ஞாயிறு, 3 மே, 2009

நாய்கிருக்கும் நல்ல நீதி நமக்கில்லையா?

பாரெலாம் உன் முகம் பூத்தபோது,
நம்பிக்கை கீற்றொன்று உதயமென,
ஆதங்கம் மனச்சொரிய உளம் தளைந்தது,
வெள்ளை மாளிகையில் கறுப்பு தங்கமென,
கடிதான அடிமை சங்கிலியின் கனம் புரிந்து,
மனம் ஒன்று மாளிகையில் வாசம் புரிய,
மனிதம் மீண்டும் துளிர்க்குமென மயிலிறகாய்,
உளம் தடவி,உறவுகள் ஈனமகன்ற ஊக்கம்.
தடவி உற்சாகமாய் உனை பவனி பதவி நீ ஏற்றபோது,
பவ்வியமாகவே பகடற்று பாரேற்றது.

ஆயின்,
உன் புதல்விகளுடனும்,
புளகாங்கிதம் சுரக்கும் உனதான மனைவியுடனும்,
புடை சூழ நீ மெருகேற்றும்,
படோடபம் ஊட்டும் உன் பொழுது போல்,
நீ உலவுவது சாலச் சிறக்கட்டும்,

ஆனால் ஞாலத்தில் ஓர் மூலையில் மனிதம்
இழந்து,மானம் அகன்று,மதி பிறழ்ந்து,
உற்றம்,ஊர்,சுற்றம், இத்தனையும்,
தழைத்த ஆதார குடும்பம் உறைந்து,
உணர்வெலாம்,சூடிழந்து,உவகை என்றால்,
என்பதன் அறிபொருள் அகன்று,


அன்றுதான் பூமியில்,
தனதான பிரசன்னத்தைக் கூட
குவியம் கொளவிடாமல்,
பிரசவ பலி சுமந்த பத்தினியையும்,
அதன் பிரதியீடான புதல்வர்களையும்,
உலகப் பயங்கரவாதியாய் மகிந்தா,
பல் குழல் எறிகணையால் பரலோகம் அனுப்பி,
பவனி வலம்கொள்வதை,
எந்த வதை மறந்து உனதான பணி மறந்தாய்.

ஐயா!
அகத்தின் வலிகளை எப்படி,
உன் மனத்திரை ஆக்குவேன்,ஆனாலும் என்ன?
அவனியெலாம் ஆழக் காலூன்றி,அகலக் குரலெழுப்பி,
அத்தனை விபரங்களையும்,விரல் நுனி ஆதாரமாய்,
இத் தரணியெலாம் முன் வைத்தது,
நிச்சயமாய் உன் முகவரியில் முகம் கொண்டிருந்ததை,
அலட்சியம் ஆற்றாமல்,ஆவன ஆற்றவேண்டும்,

கல்வியில் நீ ஏற்றமிகு ஆற்றல் உள்ளவனாம்,
அறிந்தவர்கள்,
ஆர்ப்பாரிப்பாக,அகம் நிறைத்து,உரைத்தார்கள்,
நன்று!
மனமிகு களிப்பு உன் அகமேக,
இத்தனை ஆற்றல் உள்ளவனே!

இத்தரணியில்,
தமிழீழம் ஒன்றொரு நாடிருந்த வரலாறு கற்றிருப்பாய்,
கற்றதை நீ ஆதாரமாய் உன் அகமேற்றிருப்பாய்,

அதன் பின்னான,
அத்தனை வரலாறும்.
உன் வெள்ளை மாளிகையின் மனக் கதவிகளிற்குள்,
மையங்கொண்டுள்ளதை,
மனிதாபிமான,சனநாயகத்தை,
தைரியமாய்,அவசியமான, ஆதார்சத்தை,
வீற்றிருக்கும் உன் வெண்சாமரத்தின் வலிமை மொண்டு

இத்துணை அல்லல்படும்,ஆதார சுருதி,
அறமறுந்து,வார்தைதகளிற்கு அப்பாற்பட்ட
ஈழத் தமிழின கதி நினைந்து,
காரியமாற்றுவாயா?

இல்லை மீண்டும்,
உன் வெற்றி குதூகலிப்பில்,
ஈழவல் வேதனை,
கரைத்து உன் குரல் வளையை,குதம் மாற்றி
எல்லாம் வழமையென்று ஏகாந்திருப்பாயா?

நீதியால் ஒரு நிலையை எய்தய்யா,
எங்கள் மீதுள்ள தடையையென்றாலும்,
தகர்த்தெறிந்து எங்கள் தகமையை,

உன் அகம் கொள்ளய்யா!
அது போதும் மற்றெல்லலாம் எம் மாண்பு கொள்
நிலம் கொள் உறவுகளும்,
தளம் ஊ(கா)க்கும் எம் புல உறவுகளும்,
பூவினுமினிய பூங்கரம் கோர்த்தெடுத்து,

பூக்க வைப்போம்,
எங்களகம் கொள்
தாய்த்தமிழீழத்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்