ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

கன்னியின் காதல் போல் காந்தளமாய் கவரட்டும்

எண்ணம் ஏற்புடையதாயின் சிந்தனைகள் ஓங்கட்டும்,
கன்னம் இடமால் கம்பீரமாய் கலக்கட்டும்,
சின்னம் சிறப்பிட சிந்தாமல் சிலிர்க்கட்டும்.
வன்மம் வதியாமல் வகுந்தெங்கும் வனையட்டும்.
மென்மையாய் வருடியே மிதமாகி மிளிரட்டும்.

வன்னியின் நிலைகூட வதிவதாய் வகிடட்டும்,
கன்னியின் காதல் போல் காந்தளமாய் கவரட்டும்,
கந்தகக் காற்றகன்று காதோரம் கவியட்டும்,
எந்தகத் தாய்நிலம் ஏந்திழையாய் ஏகட்டும்.
எத்திசையும் இசைவாக ஏகமாய் ஏற்றட்டும்

அகதி வாழ்வின் அசுமத்தங்கள் அனர்த்தமாய்,
சகதி வாழ்வது ,விகுதியின் விருத்தங்களாய்,
விதிவதி பாழாகி விம்மலது கருத்தங்கலாய்,
பதிவதி போலாகி பசுப்பகங்கள் ஒறுத்தல்களாய்,
கதியது சீழாகி கலையட்டும் கார் மேகங்களாய்.

தெளிர்வான நீரோடையாய்,தேகம் சூட்டும் தேமாங்கமாய்,
ஒளிர்வான ஊரோடையில் மிளிர்வான மிடுக்குடுத்தி,
தளிர்ப்பான தமிழ்போலே தளிர்வோடு தழுவுவோமே,
விளிர்ப்பான வியல்போடு விழுதெறிந்து விரிவோமே,

களிப்பான எண்ணம் ஐயா,காண்போமா வையம் தன்னில்.
நெளிப்பான நிலை இருக்கே,நெக்குருக்கி அகம் இருக்கே,
சுழி(ளி)ப்பான (சு)ஒட்டப்பனும்,சுகிப்பதற்காய், தன் சுகத்தை,
சுழல் மாற்றி விட்டானே சுட்டதுவே தமிழீழம்,
எட்டிடுமோ இந்த லயம் ஏறிடுமோ எங்கள் கொடி?

நெருப்பெறிந்து எதிரியவன் எங்களகம் வந்தாலும்,
விருப்பெறிந்து வந்தானா?வில்லங்கமாய் விழ(ழு)ப்புண் ஏந்த,
உருப்பெறிந்து,உயிர் விதையெறிந்து,உயிரான ஈழம் மீட்க,
கருக்கொண்ட கனல் மூசிப் புலிகள் களம் காக்க,
உறுப்பெறிந்து ஓடுவான்,உயிர் காக்க அவன் நாணுவான்,

தெரு காக்கும் நாய்கூட அவன் முன் அசுரனாகும்,
திருவாக இவனெங்கே? தினவெடுத்து தினமிருப்பான்,
திருநாளது உருவாக அருக்கொள்ளும் இவன் வாழ்வும்.
செழிப்பான செயல் விரித்து, விழி எறிந்து வியப்போமே,
வாளிப்பான வயல் அகன்று வகுந்தெடுப்பான் தமிழீழம்
ஆழியன் பெயர் பிரபாகரன் அதுவே எங்கள் பிரம்மாசுரம்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்