சனி, 11 ஏப்ரல், 2009

எமையே மீண்டும் நீ கொய்வாயா? கொல்வாயா?


பதை பதைத்து நெஞ்சம் பதறிக் குதற,
பகை அங்கே விஞ்சி பாழ் வினையாற்ற,
முகை இழந்து இங்கே முடமாகிப் போவோமா?
முதுகெலும்பு இறைந்து முகம் மாறிப் போவோமா?

இதைத்தான் இனவாதி பார்த்து நின்றான்.
இழைந்த உசாத்துணையும் இணைந்து நிறைந்தான்.
உழையும் உள்ளத்தை உதிரியாக்கி,
தழையும் தமிழுணர்வை தரவையாக்கி,
விழையும் வினையை விதைத்து நின்றான்.

இழவுகள் இறைத்து புதைத்து வைக்க,
இந்தியக் கைக்கூலியை இறக்கி வைத்தான்.
இதயம் புரியா இனவாதி கன்னடன்
அவனாய்கைகொடுக்க,
கயமைகள் களம் சார்ந்து புணர்ந்திருந்தான்,எங்கள்
உறவெலாம் உரமாய் புதைத்துளர்ந்தான்.

ஒவ்வொரு நொடியும் இழவு விழும்,எங்கள்
இனமழித்தே கணைகளெல்லாம் இறுதியாக்கும்,
சுய பரிதாபம் ஒப்பவா நாம் இங்கிருப்போம்?
சுயரூபம் விரித்து சுழலாவோம்,சுதந்திர
தீபம் ஏற்றவே தினவெடுப்போம்.

சர்வ மெங்கும் அணியானோம்,எங்கள்
சர்வாங்கங்களை அங்கே சதிராக்கினோம்
பூர்வ நிலம் தாங்கிய பூர்வீகக்குடிகள் அதை
புலமாக்கி,
புலரும் தமிழீழ தேசத் தேவையை அணியாக்கி,

நெடிய துயர் தாங்க முடியாது,நெடி துயர் மாளும்,
நிலை வேணி,
இன்றே,இப்போதே முறையாக்க!
தலை சாய்க்க வேண்டி சர்வமான துணை கோரி.

காரும்,
அரூப நிலைகாட்டி கழிக்காதே,அர்த்தமான
சொரூப ரூபம் தானாக்கி,.தமிழர்
உருவ நிலைதனை உருக்காமல் உயிர்
தருகத் தகமை நீ தாங்கவேண்டும்.
செய்வாயா?இல்லை எமையே மீண்டும் நீ
கொய்வாயா? கொல்வாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்