புதன், 6 மே, 2009

வேதினியில் வேகாத வெங்களம்


ஈழத்தின் அழுகுரல் கேட்கின்றதா?அந்த
ஈனர்கள் கொடும் செயல் புரிகின்றதா?
மானர்கள் வாழ்விடம் மரித்ததய்யா!அங்கு
ஊனர்கள் ஊழியமே கருக்குதய்யா!ஈழம்
கருகுதய்யா!
ஊனமாயங்கு வடியுதய்யா! வனையுதய்யா.

வாழ்வளித்த வன்னி நிலம் வளம் அழித்து,
வாயார விருந்தளித்த விதம் மலித்து,
வீணர்கள் படை ஆற்றும் கொடுந்துயரம்,
வித்தகத்தில் விதந்துரையா பெருந்துயரம்.
பெருந்துயரம்,பெருந்துயரம்.

வந்தாரை உளமார வரவேற்று,
மந்தாரை பூவாக மனம் உவந்து,
மமதைகள் உலவாத பெரு மனமே இன்று
வலி வதை பட்டங்கு படுங்கோரம்,
மலிவானதே,
சாக்காடு விரித்தங்கே சதிராடுதே.
சரீரங்கள் சதை பிளந்து விதி பேணுதே,
விதி பேணுதே,மனம் நாணுதே.

பால்குடி மாறாத பாலகர்கள்,
பாலங்கு சுரக்காத மாரப்புக்கள்,
ஆதங்கம் ஆசுவாச மனம் சுரக்க,
அன்றாடம் உணவிறகாய் அவர் பரக்க,
ஏனென்று கேளாத ஏகாந்தமாய்,
ஏனிந்த தரணியும் பாராமுகம்?
பாராமுகம்,ஆறாமுகம்.

வகுந்தெடுத்தால் அடங்காது அவர் துன்பம்.
வகுந்தெங்கும் தினம் அவர் அகம் வாட்டும்.
அகம் வாட்டும் நுகம் நோகும்.
பாரெடுத்து பகிர்ந்துருகும் பாசமனம்.
போரெடுத்து புவியிலே அறம் கேட்கும்.
எங்கள் அறம் கேட்கும்.
அதன் தரம் யாக்கும்.

கார் கொள் மேகத் திரள் கலைந்து விடும்,
கனிவாக அது கூடிக் களமியக்கும்,
வேரெடுத்த புலிமனம் வேதனையாற்றும்.
போதினிலே வலி சூழ் தளம் பிறளும்.
தளம் பிறளும்,எங்கள் களம் உலவும்.

பார்! விரைவில் பவனியே பதில் பகரும் அந்த
பாதையிலே தமிழீழம் பவனி வரும்.
பவனி வரும்.
ஈழம் அவனி வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்