சனி, 18 ஏப்ரல், 2009

சலிக்காமல் தீ முட்டிய என் தேசத்துறவே,


புனிதா,பரமா எவ்வித சுயநலமற்ற,
தேச யோகியே!தன் சுயமகற்றிய சுதேசியே!
உன் இணையற்ற இந்த யாகம்
ஜெயிக்குதோ? இல்லையோ?
யானறியேன்!

ஆயினும்,ஆதங்கம் எம் அகமாக!
நோற்ற எண்ணம் தேற்றவேண்டும் ஊற்றாக உறுக்கும்
மாற்றம் வேண்டும்,நாற்றெடுத்து,நீ
ஈத்த விதையின் வீச்சு விஸ்வரூபம் எடுத்தாள

தேசங்கள் அதை சர்வமாக்கி
இறப்பெய்து,இழக்கவேறின்றி வேகும் எம்
வன்னியின் வாழ்வு சிதைப்பகற்றி,சிறு ஆசுவசாமேனும்
கொள!

பயங்கரவாதியாம் மகிந்தாவின் வால் தொங்கி
வளம் சிதைக்கும் இந்தியனின் வர்ம முகம் விலக வேண்டி,
சலிக்காமல் தீ மூட்டிய
என் தேசத்துறவே,

உனதான சாத்வீகத்தின் சங்கதிகள்
வெறும் சந்ததி மட்டும் சாற்றாமல்
பெரும் கனதியான,
பாதிப்பொன்றை பதிவு செய்ய,
பாதகமற்ற நியமம் கொள்ள,

நீதி எப்போதும் நிலை தடுமாறாது,ஆயினும்
அது அசிரமாய் அகன்றகலாது,சாதிக்கும் ஆற்றல்
மேவ சாந்தமாய்,சலனமற்று மெளனம் காத்து
பெரும் நெருப்பெறிந்து உன் சந்தி வரும்,

அதுவரை!
சலனங்களையும்,சபலங்களையும்,வெறுப்புக்களையும்
உன் மனமொப்ப!
மாற்று ரூபம் தரித்து,மயம்கம் ஆக்க வரும்,
செய்திகளை,திரிப்பெடுத்து மாற்றங்களை ஊட்டவரும்,
மாய ஜாலம் கூட்டி வர கோலம் கொள்ளும்,

நிபந்தனைகள் நின் வாசல் வரும்,
நிந்தனைகள் சூட்டி உன் நிறைவில் ஊனம் சூட்டும்
இத்தனை முயல்வுகளும் ஊனம் வடிய பயங்கரவாதியாம்,,
மகிந்தாவின் எடுபிடி,நாய்க்கூட்டமொன்று,தங்களையும்
தமிழனென்று?

நாமம் பிறப்பில் மட்டுமே,என்ற தாக்கம்
தரித்த தரித்திரங்கள் எம் விடிவெள்ளியில் விழர்ந்த
கரும் புள்ளிகளின் கருமம் தாயக வேள்வியை தாக்கி தாங்கி,
தங்களையும் ரட்சகர்களாய் ரசம் சூழ உனை புணர்வார்,

புரியாத சங்கதியல்ல உனக்கு,
ஆயினும் சஞ்சலங்களின்,
வன்மம் சாற்றிய சாதூரியங்களை ராஜரீதியாய்,
ரணம் சுனைப்பாய் ராக லயத்தை லாவகமாய்
சிலாகிப்பாய்,
சிதிலங்களை சினமகற்றி சீராக்கும் உன் சிரம்
சுமந்த யாகம்,
உனைச்சுற்றி எப்போதும் உளம் கொளும்

இளையோர் உலகம் உனைத் தாங்க
உன்னதம் கொள்ளும் உன்
உன்னத நோக்கம் தரை கொள்ளும் சாக்காடு
சடுதி மாற்றமாக்க சார்ந்திருக்கும் எங்கள் தாகம்

உலகம் கொள்ளும் அடுத்த உலா ஒழுங்கமைப்பு
உலகத் தமிழர் எதிர்பார்ப்பு.
உவகையா?
இல்லை மீண்டும் உகர்ப்பா?
ஏதோ முடிவொன்று
முடி சூடும் நாள் வெகு தொலைவில்லை. உன்
நாதம் கோர் நாயம் நவிலும்,
சேதியும் தொலைவில்லை.

எவர் மனச்சாட்சி எதைச் சார்ந்து அறமாற்றும்?
விடை தெரியாக் கேள்வி மனம் கொள!
தடை தாண்டி வெற்றி கொள்வாய்.
தாகம் தீர்க்கும் தண்மை மொள்வாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்