செவ்வாய், 28 ஏப்ரல், 2009

பூங்காற்று வீச பூவான மென் உளம் கோர்த்து


ரசம் கெட்ட திரிசங்கு சாகரம்,பார்
தேர்தலில் ஈழத்தமிழனை திரிப்பெடுத்தி
ஊர்தலாக,ஊனம் கொள்ள, உளம் கொண்ட
பார் தல பயன்பாட்டில்,தமிழக ஈழ நேயம்
படைத்தோர் இயங்குவாரா?

உங்களின் ஆதங்கங்கள் ஆதார்சத்துடன்
ஏற்ற இனமான உணர்வின் ஊக்கங்கள்
மாற்றெய்தி,மூப்பெய்தி போகாது,மூடும்
நிலை காணாது.

அம்மையாரா?
ஐயனை மறந்தோர் நன்று.
இன்று எரியும் நெருப்பை நீருற்றி தணிக்கும்.
கன்றுள்ளம் கொண்ட காப்போரே தேவை.
என்றுள்ளம் ஏற்பாய் ஏதனம் ஊட்டும்
ஓளடதம்தான் மார்க்கம் ஐதில்லா நோக்கம்,

நேற்றைய நிலை நோற்றவர் மாற்றுவார்
நோயும் பாயும் தன் நிலை சார,இது மாற்றமில்லா
மாற்றம்,இங்கு தோற்றப்பாடு தொய்வற்றது,
தேற்றப்பாடு இயல்பானது,இயங்குதளம் தோற்றத்தின்
பற்றுதலின் பார்வைத்தளம் முன்னெடுப்பின்
முதிர்ச்சி முகம் ஏற்றும் உயர்ச்சி.

நேற்றையவரும்,இன்றைய எவரும் தவறாற்ற
தோற்றமும் உள்ளவர்களில்லை,
பாரினிலே,எந்த தேர்வினிலும்,தேசத்திலும்
குற்றமாற்றா குருபரனும் இல்லை,
காலம் மாற்றாத காயங்கள் உண்டா?
களம் இது தேர்தல் களம் எனினும்
மாற்று முகம் காட்டாத மகிமை அது தேவை.

பரர்ப்பனிய பார்வையகற்ற பாகம் மொண்டுள்ளம்
தேர்தலறிக்கை ஆறுதலாற்ற,
தேகம் சார் தேற்றி உள்ளம் ஓர் ஆறுதல் அகவ
தேசம் பார் தேவை கண்டு எம் கனதியான அவலம் அகற்ற
பாசமான தேர்வென நெகிழ்ந்துள்ளம் உனை வாழ்த்தும்,ஆயின்

ஏற்ற வாக்குறுதி உறுதி தளராமல்
ஆற்ற துயர் மாற்ற ஆளுமை கொள்,
அற்றதெல்லாம் தேற பற்றுதல் நீ பாராக்கு,
வெறும் பராக்கு காட்டாமல் பாவை,கன்னித் தகமே
தமிழகத்தின் அன்னையென்றுன்னை,
அகமகற்றும் அன்பை நீ நெறி கொள்வாயா?
மீண்டும் எம் குரல்வளை குதிர்த்து,
குரோதம் கொள்வாயா?

தற்போதைய நன் நம்பிக்கை நீ
தற்காலிக அரிதாரமாயின் அறமழிந்து போவாய்
தமிழன் என்ற தாற்பாரியம் தரணியில்
தமிழீழம் அரசோச்ச ஆன களம் ஆக்குவாய்,
ஏந்து தளம் விரித்து வியாபம் நோக்கி,

நொந்த ஈழத் தமிழின நுகர நீ நூற்பாய் தனிப் பாதை
வெந்ததெல்லாம் வெளி வானிலிருந்து உன்
சந்தம் வியாபிக்கும் ஆத்ம சாந்தி உனை ஆராதிக்கும்.
பந்தம்,தமிழ் பந்தம் உன் பாசறை நிறைக்கும்.
பாரினில் பூக்க தமிழீழம் பாசாங்கற்று பயனாற்று.

தமிழக உறவுகளின் பாசமிகு உணர்வதை
வதைக்காத,விதைக்கும் வியல்பம் கொள
புதைந்ததெல்லாம் புத்துயிர் பெற்று
பூக்கும் புன்னகை உன் புவனத்தில் ஓர்
பூங்காற்று வீச பூவான மென் உளம் கோர்த்து,

ஆவன செய் அவனித் தமிழினம் உன்
அகம் வாழ்த்த,கடமையை,அந்த கண்ணியத்தை,
அதனூடு ஒன்றும் கட்டுப்பாட்டின் உதய ஓங்காரத்தை
உன் மத்தம் கொள்,
உதிக்கும் தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்