
சோகங்கள் சேர்த்து தூபங்கள் சூட்டாமல்,
யாகங்களின் வேள்வியில் தாகங்கள் தகத்தவரை,
ஈகங்களின் வேதங்களை ஈட்டும்வரை ஈர்த்திருப்போம்,
ஈனமாய்ச் சாவதனை ஈட்டியவரின் நினைவேந்தி,
ஊனமாய்ப் போகாமல் உறுதியாக போரெடுப்போம்.
சிங்கம் தன் பிடரியை சிலிர்த்தங்கே சிரித்திருக்கும்,
அங்கமெலாம் சிதைந்திங்கே அற்றதாம் தம் பகையென்று,
சொந்தங்களின் பிடரியையும் சேர்த்தங்கே சொறிந்திருக்கும்,
அந்தங்களின் ஆரைகூட ஆர்த்தாய் அரிந்திருக்கும்,தங்கள்
அந்தகங்களின் ஆரியத்தால் எங்கள் அரியணையை அகர்த்ததாக,
விற்பனங்கள் விதைத்திங்கே சொற்பதங்கள் சொரிந்திடுவார்,
கற்பிதத்தின் மேதாவி தனத்துடனே தகைந்திருப்பார்,
கற்பனைதான் இவையென்று காலம் அதை நியம் கொள்ளும்.
ஊமை கண்ட சொற்பனமாய் ஊதும் காலம் கலம் தள்ளும்,
ஊதாத உறுப்பெடுத்த உறவெல்லாம் உரிமம் கொள்ளும்.
உறவே,எங்கள் உரிமைகளே,
மேதகு தலைமைதனை கொஞ்சம் ஆசுவாசப்படுத்த அரியணை கொடு,
எங்கள் மேதினி உறவுகளின் மேன்மையை விசுவாசி,
தங்களின் வலையத்திற்குள் வஞ்சகமாய் விழுத்திய எங்கள்
அன்பான,உறவுகளின் உரிமைக்காய் உரக்கவே குரல் கொடு,
வலைப்பின்னலில் வலைந்தவரை,வசமாக
மனிதப்பேரவலம்,
விதைக்கின்ற விகல்பத்தை வியாபித்து போர் தொடு,
எல்லாமே முடிந்ததாக என்றுள்ளம் மூடாதே,
இப்போதுதான் நாம் இன்னமும் விழிப்புடன்,
இமையாமல் ஆற்றவேண்டும், நீதி கேட்டு நிலையெடுத்து,
இடைப்பட்ட முகாம் தடுத்தார்,ஆங்கு
திறந்த வெளிச்சிறையாக்கி இன்னா செய் கயவர்களின்
உறைந்த உள்ளம் வெளிச்சமாக்கி,
உன்னதமாய் இன்னமும்
உச்சமாய் போரெடுப்போம்,
வன்மம் தரித்த வஞ்சகர்களால்
வன்னியில் தினந்தோறும்,
வரும் தேதி சாற்றும் சேதி
வன்னியில் வசமாக வாழ்வெலாம்
வன்மப்புலியே விரைத்தழித்தென்று
ஆ(மி)ழித்து வரும் வதையை அவனிகூட,
ஆற்றி நிற்கும்.
சாவெரித்து,அடையாளம் ஆழப்புதைக்க,
எஞ்சியதெலாம் கடல் கரைத்து,
எம் சொந்தம் தரிக்கும் வஞ்சம்.
தன்மை சரிக்க,
சலியாமல்,அலுக்காமல்,சோர்வு கோர்க்காமல்,
வேறு தேர்வு தேறும் வரை,
வேகமாக வலுக்கொடுப்போம்.
தங்கமான எங்கள் ஆத்மர்களின்
அவலம் சரிய போரிடுவோம்.
காலத் தேவை தற்போது தாங்கி
நிற்கும் தகமை இது.
உண்மைத் தொண்டர்களையும்,உரிமமான
சேவை கொண்ட மருத்துவர்களையும்,
ஆதார மனமாக்கிய தமிழர் புனர்வாழ்,
பூவுள்ளங்களையும்,தேசாபிமானிகளையும்,
தனதான சுற்று வேலி சுவரிற்குள் சூத்திரமாய்
சூழப் புடைத்து சூற்றி சுமத்தும் சூசகமான
சூதகங்களை,தான் ஆற்றும் சாதகமான உயிர்காப்பென
பாதகர்கள் பாரெல்லாம் பரப்பும் பொய்யுரையை
பாரும் அது பாகமாய் பகர்ந்திருக்கும்,நாம்
வசதியாக,
இவற்றை பத்தோடு பதினொன்றாக பாராமுகம் சூட்டிட,
ஜனநாயகம் கைப்பற்ற ஜனம் நாமே கரம் தொடுப்போம்,
ஜனநாயகம் விழித்தொடுக்க விழிப்பூட்டி விறைத்து நிற்போம்,
ஜனமாங்கே
ஜடமாக்கத்தின் ஐஸ்வரியத்தை ஐக்கியமாய் பேண மறுக்கின்,
ஜனமற்ற சனமாக ஐதெடுத்தே புறமாவோம்,
அகமெடுக்க ஐமித்தால்,
ஐ மிச்சமின்றி ஐயகோதான்,ஜெயவீவாதான் ஜெகமெங்கும்.
ஜெபித்தது போதும் ஜெயம் வேண ஜெகம் கொள்வோம்,
ஜீவிதம் ஜீவிக்க ஜீவ காருண்ய முகம் கொள்வோம்.
ஜீ வாதாரம் ஜெபிக்கும் எம்
ஜீவன்களை ஜெயம் கொள்வோம்.
ஜீ 8 நாடுகளை ஜீவிதமாக்க அகம் சுரப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக