திங்கள், 27 ஏப்ரல், 2009

தீதெய்தா நல் நம்பிக்கை கொள்வோம்


ஆடுதளத்தின் அரக்கர் கூட்டம் அகற்றப்படவேண்டியது,
நாடு தளத்தின் நன்னிலையாகும்,வெற்று வார்த்தைப் பலத்தில்,
குடும்பி கட்டும் குரல் வளை மாற குவலயம் குதிரும்.
வெதும்பி தமிழினம் வெந்தங்கே சாக்காண ஈன இந்தியன்
ஆங்கே குதூகலித்துக் களிப்பதோ?

ராஜீவின் பரம்பரை சொத்தா பாரதம்?,பாவி
மேவி எம் மண்ணில் குவித்த ரணம் ஆறுமா?
பாசிசம் படைத்தவன் பாசக் கயிறதை பரப்பி,
மோசம் கடைத்த வன்மம் கொஞ்சமா?உந்தன்
ஆசியைக் கடைந்து ஆற்றும் சிங்களம் பழி மொள்ள,
இத்தாலி மொண்டைச்சி மெத்தன மாற்றவா?
ஈழத் தமிழினம் இறைஞ்சிங்கு சாவதா?

தமிழகமே!
தங்கள் தடகளத்தில் இன்று அவசர
மாற்றம் வேண்டும்,
இதை ஆற்றி அவர் வஞ்சினம்மாற்றவே,வெங்களம்
ஆங்கு வெகுசனமாய்க் குவிக்கும்,
இந்தியன் ஆற்றும் சுடுகலப் பிரசன்னம்,அது சார்
கள பிரயோகம்,கருவிகளின் கவீதுகளும்,கடல்சார்
உசாத்துணையும்,உசுப்பேற்றும் உபகரணங்களும்,

ஓய்வு நிலை கொள்ள சிங்களன் அதன்,
ஆய்வு தளம் இழந்து,
மாய்வெய்தும் மகத்துவம் திகழும்.
வார்த்தைகளின் வாசமங்கே, தினமங்கே தினவெடுக்கும்,
ஈழ சாக்காடு ஏந்தியே தேர்தல் களம் ஒருங்கிணைக்கும்,
மாள,தினம் எங்கள் இனம் மாள இவர் ஏற்றும் பதவிகளில்,
நாளும் மாறும் இவர் வாக்குறுதி மாற்றி எமை தீண்டும்,
கொலைக் களத்தில் மாற்றம் வேண்டும்.இதை வேகும் வார்த்தை
கொண்டு நீ கையாளமல் கொள்ளும் செயல் வேண்டும் அது
உடனடியாக நிகழவும் வேண்டும்.


போதும் ஐயா!
தாய்த் தமிழகத்தின் தொப்பிள் உறவுகளே!
எங்கள் இறப்புக்ளின்,இழப்புக்ளின்
வேதனையின் சாரமும்,
அதன் சாயலும் இனியும் எங்களகம்
இதைத் தாங்கும் சக்தி இல்லை.
தங்கள் ஆசனத்திற்காக எங்கள் ஆஸ்த்தான சபையை

அவலப்படுத்தி எங்கள் எந்தையர் ஈழ
நிலமிழக்க,உங்கள்
ஆசனங்களை அலங்கரிக்கும் இந்த
கரிய நிலை வேண்டாமே,
எங்கள் உதிரம் சொரியும்,ஊனம் வழியும்
உறவும் அழியும்,தவிர்க்க நீ
கதிர் களமாம் தேர்தல் களத்தில்
எங்கள் நிலம் விழுங்கும்
நீலியரை தளமிழந்து மண் கவ்வ நீ
மதி தழுவும் நீதி எடு,
தமிழர் உணர்வதை கொள்ளாமல்
உரமாக்கி அவர் நிலம் மீட்க நீ
உளவுரண் ஏற்றி நில்லு,எங்கள் மன
வளம் வரைந்து வெல்லு.
ஆரியர் கூட்டத்தின் ஆக்கிரமிப்பல்ல,
இது ஈழத் தமிழினத்தை
அழிக்கும் வேட்டை,இந்த வேட்கை,
மற்றும் புத்தத்தின் மண்
ஆக்க ஆரியம் கொள்ளும் மன ஆட்சி,

திராவிடத்தின் திடமழிக்கும் திடசங்கற்பம்,அவர்
இருப்பழித்து,உளவுரணழித்து,ஈழ நிலம்
சிங்களமாக்கும்
கள நிலையின் கைங்கரியம்,
அரச மரம் நாட்டி ஆங்கு புத்தன் சிறு நீர் கழிக்க
குந்தினான் என்ற கூச்சல்,
குலவினான் ஆங்கே என்றொரு
குதூகலம்,
உருவாக்கப்பட்ட மகாவம்சத்திற்கான
ஆதாரத் தடயம்,வழி தேடி,
அது எங்கள் அன்னையர் நிலத்தடியில்
நுகம் கொள்ள,
எந்த வரையறையும் இல்லாத வஞ்சகம்,
அஃதின்றி வேறென்ன?
தங்கும் அவன் தடம்?இல்லாத ஒன்றை
உருவகிப்பதன் சிரம்,
சிங்களவனின் ஆதங்கம் அதனால்
இன்னமும் ஆங்காங்கு
உருக்கொள்ளும் புத்தனின் பித்தமேற்ற சாகரம்,

சகிக்க முடியவில்லை இந்த அரச பயங்கர
வாதத்தின் அநாகரீகம்
மதிக்க தமிழினம் மகுடம் சூட்டி எங்கள்
நிலம் தரித்த அந்த நிஜம்
வேண்டும் எங்களிற்கு,

இந்த ஆரியத்தின் ஆக்கிரமிப்பற்கு ஓர்
ஓங்கார ஒழிப்பது வேண்டும்.
அதை எம் தலைவன் தாற்பரரிப்பான்,எம்
தாய்க் கொடியே அந்த தகமையை
அங்கீகரிக்க வைக்க நீ மூசி உன்
பங்களிப்பை எங்கள் தளமாக்கு.
ஆதலால் அந்த நிலை தழுவ இன்று
அரங்கத்தில் நரவீச்சிருக்கும்
பேய்கூட்டத்தை பேதியாக்கி மீண்டும் தலை
காட்டா தார்மீகம் உங்கள் வசமாக வாசமாக்கு.

ஆயின் ஈழ நிலத்தையும் பங்களிப்பாக்கும்,பயன் தரு
பாகமாக்கும் பசுமையான உணர்வுகொள் உதயங்களை,
உந்தன் தேர்தலில் தெளிவாக்க,எங்கள் மண் செறிவாகும்.
பகை புலமகற்ற
வழிகாட்டி,வளமாக்கு.

வரும் வசந்தம் எங்களின் வாசலில்
தரும் சுகந்தத்திற்காய் வீச்சுடன்,போர் முகம்
தரித்திருக்கும்.
இஃதின்றேல் ஈழ நில வள(ர்)விற்காய்,
வாகை சூடா வகை இழந்தான் தமிழன்,
அதற்கு தாய்த் தமிழகமும் சாரமூட்டினான்
என தமிழ்த்
தாயின் கண்ணீரில் காலமெலாம் தமிழகத்
தமிழினம் துயர் துடைக்க மார்க்கமின்றி!.

புவனத்தில்
அகழ்வாராட்சியில் தமிழர் தம்
போராட்டமென எதிர்கால எம் புலர்வாழ்,
சந்ததி வரலாறு படிக்கும்.
துணை போகாத் தமிழகமென உன் அகமெரிக்கும்
ஆராட்சிகள் மட்டுமே ஆதங்கமாய் அலங்கரிக்கும்.
அவதானி,எங்களை அரங்கேற்றி
அவனத்தில் வலம் வர ஈழநகை தழுவ
தலைவன் கரம் இறுகப் பற்று
இழைவாகும் ஊனமற்ற ஈழ நாதம்.

உன் அகம் நிறைவாகும்,
ஊனமது சுரக்காத உன்னத வயல்
புளகாங்கிதம் கோர்க்க உளங்கள் எலாம்
சுதந்திரத்தின் சுகானுபவத்தின் செய்யுளாக,
சேமமான தேசங்கள் அடைகாத்த சீர் வியக்கும்.

இன்று அம்மையார் ஆமோதித்தா?
வாயார மனமார?
இந்த நிலை எங்கள் ஏக்கத்தின் தேற்றம்.
தாங்கு நிலை தகமாகும் ஆசனம் அவாள்
வசமாக,
தாக்கப் பிடிக்குமா?தான் ஈய்ந்த
வார்த்தையின் வாசம்,சுவாசம் சூட்டுமா?
துய்த்து ஈழவர் துயர் தூய்மையாய்
அகமெடுத்து
ஆற்றினால் தேறுவோம் அஃதின்றேல்,
அழ்ந்த வார்த்தையின் சுரமவள் மாற்றி,மீண்டும்
வரமதை மறந்தால் வன்னியிலென்ன?
வையகத்தில் தமிழனை!,
வேண்டாம் தீதெய்தா நல் நம்பிக்கை கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்