ஞாயிறு, 10 மே, 2009

ஆற்றுவதெல்லாம் இன அழிப்பே அற்றதாகுமா ஈழ விடுதலை நெருப்பு.



எங்களின் சர்வ சப்த நாடிகளும்,
உணர்வில் எஞ்சியிருந்த உயிர்த் துடிப்புக்களும்,
வாஞ்சை மீறி வதை முகமேற்றதே,
அஞ்சி,எங்களகம் ஆறாத்துயரால் வடியுதே.

சிங்கள கிராகிதர்களின் ஓங்காள எறிகணையால்,
எங்களக உறவெல்லாம்,குறியின்றி கொன்றொழித்து,
தன் களம் வென்றதாக இன அழிப்பை ஏற்றுபவன்.
எண்ணிக்கையில் அடங்காத என் இனத்தை சாக்காடேக்கி,
உடல் ரணம் உற்றவரின் இலக்களவு தெரியாத,

சவக் களம் ஆக்கியவன்,சர்வமாய் பொழிந்தங்கே,
என் இனத்தை இலக்கின்றி எண்ணிக்கையற்று,
கொலைத்தெடுத்து,உலைக்களம் ஆற்றுபவன்,
பயங்கரவாதியான ஆரியத்தின் படுதலத்தால்,
பாழடைந்து போயினவோ?எல்லாம்
தாழடைத்து ஏகினவோ?தமிழினமே அழிந்ததுவோ?

குண்டடித்து கொன்றான்,கொலை வலயமாக்கி,
வான் வல்லூறாய் வகை,தொகையின்றி கொன்றான்,
சகட்டுமேனிக்கெல்லாம் பல் குழல் எறிகணையால்,
பரந்தெங்கும் கொன்றான்.பாவி அவன் ஆக்கிர இனவழிப்பின்,
உச்சக்கட்ட கொடூரமாக உடலெரித்து,மூச்சடக்கி,
பிராணவாயுவின் பிரம்மம் களித்து விசவாய்வெறிந்தும்,
கொன்றான்.

இன்னவகை ஏதும் உண்டோ? அத்தனையும் தனதளமாக்கி,
இன்னாவகையாலெல்லாம் எந்தன் உறவழித்தான்.
சர்வதேசமெலாம் சாதகமாக சிங்கள வசமானான்,அதன்
சாதகத்தால் சிங்களவன் சாக்காடாக்கி,
எங்கள் சாத்வீக நிலமழித்தான்,இனமழித்து,
தங்கள் வசமிழக்க வைக்க,
இந்தியனே வன் துணையானான்,

எங்கள் வல்லமையை கொல்வதாவே,
வன்ம முகமேற்றான்,வதைபட்டு கொன்றொழிப்பதென்னவோ!
தமிழின சமூகத்தை மட்டுமே,வயதெல்லையற்ற
குஞ்சுகள் முதல் குமர் ஈறாக முதியோர் வரைதான்,
மாற்றீடில்லாததால் மருந்து முதல் உணவுவரை,
தடையாகப் போட்டான்,எவற்றிற்கும்,
வசியாத தமிழுணர்வால் எதையும் வன்னி தகமேற்றி நின்றார்,

தருணம் தன் வசமாகாததால் தமிழகத்தில் தேர்தல்.
வருணம் பூசும் வர்மம் வாசல் தேடி வருவதால்,
வரும் தேதிக்குமுன் தன் வசமுள்ள கருவிகளால்,
எம் களமெல்லாம் கருக்கொண்டு,
கொலைப் பட்டறையாய் கொலுவாக்கி வதைத்தான்,

ஈழ நெஞ்சகங்களை,
உதிற்றி,உடல் சிதறிக் கருக்கி,
ஊனங்களாக்கி,
இன்னமும் எத்தனை உயிர்களை காவு நாம் கொடுப்பது,
புத்த நரபலிக்கு,

சொன்னான் இன்றொருத்தன்,
நம்பிக்கை துரோகத்து தாரகன்,
தரமேதுமற்ற பாதகன்!
சிங்களவனின் சிகம் துடைத்து,அங்கவனின் அங்கம்
ஆராதித்து,அரங்கேற்றும் தன் சுய பாலங்களின்,
சூத்திரன்,வல்ல தமிழினத்தின்,
வரலாறு கூட மதிப்பழியா பழியன்
பாடை வெகுவிரைவில் பாதமேற்றும் பரதேசியவன்.

தரமற்ற தானத்தில் இருந்து,
அறமற்ற வாய்ச்சொல் அரற்றினான்,இன்று
வன்னியில் உள்ளவர்கள் யாபேரும்,
போராளிக்குடும்ப அங்கத்தவர்கள் என்றும்,மீதம்
மாவீரக் குடும்ப உறுப்பினர்களும் என்றும்,

முதலில் இந்த மூதேவிக்கு ''மா'_
என்ற சொல்லை உச்சரிக்க ஏதும் தகுதி உண்டா?
நிற்க!
இத்தகு வார்த்தை பிரயோகம் மூலம் இவன்
மூசிப்பது யாதெனில் வன்னிவாழ் மக்களெல்லாம்
வதைமுகம் பூசி வாரிக் கொல்லவே இந்த வார்த்தை பதகளிப்பு
இதன் மூலம் தன் எதிர்கால காத்திர முன்னெடுப்பு,

எப்படி வரத்தைப் பெற்றானோ?
அப்படியே இவன் ஆயுள்,
ஆக!
பிரதியுபகாரம் ஒன்றுள்ளதல்லவா?
அதன் பிரதி விரைவாகும் எங்கள் இன விடுதலைக்காய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்