வெள்ளி, 10 ஏப்ரல், 2009

படியும் நிலை சாரும்,ஒடியும் தளை யாவும்,


இனம் ஒன்று ஈழத்தில் ஈனமாகி போவதா?அன்றி
ஊனமாகி உழைவதா?இந்த தானத்தில்தான் தமிழர்
கானாகி கரையுதே தினம் தீயாலே எரியுதே.இதை
தானாகி உணராமல்,தக்க நிலை பேணாமல்,புலம்
வீணாகி உளர்வதா?இல்லை வீசும் தறைமாற்றி
வாழும் தரைமீதில் போர்க்கொடி ஏந்தி எம்
நீதி,நியாயம் நிர்ப்பந்திப்போம்,இதை
ஆளுமை கொள்
நிலையாய்,நிர்ப்பயமின்றி,நிமிர்வுடன் நிதம் சாருவோம்,
அங்கு இலையுதிர்வாய்,இனமங்கு இறைந்து,இறப்பதின்
தங்கு நிலை பாங்கின்,உண்மைநிலை உருக்கி பொங்கி
உளமாற்றும் உபாதை உரத்து கூறிஉற்ற வழி சாற்றுவோம்,இனவாத
இன அழிப்பை இகமறியக் கூறி இன்னா வழி யாசிப்போம்

தருக்கர் அங்கே தளமற்று வாழும் எம்
இருக்கைகளை பல்குழல் எறிகணைகளால் ஆன தம்சார்
கருவிகளால் கருக்கும் எங்கள் உறவின் நிலைசாற்றி,
ஊடுருவும் இந்தியனின் ஆளுமையை உரத்தியம்பி,
நாடுகொள் எந்தையரின் காலச்சுவடழிக்கும்,
பாடு பொருள் நிதம் உரத்தெடுத்து,உரிமைப்போர் தொடுத்து
புலத்தில் எம் போராட்டம் புனிதப்பணியாய் திறனெடுப்போம்

பூமிப்பந்தெங்கும் புனிதப்போராட்டம் புயலாக மையம் கொள,
ஆமியின் அட்டகாசங்கள் அலைஅலையாய் புலம் புணர,
சர்வதேசத்தின் சதி முகம் சந்தி,சந்தியாய் வெளிச்சம் சூட்ட,
சாரம்சம் மேவும் எம் சாவுக் களம் விபரமாற்ற,ஏற்றத் தாழ்வற்ற
களம் கொள்வோம்,ஏவுகணையாக்கும் எங்கள் தலம் ஏற்போம்.

புலம் கொண்ட அணியாலே புலமாகும் புலர் காண்போம்.
கலம் காணும் கதியாலே கதிர் வீசும் காலை நோற்போம்
வலம் ஏகும் எங்கள் வளத்தாலே வந்தனம் தனை நூற்போம்,
நிலம் யாவும் தங்கும் தளமான தகம் தாங்குவோம்.

போராட்டம் இங்கு புலத்தில் பலம் சேர்க்க,
விடியும் நாளெண்ணி நாம் வினையமாய் வினையாற்ற,
படியும் நிலை சாரும்,ஒடியும் தளை யாவும்,
கடியும் கணையாலே கடிதான தளை சாய்ப்போம்.
முடியும் முடிசூடி முத்தமிழ் அங்கு முனைவாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்