புதன், 22 ஏப்ரல், 2009

மானிடத்தை மதிப்போனே!


எல்லைகள் நீண்டிருக்கும்,எங்களக
தொல்லைகள் போல்!
உலகத்தாள்வாரின் உள்ளமுமா?
கொண்டிருக்கும்
கொலைஞர் கரம் பற்றி,
கொள்ள நீதி கேட்டிருக்கும்,கொலுவிழந்து
தள்ளாமை,தாங்காமல்,தனித்திருக்கும்,நிலை காண
தமிழினம் யாக்கும் நீதி வலுவிழந்து,
தரணியற்றுப் போவதற்கா?,பாரது
வழி வகுக்கும்.

வெல்ல வழி சகமிருக்கும்,
வேதம் அது அகமிருக்கும்,
சொல் தவிர்த்த தகமையது,
வல்வழைப்பை,வழிமறிக்கும்,
வாகை சூட வகுத்திருக்கும்,
வல்லமை வயம் கொள்ள,
வையகமே வழியைத்திற,

எத்தனை உறவிழப்பில்,
உந்தன் அகம் விழிப்பெய்தும்?,
உரிமை,மனித அவலம்,சுதந்திரம்,அதன்
சூட்சுமம்,
இத்தனை பாதையையும் நீயும் கடந்தே
இந்த நிலை எய்தியுள்ளாய்,வரலாற்றை
நினைத்து எழுது.

வரிந்ததை,
எங்களை தடைத்ததை,நீ
உடைத்து விட்டால்,
மானிட உரிமையை,நீ மதிப்பதை
அங்கீகரித்தால்,எங்கள் பாதையை நீ
அங்கீகரித்தால்,

கரிப்பது அற்று,இதுவரை கரைத்ததை விதைத்து
உரிய நிலை கொள்வோம்,உண்மையை புரிந்த நீ
பரிந்துரை,பார் நீ
பகையில்,புதைந்ததெல்லாம்
புத்துயிர் எய்தும்,பூம்புனல் பாயும்,இத்தனை
வித்தகமும் வீரியம் பெற எம்மை புரிந்து கொள்.

இந்த மானிட அவலத்தின் தாற்பாரியத்தை,தமிழினம்
தாங்க முடியாத,இனியும் ஒட்ட முடியாத மார்க்கம் தரித்ததை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்