ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

வியூகம் விதைக்கும் வீரியம்.


நிதம் தோறும் வதை முகம்,எங்கள்
தலம் தேக்கிய ரத்த வாடைகள்,அழு
தணலில் எல்லாமே ஆங்கு அறமிழந்த
நம்பிக்கை அகமிழந்து அரற்றும் ஆவணம்
யார் அதை ஏறிட்டார்?
எந்த மனிதம்
மானுடம் காத்தது?
எவன் எமை ஆற்றினான்?இல்லை தேற்றினான்?

ஏற்றய செவிகள் எலாம் எமை நோக்கி,
கருவிகளை எலாம் களைந்து காடையனிடம்
கை ஏந்தவே கட்டியம் சாற்றியது.எமை
யாருமே புரிந்து கொள திருவுளம் கொளவில்லை
கொல்ல மட்டுமே,கருவிகளும்,காப்பகங்களும்,
அரவணைப்பாய்,அதன் சாரமேற்றி,
ஊற்றெடுக்கும்,உறவுகளையும்,யோசனை சாற்றியது,
அதன் பால் பயங்கரவாதிகளின் பாதமேற்றி எமை
பரம பதம் ஏக்கியது.

சற்று முன்வரை, சடுதியான
எமை மேலும் சவக்காடு
ஏற்றி சகம் ஏற்றும் சப்தமற்ற
முகாரி,முண்டுகட்டி
சகாயம் கொண்டது சர்வம் அதை சுகித்து
சுமை மீட்டியது,
இன்னமும் எத்தனை சிலுவை சுமப்பது?
அத்தனையையும் யுகமாய் சுமக்க ஆதங்கம்
தங்க ஆற்றும் அத்துணை உறவுகள்.

போர்க்கொடி சுமந்து புவி வலம் வந்து,
அவலங்களின் அத்துணை வலியையும்,
வையகம் முன் வலிமையாய் வைத்து,
வைரமாய்,முகத்தின் முகவரி கேட்டு,
நீதிக்காய்,நிரந்தர தீர்விற்காய்,நிம்மதிக்காய்,
நீர்ப்பயமற்றதோர் நியாயம் கேட்டதும்,

அத்தனையும் இங்கு வலி இழந்து போகவா?
இத்தனை அறம் ஆதங்கமாய் விதந்தது?
இரும்பொறை ஒத்த மறவர்கள் அங்கு,
வரும் பகை ஒழித்து தரும் எங்கள் நிலம் பூக்க,
சத்தியமாய் ஓர் சதுரங்கம் நகர்த்தி சாத்தியமாய்
எம் தமிழீழம் சமைப்பார். உறுதியின் உயரமது.
உயரப் பவனி பவ்வியம் பகர்,பாரில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்