழீழத் தேசியக் கொடி சுமந்து போர்க்கொடி தூக்குவோம்,துவட்சியின்றி தொடர்ந்து எம் இன மக்கள் துயர் நீக்க உயர் கொள்வோம்.
வெல்வோம் என்றே நிறை கொள்வோம்,
கொல்லும் பயங்கரவாதியை புறம் கொள்வோம்.
வல்லோன் பிரபா கரம் பற்றி
வனைய ஈழ மலர் கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்