ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

வருவார்கள்,எங்கள் காத்திர,சரித்திர நாயகர்கள்


மனரூப ஆதங்கம் மனித முகங்களின் முகவரிகள்,
மாறுபடும் நிலை எய்த மாற்றம் கொள்ளும் யதார்த்தங்கள்,
தேவை கருதி தன் சுருதி மாற்றும் இயங்குதளங்கள்,சுகம்
நாறும் எனிலும் தன் இனம் விற்கும் சுதேகிகள்,இந்த தன்
நிலை சாற்ற,சார்ந்தவர் மன விகல்க்க விசுக்கல்கள்,
கல,கலக்க மாய்ந்திருக்கும் மன விகாரிகளின்,சல,சலக்கும்
சத்தியமற்ற சாரல்கள்.

இத்தனை விதைகளையும்,இவராக்கி இனம் விற்றெனினும்
சத்தென்பதாய் தன் வாழ் விரிப்பார்,இனம்
பாழ் நிலை பதப்படினும்,
நாய் விசித்த வால் அதன் குலைப்பு,எஜமான விசுவாசம்,
அதன் வாசம் சுகிக்கும்,மோகம்,அதன் வயப்பட்ட லீலைகள்,
தன்னகப்படுத்த இனம் சாக்காடு விரித்தாலும் தன் இலக்கற்ற
இலக்கில் இயங்கியே எங்கள் இனம் வித்தான் பயங்கரவாதிகளைவிட
இவன் வசக் கந்தகம் வாரி,பூக்காட்டில்,புன்னகை பறித்து,
புனல் வசந்தம் கருக்கி,வளமெலாம் வழித்தெடுத்து,வாழ்வெலாம்
கரித்துடைத்து,கசியும் குருதிக் கூட்டில் குலவிக் கொண்டான்,

எனினும் எய்த சுகம் சாற்றுவானா?
எட்டிய இலக்கதை கொய்தானா?
சுட்டி நிற்கும் யதார்த்தம் சுவைத்தானா?சுமை
கொண்ட மக்கள் இதயம் கொண்டானா?ஆயின்
இவன் ஆக்கிய அழிவுகள் வலம் வருவதை வகுத்து
எந்த குறி இவன் எங்கள் ஈழ மண்ணகப்படுத்த மையம் கொண்டான்?

புரியாத புதிர் இவன் அல்ல எங்கள் தகமை.
இவனிற்கு, இவன்சார் இரண்டகவாதிகளிற்கு, ஊனமுற்ற
உள்ளகம் கண்ட யோக்கியமற்ற, ஈனவாதிகளிற்கு,ஈழம்
காத்திருக்கும்,நூற்றிருக்கும்,பாகம் இனியும் தெரியாது,
அது அப்படியே வீற்றிருத்தல்,துரோகிகளிற்கல்ல எங்களிற்கே அழகு.
ஏற்ற தலைவன் களமாற்றும் நூதனம்,அவன் எழுதும் ஈழ சாசனம்
ஆஸ்த்தான சபை கொலுவிருக்க, ஆழுமைமிகு பட்டறிவின் பாதை,
வலுவெடுக்கும் வகை யாத்த சீர்தளம் சிந்து பாட,சிலாகிக்க சிந்தை கொள்
விந்தையின் வீற்றிருக்கை விசையாகும்,விதை வியாபிக்கும்
காலம் உன் வாசலில் காலப் பிரசவம் கண்கொள உன்
காலம் உன் கையகம் உதிர்ந்து சவக் காட்டில் நீ சாரமற்ற பிண்டமாய்.

வருவார்கள்,எங்கள் காத்திர,சரித்திர நாயகர்கள்,
பாரது பண்ணசைக்க,பாரில் தமிழ்க்கொடி இழைய,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்