வியாழன், 21 மே, 2009

தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்


இந்த ஒரு போலிப் பீராங்கி பிரச்சாரத்தில்,
அந்த மண்ணில் எம் வேதனைகள்,
கேட்க யாருமற்று சாம்பலாக உதிர்ந்தனவே,
உற்ற ஒரு யந்திரத்தை தந்திரமாய் உரயோகித்து,
அட்டகாசமாகவே தன் ஆரியத்தை ஆற்றி தழைத்தான்.

கள்ளன் போலீஸ் விளையாட்டு விளையாடும்
களமல்ல இது,
ஒளிக்கின்றேன் கண்டுபிடியெனும் கேத்திர கணித
தேற்றமும் இல்லை,
தோத்திரம் ஓதி சூத்திரம் சூட்டும்
பாத்திரமும் இல்லை,மாறாக எங்கள்
தேசம் சமைக்கும் தேவையின் யாத்திரம்,

தலைவனை ஓர்மமாக தாங்குபவரின் தானத்தில்
இருப்பெடுத்து வினைவது,
எங்கள் ஆதவனை கொஞ்சம் ஆசுவாச,சுவாசத்திற்கு
தங்கவிடு.
காலத் தேவைகள் ஆயிரம் இதை அவதானமாக,
நிதானித்து தளமிறங்கு,
கோலத் தவமிருந்து கொள்வான் அதை தாங்கி
காலக் கடனிற்கு கைகொடுப்போம்,

தற்போது தளம் காட்டும் புறச் சூழலை,
மறப்பேற்றாது மதியூகத்தோடு மனுக்கொள்,
சிந்தையில் மாற்றமின்றி சிரக்களமிடு,
மாந்தையாய் மக்களங்கே மன நோயாய் மாய்கின்றார்.
மொந்தையில் கள்ளாய் சில மொக்கர்கள் மோகிக்கின்றார்,

தற்போது ஸ்ரீலங்காவில் நுகம் கொள்ளும்
யாதர்த்தத்தை கவனி,நாம் நிதம் கையாளவேண்டிய
கள விந்தை புரியும்,இது புலவாழ்வின் புதல்வர்கள்
முகம் கொள்வதிலே மூர்க்கமாய் தகம் கொள்வதிலே,
தங்கும் இதன் அங்கம் விரியும்.அஃதின்றி
சங்குதான் எம் சகலர்க்கும்,காலக்
கடமை இதன் சாரம் கைநெறி தளர.

களநிலை இப்போ கைமாறி,
தளம் தகற்றுவது தமிழர் புல களத்தில்.
இளநிலை முறைகள் கரம் பற்று,
பல நிலை அவர் கொள கரம் உற்று,
உள நிலை உறுப்பேற்று,

விரைய வேணிய வீசம் புரியும்.
ஆயுத களமிறங்க முதலில் அரசியலை அவதானி,
ஆழக்கடல் பரப்பின் சுழுமியங்களை சுரக்கும்,
சீதளங்களை சிரந் தாழ்த்து.

எம் எதிர்காலங்களின் ஏளனங்கள் புரியும்.
வல்ல புலிகளின் வல்லாற்றலை சீரமமைக்கவேண்டிய,
வன்மம் புரியும்,
வெள்ளோட்டமாய் இப்போ வெள்ளவத்தை முதல்
சிங்கள எல்லையில் சீண்டதொடங்கப்பட்ட சூத்திரம் சுவாசி.
ஏன்?
அங்கெலாம் அலை மோதுவான்,
புலவாழ்வில் புதைந்நிருந்த சிங்களவன்கூட
ஆங்காங்கே எம்மவரின் அவயங்களின் அரங்கேற்றும்
வன்ம வதம் நொய்த்திருக்க நோத்ததின்,
நேரியம் சாற்றும் சாரம்,
பலமிழக்க வலமிழப்பாய்.

எத்தனை தடவை உங்களத்திற்கு ஓங்கி,வீங்கி சாற்றியது,
புத்தகத்தில் நீ படித்து புளகாங்கிதமடைந்தது,
அது ஏனோ,தமிழனிற்கு ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பதை,
ஏற்றமெனவெண்ணி, கலந்து குழம்பி,,,,,
ஒற்றுமை என்பது எப்போதும் பலம் என்பதையும்
ஏட்டச் சுரக்காயாய் எண்ணியதன் தளம்தானோ?

தகமை ஓன்று தானிருக்க ஒற்றுமையொன்றே ஓர்மம்.
அகமை இதை ஆற்றல் மொள ஆற்றுமையே தர்மம்.
உவமையின்றி உறுப்பேற்ற உரிமையே தாளம்,இதை
கயமையற்று காப்பெடுக்க காலம் ஈட்டும் தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்