சனி, 16 மே, 2009

யார் கரங்களில் இறுதிக் களம்?


இறுதி யுத்தம் என்பதை முடிவெடுப்பது!
விடுதலைப்புலிகளா?வியர்ப்பேற்றிய இராணுவமா,?
இல்லை.
தமிழ்மக்களாகிய நாமாகத்தான் இருக்கமுடியும். உண்மையாகவே உறுதியாக கூறுவதானால்,
இதை முகம் கொள்ளும்,இடவாதம்,இனவாதம்,பேரினவாதம்,
புத்த வாதம்,
கையாளும் இல்லது கையாண்ட விதம் என்பது இதனை
இத்தனை விதாரிப்பிற்கு,விசாலத்திற்கு,வியாபத்திற்கு ஓரு உச்சமுகப்பை
உலகப் பரிமாணமாக்கி இன்று உள்வாங்கியுள்ள தமிழினவழிப்பின் கோந்திரம் இன்று உலகப்பரப்பெங்கும் வியாபித்து மக்கள் மனங்களில் மாறாத வடுவாக,என்றுமே மறக்கமுடியாத ரணமாக ஒரு மாபெரும் ஓங்காரத்தைஒப்பேற்றி,விடிதலையின்பால்மக்களைமுகங்கொள்ளவைத்துள்ளது,

இதன்சாரம்தான் இன்று உலகப்பரப்பெங்கும் மாபெரும் மக்கள் எழிச்சியாக,
கவனயீர்ப்பு போராக,பெரும் பேரணியாக மக்கள் தங்களின் தாங்கொணாத துயரத்தைஇத்தரணியின்பால்பெரும்வீச்சாக,முறையாக,ஆதங்கமாக,ஆவேசமாக,ஆற்றொணாதுயரை தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாட்டிலும்,அதன்நாடாளுமன்றமுன்றலிலும்,பாராளுமன்றமுன்றலிலும்,ஐ.நாசபையின் வாசலிலும்,ஐரோப்பிய பாரளுமன்றமுகத்திலும்,ஏன் ஒவ்வொரு மாகாண நகரமுன்றலிலும் மிகவும் ஆக்கரோசமாக இன்றைய இளைய தலைமுறைகள் தமிழரது தார்மீக போராட்டத்தினை இவ் வையகத்தின் வாசலிலே தங்களது கோரிக்கையாக,

1.இந்த மனிதாபிமானமற்ற கோரயுத்தத்தை முற்றுமுழுதாக நிறுத்தும்படியும்,
2.மருத்துவ,மனிதாபிமான உதவிகளை உடனடியாக முன்னெடுக்கும்படியும்,
3.அநியாயமான இனவழிப்பை உடன் நிறுத்தும்படியும்,
4,சர்வதேசம் உடன் ஸ்ரீலங்காவிற்கு ஓர் மாபெரும் அழுத்தத்தை கொடுத்து
எங்களின் உறவுகளின் துயர் தீர்த்து,உலக ஊடகங்களை வன்னி நிலப்பரப்பிற்கு அனுப்பி உண்மை நிலையை உலகறியச் செய்யவேண்டியும் தங்களின் இந்த ஆளுமையான கோரிக்கைகளை முன் வைத்து தொடர்ந்தும் தங்களது போராட்டங்களை முன்னெடுத்தவண்ணமே உள்ளனர்.
5.மற்றும் உண்ணாவிரதத்தையும்,வீதிமறிப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்துதங்களதுஇனத்தின்மேலானபரிவையும்,ஆதங்கத்தையும்,தார்மீக கோபத்தையும்,இந்த சர்வதேசத்தின் உடனடியான செயல்திட்டத்தை வேண்டி இன்னமும் தங்களது போராட்டத்தையும் முன்னெடுத்து வந்தனர்,வருகின்றனர்.

ஆயினும் சில அசைவுகளை சில நாடுகள் முன்னெடுத்து வந்தாலும் அதில் எந்தவிதமான பாரிய முன்னேற்றங்களையோ,அழுத்தங்களையோ ஸ்ரீலங்காவிற்கு கொடுக்கமுடியவில்லை,
அவை பின்வரும் முகாந்திரமாக முகங்கொள்கின்றது.
1.ஸ்ரீலங்கவில் தமிழர் பூமி அமைவதை எந்த ஒரு நாடும் உளமாரமாக விரும்பவில்லை.
2.தமிழரது போராட்டத்தை ஒரு பயங்கரவாதமாகவே அது பார்ப்பதாக ஓர் போலியான பார்வையை முன் வைக்கின்றது,எதிர்க் கட்சிகள் எப்படியோ எங்கள் பக்கம் தங்கள் பார்வையை ஆதங்கமாக ஆற்றுகின்றார்கள்.ஏனெனில் இது எல்லா நாடுகளிலும் சகஜம்தான்.தாங்கள் அரசுக் கட்டிலில் அமரும் வரை இந்த பார்வையை தாராளமாக முகங்கொள்வது ஒர்விதமான ராஜதந்திரமாக நாம் திரைப்படம் முதல் ஸ்ரீலங்காவில் பலமுறை பார்த்து ரசித்து அனுபவித்து வெறுத்த காட்சிகள்தான்.
3.இந்தியாவின் ஆழமான கால்வைப்பை உண்மையில் இந்த நாடுகளால் மீறி எதுவும் செய்யமுடியாது,மேலும் எங்களின் மேல் தாங்கள் தார்மீக முகங்கொள்வதானால் தமிழீழப் புலிகளை ஆயத ஒப்படைப்பைமேற் கொண்டு தமிழர் தம் ஆதார போராட்டத்தை அசிங்கப்படுத்துவதில்தான் அரண் கொள்ள முனைகின்றது,
4.ஆயத ஒப்படைப்பு என்பது,தற்கொலைக்கு ஒப்பானது என்பது எங்களது பால் குடிமாறாத தாயகத் தமிழருக்கே தெரிந்த பாரிய உண்மை,சாரும் சாரம்,அதன் விழைவுகள்,ஜனநாயகம் என்பதே ஜனத்திற்கு இல்லாத நிலையில்,தமிழீழப் போராளிகளிற்கு,இந்த எண்ணமே வேண்டாம்.அழித்துவிடுவோம்.
5.மிகவும் தாராளமாகவே ஆயுத,ஆளணிகள்,அதனூடான பயிற்சிகள்,மேலதிகமான பணவுதவிகள்,எல்லாவற்றையும் கனதியாக கொடுத்து ஆசீர்வாதமும்,ஆதங்கமாக வழங்கியவர்களால் எந்த முகத்துடன் ஆழமான அழுத்தங்களை கொடுக்கமுடியும்.

குறிப்பு!உண்மையில் சர்வதேசநாடுகள் எங்களின் பால் உண்மையான அதாவது மனிதாபிமான ஆதங்கங்கள் உண்டானால் ஸ்ரீலங்கா தங்களது கோரிக்கைகளிற்கு செவிகொடுக்காதநிலையில்ஒன்றைமட்டும்மிகவும்தெளிவாகசொல்லிஇருக்கலாம்அதாவதுதமிழர்களதுசுயநிர்ணயபோராட்டத்தை அங்கீகரிப்பதாக மேலோட்டமாக கூறி இருந்தால்,அல்லது தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை எடுக்கப்போவதாக சும்மா ஒர் மிரட்டலைக்கூட முன் வைக்க முடியாத இந்த சர்வம் எங்கே எங்களின் இந்த பேரவலத்தை,இனவழிப்பை,மனிதாபிமற்ற வதகழிப்பை,நில ஆக்கிரமிப்பை,அகிலமே இதுவரை காணாத இந்த மனித பேரவலத்தை ஓரு வார்த்தையில் இந்தியா என்ன சீனாவையே மிரட்டி இருக்கலாம். ஆனால் இந்த! பூகோளத்தில்,தெற்காசியபிராந்தியத்தில்இந்தியாவா?சீனாவா,அதனுடன் தோள்கொடுக்கும் பாகிஸ்த்தான்,ஈரான்,ரஸ்யா இப்படியாக பிராந்திய ஆதிக்க மனப்போட்டிகளில் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்த ஸ்ரீலங்காவின் கடல்,தரை,வான்மார்க்கமான வளத்தை எப்படியும் தங்களதுவன்னாதிக்கத்தில் வசம் கொள்ள,ஸ்ரீலங்காவிற்கு நான்முந்தி,நீ முந்தவா என்ற சுய நோக்கத்திற்காக பயன்படுத்துவதை ஸ்ரீலங்காவும் அறியும்,மேலும் இந்த நாட்டில் சீனா தனக்கான ஒரு துறைமுகத்தை சிங்கள பிராந்தாயத்தில் நிறுவியுற்றதாக ஆதாரமாக அறியமுடிகின்றது,

மேலும்,இந்த சந்தர்ப்பத்தில்,இதில் ஏதேனும் ஓர் நாடு மேலதிக அழுத்தத்தை பிரயோகித்தால் ஸ்ரீலங்கா மற்றநாட்டில் கையேந்தும்,ஆகவே இந்தியா எப்படியும் ஒரு நெகிழ்வுத்தன்மையில் ஸ்ரீலங்காவின்இழுப்பிற்கொல்லாம்ஆடுவதைத்தவிரவேறில்லை. காரணம்,ஆசியப்பிராந்தியத்தில் திருக்கோணமலைக்கு உள்ள பாரிய அமைவுத்தன்மை,இங்கு குறிப்பிட்டவைகள் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்வும்,இதுபற்றி எல்லோருக்கும் தெரியும் என்று கூறுவதும் சாத்தியமற்றதுவுமாகும்,காரணம் எங்களில் பலர் இன்னமும் சரியான ரீதியில் அரசியல் மயப்படுத்தப்படவில்லை என்பது வெள்ளிடைமலை,
இது புலம்பெயர் மக்கள் மட்டுமல்ல தாயகத்திலும்தான் என்பது மறுக்க முடியாத,மறைக்கமுடியாத யதார்த்தமாகும்.

ஒரு தொலைக்காட்சி தொடரில் உற்ற ஆர்வம்,தொடரும் இந்த இனவழிப்பை தடுத்து நிறுத்தும் அந்த தார்மீக உணர்வு ஏனோ மங்கலாகவே உள்ளது.சுயநலம் கூட காரணம் என்றால் அது மிகையாகாது.
எங்கே தமிழரின் தேசியக் கொடியையும்,தலைவனின் ஒளிப்படத்தையும் ஏந்தி போராடுவதில் ஓருவித தயக்கம் ஓர் அர்த்மற்ற காரணம் இந்த நாட்டில் எங்களை தடைத்துள்ளார்கள் என்று தங்களை தாங்களே மறைத்துகொள்கின்றார்கள்.இந்த போலிக்காரணம் தவிர,வேறென்ன?
இதுவரையிலான எந்த போராட்டமும் கைகூடவில்லை என்பதாக சிலரின் ஆதங்கம்.

ஒன்றை மட்டும் அறுதியாக கூறுவதாயின்,
எங்களது தார்மீக போராட்டத்தை எந்த சக்தியாலும் அழித்துவிடமுடியாது என்ற காத்திரமான உண்மையை அகம் கொள்ளவேண்டும்.
இந்தளவிற்கு மனித பேரவலங்களை விழைவித்து,எங்களது இரத்த உறவுகளை எண்ணிக்கையற்று கொன்று குவித்துவிட்டு,மாபெரும் போராட்ட வீரத்தை ஒரு மூலைக்குள் சில நாட்களிற்கு ஒதுக்கி வைக்கலாமே தவிர அதை ஒருபோதும் முற்று முழுதாக ஒடுக்கி விடமுடியாது என்ற வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

போராட்டப் பாதையில் இன்று புலிகள் ஒரு பின்னடைவை அடைந்துள்ளார்கள் என்பது மறைக்கவிரும்பாத உண்மை,ஆனால்,அதற்காக போரிடும் வலுவையோ அன்றி அதன் குறிக்கோளையோ அடக்கி,முற்றுமுழுதாக இல்லாதொழிப்பதோ என்றும் நடக்கமுடியாத காரியமாகும்.வன்னியில் உண்மையில் என்ன நடக்கின்றது,?

சரியாக கூறினால் ஏகத்திற்கும் பொழியும் எறிகணையால் எங்கள் மக்களை வகை கொகையின்றி கொல்கின்றார்கள்,இதை வான் தரை,கடல் மார்க்கமான பல் குழல் எறிகணையாலும்,பொஸ்பரஸ் போன்ற கொடிய விச கந்தகத்தாலும் சகட்டு மேனிக்கு வீசி தமிழின அழிப்பை மிக கொடுமையாகவே அரங்கேற்றுகின்றார்கள்,இதுதான் கள யதார்த்தம்.
மருந்து,உணவு,ஏன் குடிநீருக்குகூட வழியில்லாமல் சனங்களை பாதுகாப்பு வலையம் என்ற பொறிக்குள் அடிமையாக்கி ஒவ்வொரு விநாடியும் எறிகணைவீசி எங்கள் விடுதலையின் வீரியம் அழித்தாக கொக்கரிப்பதில் எந்தவித உண்மையும் இல்லை.மாறாக புலம்பெயர் மக்களை இன்னமும் தமிழர்தம் விடுதலையின்பால் உற்ற உறுதுணையாக்க இந்த அநியாய யுத்தம் மிகப் பெரிய பாரிய உந்து சக்தியை ஊட்டி நிற்கின்றது.

அரசமொழியில் கூறினால்,அது தமிழர் போராட்ட வலுவை இல்லாதொழித்து தான் ஓர் ரட்சகனாக தமிழர் தம் உரிமையை வழங்கி ஓர் நாடு ஒரு அரசு எல்லோர்க்கும் சம உரிமை இப்படி காது கிழித்து நிற்கின்றது,புலிகள் இராணுவ வல்லமையில் சமவலு ஆற்றியபோதே கொடுக்காத உரிமையை,போர் ஒப்பந்தம் மூலம் மூலமாக்கிய எவ்விதமான உடன்படிக்கையையும் ஒரு சிறு துளியேனும் ஒப்பேற்றாத இந்த அது எந்த அரசானாலும் இனவாத அரசு,எங்களின் பலங்களையும் வலங்களையும் அழித்தபின் எதை எங்கள்முன் அரசியல் தீர்வாக முன்வைக்கும்,இதைவிட முட்டாள்மானமான,கேவலமான அரசியல் கோமாளித் தனத்தை வேணுமென்றால் ஒட்டுக் குழு இரந்து நிற்கலாம்,ஆனால் சுயமானமுள்ள எந்த தமிழனும் ஏற்கவோ,அனுசரிக்கவோ மாட்டான் என்பதுதான் மிகத்தெளிவான,செறிவான நிலைப்பாடாகும்,

மேலும், விடுதலைப்புலிகள் இன்றைய சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி சில விட்டுகொடுப்புக்ளை முன்னெடுக்கலாம்,ஆயினும் இந்த போராட்டபாதையில் ஒன்றில் முற்று முழுதாக அழிதல் அல்லது தொடர்ந்து மாற்று உபாயங்கள் மூலம் போராட்டத்தை முனைப்பு கொள்ளல்,இதில் இரண்டாவது தேர்வே முன்நிலைப்படுத்தப்படும்.
இதை வரும் நாளைய நாட்கள் மிகத் தெளிவாக முன் நிறுத்தி வலம் வரும்.
மேலும்
எங்கள் தலைவனின் கலங்களையும்,கரங்களையும்,இந்த புலம்பெயர் சமூகம் இனி வரும் காலங்களில் இன்னமும் வலுவாகவே பலப்படுத்தும். இந்த தார்மீக கடமைகளை முன்னெடுக்கும் என்பது உள்ளங்கை கனியாக உருவகம் கொள்ளும்,
இது காலம் வகுத்த விதிமுறை,
எங்கள் தலைவன் வகுத்திருக்கும் இன்னமும் மூட, ஊனக் கண்களிற்கு புரியாத,புரிந்து கொளமுடியாத பெரும் யாசகம்,இந்த ஏற்கெனவை விதிக்கப்பட்ட சூத்திரம் இது வரும் காலங்களில் களம் கொள்ளும்.
அதுவரையும் எங்கள் இந்த தார்மீக புலம் பெயர் போராட்டம் தொடரும்.

எனவே முதலில் கூறியது போல் இந்த யுத்தம் எப்போது முடிவிற்கு கொண்டுவருவது என்பதை புலம் பெயர் உறவுகளே தீர்மானிக்கமுடியுமே தவிர ஸ்ரீலங்கா பேரினவாதம் இல்லை என்பதை அறுதியாக கூறி வைக்க விழைகின்றேன்.
யார் வேணுமென்றாலும் திரை போடலாம்,ஆனாலும் ஏற்றெடுக்கப்பட்ட
உரை தனம் பிறழ்ந்தாலும்,தடம் புரளாமல்,இன்னமும் வீச்சாக,வேகம் கொள்ளும்.இந்த ஆழமான போராட்ட பொறுப்பை அகந் தாங்கும் இந்த புல உறவுகள் இன்னமும் ஆழ கரம் பற்றி எங்கள் கள,தள புதல்வர்களிற்கு தார்மீக உறவையும்,உணர்வையும்,மேம்பான நிதி பங்களிப்பையும்,தார்மீக நீதி பங்களிப்பையும் தொடர்ந்து ஆற்றி இதுவரையில் அநியாயமாக கொல்லப்பட்ட தமிழர்களின் ஆத்மாவின் ஆதங்கத்தை நீர்க்கவிடாமல்
மூசி பூக்க வைப்பார்கள்,இது வலிமையான உறுதி,

இந்த காலக் கடமைமை கனதியாக அகமிறுக்கி,தமிழீழ மலர்விற்காய்,எந்த தடையையும் உடைத்து,ஏற்படும் தளர்வுகளை சாதூரியமாக,ராஜ தந்திரமாக முகங்கொண்டு எங்கள் இலட்சியக் கனவை நனவாக்க இன்னமும் அதி வேகமாக முன்னெடுப்போம்,அன்றி இதை கைக்கொள்ளாவிட்டால் எமது இளைய தலைமுறைக்கு நாம் செய்த பாரிய துரோகம் இதை தவிர வேறொன்றுமாக இருக்காது,எனவே இந்த பாரிய துரோகத்தை புறந் தள்ளி ஓரு ஈகமான வரலாற்றுக் கடமையை வாகை எங்கள் வாசல் வரும் வரை உறுதியாக முன்னெடுப்போம்.

இப்போது களம் கொள்ளும் அவலத்தை இனியும் நுகங்கொள்ள விடாமல் தடுப்பதானல் எங்களிற்கு தமிழீழம் கட்டாய தேவை என்பதே இந்த காலம் கட்டியம் கூறி நிற்கின்றது,எனவே களம் கைமாற்ற வேண்டிய காலக் கடமையை இந்த சந்தர்ப்பத்தில் தளமேற்றவேண்டிய காலக் கனிவை எக் காரணம் கொண்டும் ஒத்தி வைக்க முடியாது, இதுதான் தற்போதைய காலயதார்த்தம்,இன்று வன்னியில் என்ன நடக்கின்றது என்பது நாளை வெளிச்சத்திற்கு வரும் போது நாங்கள் இழந்துள்ள, மீண்டும் பெறமுடியாத இழப்பின் வீச்சு தெரியும்.இதே நிலையே இனியும் வன்னியென்ன இனி ஸ்ரீலங்கா முழுக்க விதை எறியும்,இதுவும் நடக்கத்தான் போகின்றது எங்கள் விடுதலையின் வீச்சு முற்றுப்பெற்றால்!?

எனவே!ஒப்பாரி ஒப்பேற்றி ஓய்வதைவிட,அல்லது வேறு முகங்கொண்டு எம்மை ஒழிப்பதைவிட, தைரியமாக எங்கள் தாயக வேட்கையை,அதன் தாற்ப்பாரிய தேவைகருதி ஒட்டு மொத்த தமிழினமும் வீதியிறங்கி போராடுவோம்,
செய்வோம்,சொல்லிற்கு முன் செயல் தரிக்கும் செயல் வீரர் மீதொரு ஆணை தரித்து முகங்கொள்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்