வியாழன், 16 ஏப்ரல், 2009

பயங்கரவாதியே நீ எந்த படுதலம் பரவ?


பார்வையிலே ஓர்மம் சுமந்து பேரழிவுப் பயங்கரவாதி,எந்த
போர்வையை சுமந்து போக்களம் ஏவுகின்றான்?
தேர்தலுடன் தோய்ந்திருக்கும் தோய்மனத்தில் தோதாக,
பார்தலம் பார்க்க கொடும் பாவிகளுடன் மோச நடை.
வேர்த்துப் போய் விடக்கூடாதென்ற வேதனையின்,
வெப்பியாரத்தை,
ஒப்பீட்டளவிலும் ஓம்பக்கூடாதென்ற,
கெப்பறையின் கொப்பறை கொதிநிலையின் கொடுமை.
கொஞ்சமும் விஞ்ச விடக் கைகூடும்.
கள நிலை கைமாறும்.

வெஞ்சமரில் வென்றதெல்லாம் வேகிப்பனிப் பைகளாகி,
மஞ்சம் தந்த மயக்க நிலை மங்களமாய் மங்கிவிடும்.
தஞ்சம் கொண்ட கோடரிக் கொம்புகளும் கொக்கரிக்கும்..
கோர்த்து முகை விடும் கோரமுகி எண்ணங்களை,
யாத்தவர் வென்றிடவா வன்னி நாம் வந்து நின்றோம்,?
யாத்தெடுக்க வெற்றி இன்னும் நாழிகையில் நம் வசமென
போர்வெறியை ஏற்றிடவே போர்வையுடன் இவன்.

தமிழர் தாம் சிந்திய குருதி வாசம் மொந்திடவே,
புத்தனிற்கு ஈந்து தந்த நரபலியால் சாந்திடவே,
தமிழரின் ரத்தமென்றால் தகமை கொஞ்சம் மேலாண்மை,
கொள்ளும் என்ற கொக்கரிப்பின் வக்கரிப்பின் வைரியமாய்,
பயங்கரவாதிகளான பரம்பரை சிங்களவனிற்கு வெறியூட்டி,
வேகம் கொள, கொன்று குவி எனும் யாகம் கொலுவரிக்க,
தாகத்துடன் தரை மிதித்தான்,
வன்னி மண்ணின் வலு குறைவாம்,
என்றெண்ணி ஏகாந்தம் கொள அவன் படை சார்ந்தான்.

வீசும் காற்று என்றுமே திசை பார்த்து,
ஓர்மமாய் வீசாது.
காசு பார்த்து கலகலக்கும் காற்றல்ல எம் தேசக்காற்று.
தீயாய்,துவம்சித்துய்த்து,
விழலின்றி வீச்சுப் பெறும்
பெறு பேறு எப்போது?

பார்த்திருக்க!
பெறும்,
வியூகம் விதிர் விதிர்க்க வீசப்போகும்
வீரியத்தின் விசை பார்த்து விசனத்திலும்,
நம்பிக்கையின் நகலாய் வன்னி நிலம்

இத்தனை இழப்புகளிலும் ஈழம் சமைக்க
ஈகத்துடன் இமயமாய் இறக்காத நம்பிக்கையில்
ஊனமான உடல்தான் ஆயினும்,
ஊனமில்லா உறுதியின் மொள்ளலுடன்.
வணங்காத வன்னி மண்ணின் வசமான
மைந்தர்கள்.வைரியே
அகம் கொள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்