வெள்ளி, 10 ஏப்ரல், 2009

பூபாளம் இயங்க புன்னகைத் தேசமாய்

சிராய்ப்பு கொள உளம் கூடுமோ?
உராய்ப்பு கொண்ட களம் மீளுமோ?
வீராப்பு கொண்டே தளம் சூழவே,உன்
வாரய்ப்பாய் பலம் கூட்டுவாய்,அந்த
மராப்பாய் மனம் ஏகுமே,வளம்
கூராய்ப்பாய் குலவிக் கூவுமே.

வன்னியின் உறவு தினம் களச்சாவாய்,
அன்னியன் தரவு கனம் மனச் சாவாய்,புலம்
கன்னியாய் எண்ணி கண்ணீர் சாவாய்,உன்னி
குன்னிக் கூனி மனப் பாளம் வெடிக்கும்,வெந்து
மென்னி குறண்டு இனம் வரண்டு பலம் வெடிக்கும்.

விசக்குண்டு ஆங்கு வீசி விளரி இனம் சாக
மலக்குண்டு வீசி அன்று தோற்ற ஆரியம் இன்று
இலக்காய் எங்கள் இனம் மீதொரு இரசாயக்குண்டு
பரீட்சித்து பார்க்க தமிழர் வானரக் கூட்டம்தான்,
வரிகள் தந்த யதார்த்தம் இது.

வதைத்து இந்தியன் களமாக எங்களினத்தை
வாரி புதைத்து வகையாக தன் சூட்சுமத்தை சூசகமாய்
காரியமாக்க, தன் விஞ்ஞான வளமாக்க தமிழன் ஒத்திகை பாலம்.
எத்தனை உயிரை ஓரேயடியாக ஒதுக்கமுடியும் என்பதில்
அத்தனை லயிப்பு!

ஆக்கிரமிப்பின் வலி எமக்கு.
வலி மட்டும் என்றால் அது
வாகையான இருப்பெமக்கு,ஆனால்
அன்னைமண்ணில் அத்தனையும் பலியென்பதே
ஆதங்கமான கலி எமக்கு, ஆதாரமான புலிகளே
பலி என்பான் பாதக அரக்கர் இனம்.
பார் பதை,பதைத்து பலிக்கடாவாக
பாவியான இனம் அங்கு,பாதகர்களால்,
நரபலியான நாதியற்ற,பாதையற்ற பாவியர் தாம் எங்கும்.

பார் எங்கும் பரவிக் கிடக்கும் ஜனநாயக பாசறையே!
ஊர் பிரித்து,எம் உறவழித்து,விசவாய்வு விதந்தூட்டும்,இதயமற்றவர்களிற்காக,நீ
தாராளமாக தயவுகாட்டி ஏராளமாக எல்லாம் ஆ(ஏ)ற்றுகின்றாய்,எனில்
கார் ஆழமாக நாம் கருவி ஏந்துவதில் கருணையை எம்மில் நீ
பார் ஆக்கி பரிந்துரைக்கலாமா?

நாம் சுதந்தாரத்திற்காய் சுடு கருவி சூடும்
சுதந்திர, போராட்ட வீர்ர்களேயன்றி,பயங்கரவாதிகள் இல்லை.
எம் பாதை சமைத்து பாரில் பலமான பாலமமைக்க,
தோள் சுமக்கும் கருவிகளுடன்,தேசியக் கொடியுடனும்,
தேசம் சமைக்கும் எங்கள் தேசியத் தலைமையுடனும்.

தேகம் வீழ்ந்தாலும் சேதாரமாகாத தேசிய இனம்,
சூழசைத்து,,பாரம் சுமக்கும்,
புவனத்தில்!
பூபாளம் இயங்க புன்னகைத் தேசமாய்
பூமித் தளத்தில் பூங்காவியமாய் பூத்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்