ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

விரிந்திருக்கும் பாதையெங்கும் விஷமிருக்கும்,


களம் கடந்த வன்முறை புலம் பெயர் நாட்டில்
தளம் திறந்து கொண்டதே,இதை மனம்
திறந்து ஏற்பதா?இல்லை,முளையிலேயே
உறந்தறுப்பதா?மாற்று வழி ஏது?ஆயின்
மார்க்கம் யாது?

யேர்மனியில் அராஜகம் கத்தியின் செருகலால்,
நுகம் கொண்டு,பிரான்சில்,லண்டனில்,
இன்று பூமிப்பந்தின் தொடக்கப் புள்ளியெனப்படும்,
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் மையங்கொண்டதை,
அகம் எப்படி மையப்படுத்துவது?.

தளம் திறந்த தர்க்கர்க்கே தம் திறன் காட்டாமல்,
உளமுடைந்து,உணர்வடக்கி,சினம் செதுக்கி,சீற்றம்
ஆழப்புதைத்து, அருகி வந்த எம் மண்ணின் மைந்தர்களே,
பொறுத்தருள்க

பொருது களத்தில் மண் மைந்தர்கள் பொங்கி
உழுது, உருப்புடைத்து,உறையவைக்கும் ரணம்
சொடுக்க இங்கு ரசம் குன்றும் இந்த
ராட்சதர்களின் ரட்சகம்.சாரம்சயனிக்கும்.

புலம் பெயர் நாட்டில் எமதான
பலம் காட்டி எமை நாமே சுருக்காமல்,
இன்னமும் அகம் வேகம் கொள, அணியங்கள்
திண்மையாய் திறனாற்ற..உறுதி கொள்.

உளவுரணில் கைவைக்கும் இன்னோர் வகை
புலவுரண் இது,எமை பணியவைக்க இது ஒரு பாணி
களவுரணில் களம் காண முடியாதவர்களின் மனச்,
சிதைவின் மறுபக்கம்,

தோல்வி எங்கே புலத்திலும்,
தமைத் தழுவி, தகம் சுணைந்து, சுரம் குன்றி, யுக நகையாகி,
யுத்தம் களம் கழுவி,நழுவி, பழம் பாலாகி பணிந்திடும்
பாரில் ஈழநகை புரிந்திடும் என்பதான தகளிப்பு.

புலத்திலும், தமிழீழப் புலிக்கொடி புன்னகை பூச்சூடுவதை,
வலத்திலும், தன் ஆக்கிரமிப்பின் அடையாளம் புதைவதை,
கல(க்)கத்தில் ஊட்டி எம் களப்பணியை கரைப்பதில்,
நுகத்தில் எம் நுதனங்கள் நுகப்பதை,நீண்ட முடியாத,
இனவாதிகளின் இள(ழ)க்கமான இதயவலிகள் இவை.

போர்களத்தின் கோரமுகம் உலகாட்சி கொள்வதை,
தருக்கர்களின், சாரமுகம் சாட்சியாய் சர்வமாவதை,
அரக்கர்களின் அட்டூழியங்களின் அரக்கத்தனம்,
பூமித்தளத்தின் புலமெலாம் புணர்வதை,
அகம் கொள்ளமுடியாத ஆற்றாமையின் தாளுமை.

முகங்கொள்க
தமிழ் மணங் கொண்டவரே.
தளராதீர்,தகவும் முகம் கொள்வீர்,
உலாவரும் உறுதுணை கொள்வீர்.

விழ,விழ எழும் வீரியம் நுகம் கொள்க.
விழாத நகை கொள்ளும் முகம் கொள்க,
தளராத தலைவனின் தகம் கொள்க,தானைத்
தலைவனின் தர முயற்றும் தாகம் கொள்க.

இன்று, நீ ஏற்ற இகழ்ச்சியின்அனுபவம்,
உணர்வுள்ளம் கொண்ட தமிழீழத் தமிழர்களின்
உளவுரணின் இன்னுமோர் நீட்சி.
ஒன்றுமட்டும் உறுதி கொள்.
சுய இரக்கம் மட்டும் சுரக்காதே,சுகிக்காதே,
எவரும் எமக்கான அனுதாபம் ஆற்றவில்லையே
என்பதான ஆதங்கம் அரற்றாதே.அகட்டாதே..

விரிந்திருக்கும் பாதையெங்கும் விஷமிருக்கும்,
திரிந்திருக்கும் உறவிருக்கும்,
பரிந்திருக்கும்,எமைப் புரிந்திருக்கும்
பூபாளம் கூட பூப்படைந்திருக்கும்.ஆதலால்
ஏற்ற துறை தேர்ந்தெடுப்போம்,உற்ற
துணையாயிருப்போம்,

அற்ற உறவெல்லாம்
அடைத்து உரிதான உளம் வேணுவோம்.
விரிவான,பரிவான பகலவன் பாகம் சூடுவோம்.
தெரிவான ஈழ நகை சூட,உரிமையான திறன்
சுரப்போம்,உளவுரண் பேணி,
உரிமைப்போர் தினமெடுப்போம்,தீண்டாத,
பரிதி பணிமுடிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்