வியாழன், 14 மே, 2009

ஆற்றும் துணை யாவும் புலர ஈழம் மலருமே

ஊர் எழுதும் பேரெழுதி,
உறவழுதும் நீர் தழுவி,
வேரறுந்து நீங்கள் எல்லாம்,
எங்கு சென்றீர்கள்,?எங்கள்
ஆழ் மனதில் நெருப்பெழுதி எங்கு சென்றீர்கள்?.
உறவே எங்கு சென்றீர்கள்.

கார் மேகம் திரள் கரைக்கும்,
கண்ணீரால் இருள் சுரக்கும்,
மாரடித்து மாய உறவு மண்ணில் இல்லையே!
எங்கள் வேரெடுத்து வேக உள்ளம் வெளியில் இல்லையே!.

நீரடித்து நீர் என்றும் அழுவதில்லையே,
வீறெடுத்த நெஞ்சம் மண்ணில் வீழ்வதில்லையே, ஈக
போரெடுத்து ஈழ வாழ்வாய் இழைந்து கொள்ளுமே.
இந்த ஞாலம் அதை நீதி கொள்ள
ஈழம் மலர்ந்து மொள்ளுமே.

வான் கழுகு உமிழ்ந்த குண்டு,
வல்ல பகை பரிந்தெடுத்து,
பாவி அவன் போர்க்கலங்கள் உயிர்கள் காவுதே,வாதை,
வதை பதைத்து வாசல் எங்கும் சாவிரிக்குதே.

ஆர்த்த புலி நீர்ப்பதில்லை,
அகமும் அங்கு வேர்ப்பதில்லை,
வேர்க்க பகை நிலம் விதைத்து,
விழிகள் சொருகுமே.
நோற்றும் புலிகள் பாதை விரிய,விரிய,
ஈழம் மலருமே.பார் நிலமும் விரியுமே.

தேரெடுத்த பாதை நோகும்,
தேர்ந்த பகை வாகை வீழும்,
ஊர் தொடுத்த மாலை எல்லாம்,
உவகை கொள்ளுமே எங்கள் உறவழித்த,
பாதை எல்லாம் உதிர்ந்து போகுமே.பார்
உறவழித்த பாதை எல்லாம் உதிர்ந்து போகுமே.

கூவும் குயில் சோகம் ஓதும்,
கூட மயில் பாதம் நோகும்,
கூம்பும் குருவி கூட்டம் யாவும்,
நாட்டம் நீக்குமே,நாடு
விதிர்ந்தெழுந்த கோலம் கண்டு,
குவியம் கொள்ளுமே,ஊடி உதயம் கூட்டுமே.
இந்த பாதை சூட்டுமே,இனிய பாதை நீளுமே.
ஈழ மரபில் எல்லாம் வாதை நீங்கி,
உவகை சூடுமே,வல்ல உள்ளம் பெருகுமே.

வல்ல புலி வெல்லும் காலம் வலிமை சூழுமே,
தங்க ஈழ மலர் சூடி இந்த வையம் புலருமே,
பார்!
பனித்ததெல்லாம் பசுமை ஊட பவனியாகுமே,
உலக பவனியாகுமே. ஈழம் பவனியாகுமே.இழையும்
ஈழம் வளருமே,தமிழ் ஈழம் வளருமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்