திங்கள், 25 மே, 2009

சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்.


ஒப்புவமை இல்லான் தாள் பணியான்,இவன்
ஒய்யாரமெலாம் ஒரு போதில் தாம் தணிப்போம்.
தெய்யார,தெய்யனவெல்லாம் தொழுதங்கே களம் அழுகும்.
கையார யார் வருவார்?கைப்புண்ணழுக மருந்திடுவார்?

தப்புத்தாளங்கள்,தகமற்ற தரம் தனையும்,
சப்புக்கும்,
சாளரங்கள் சன்னமாகவே சரமகற்றும்,
உப்புக்கும்,,
உணவிற்கும் உசாவங்கே களமமைக்கும்,
தப்புக்கும்,
தானாக தரமற்ற உரமமமைக்கும்,
ஒப்புக்கும்,
உணர்விழந்த ஒட்டுக்குழு ஓதல் ஏற்கும்.

தன்நிலை புனரமைக்க தமிழர் நிதம் தகம் தேடும்.
வன்நிலை புவி அகக்க வையமெலாம் குரல் சுரக்கும்,
எந்நிலை கைவரினும், ஏகாந்தம் மையல் கொளோம்,
அந்நிலை தகர்த்தெறிய ஆக்ரோசமாய் முகங்கொள்வோம்.
தமிழர் நிலை சிரசேற்றி போர்முரசம் புவி இசைப்போம்.
அழுகும் தலை நிலைக்கொள்ளோம்,
ஆர்த்தெடுத்து இருப்பெடுப்போம்.

இன்னாதகமை எம் அகம் சுடும்,
இருப்பெலாம் தடவி சன்னதம் இடும்.
நெருப்பெரிந்த ஈழ வடுத்தடவி,செருக்கள,
நினைவே நிதமும் வன்மம் சூடும்..

பன்னாடைகளின் பாதமெலாம்,
பட்டாடை சூடி நிதம் மகிழ,
பொன்னாடை போர்த்தி புனையர்,
பட்டாசு சுட,
என்னா இயலுமென என் சொந்தம்,
சோகம் சூட,
பாராமுகம் சூடி நாம் பார்த்திருத்தல் தகுமோ?

பாரில்!,
புலம் பெயர் தமிழர் தலம் தளைந்து,
நிலம் உயர நிதம் நெடு பலம் நீட்டித்து,
வலம் வயப்பேற வரம் மீட்டி,நீட்டும் கரம்பற்றி,
நீட்சி குறைத்து உறவின் ஆட்சி அலகமைப்போம்.
இதை ஐயமின்றியே அனுதினமாக்க போர்க்கொடி
தூக்கி எம் தூமங்கள் தூய தூயபடி துய்ப்போம்.

இதை சர்வத்தின் தோள் சுமத்தி,
சர்வதேச ஊடகங்கள் சார்பெடுக்க,
பார் அகம் சுரக்க அலை,அலையாய் ஆர்ப்பரிப்போம்,
ஆழுமையாக்க ஓர் அங்கீகாரம் வினைத்திருப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்