திங்கள், 25 மே, 2009

வேர் விரிய நீரூற்றுவோம்,ஊர் விரிய பார் விரிவோம்.


இன்றைய ஸ்ரீலங்காவில் எம் உறவின் வன்னி நிலையை உற்று நோக்க,
அகம் எரியும்,உணர்வெலாம் மங்கி,தினம் சொரியம் ஆதங்கம் சார!
அதாவது தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆணிவேருடன் அகற்றப்பட்டதாக ஸ்ரீலங்கா பெரும் பிராச்சாரம் முன்னெடுத்துள்ளது,அதன் பிரகாரம் இந்த நிலை உண்மையாகவே இருக்கட்டும்,அங்கே பயங்கரவாத முகம் முற்று முழுதாக அழித்துடைக்கப்பட்டதானதாக உலகம் முழுவதும் பெரும் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டு இன்றுடன் வாரம் ஒன்றை நிறைவு காண்கின்றது,
ஆயின்,
தற்போது அங்கே என்ன நடக்கின்றது? என்பதை உறுத்து நோக்க பின்வரும் நிலையை தரமாற்றுகின்றது.
இதை வரிசைப்படுத்தி பார்ப்போமானால்,
1.உக்கிர வன்னித்தாக்குதலில் அங்கு மனிதாபிமான பணிஆற்றிய வைத்தியர்கள் இன்று ஸ்ரீலங்காவின் வதை முகாமில்.
2.வன்னி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்,கனகரத்தினம் இன்று 4வது மாடியில்,இவர் அகோரமான போர்க்களத்தில் மக்களோடு மக்களாக நின்று அவர்தம் துயரங்களை தானும் சேர்ந்து சுமந்தார்.
3,வன்னியில் இராணுவ வலையத்திற்குள் மாற்று வழியின்றி,மனிதாபிமான மார்க்கமின்றி, தஞ்சமடைந்த பொது மக்களின் நிலை.
4.அவர்களில் பலர் வயது,பால் வேறுபாடாக பிரித்தெடுக்கப்பட்டு காணாமல் போகச்செய்யப்படுகின்றனர்.
5.,இளம் பெண்கள்,இதில் வயது வேறுபாடின்றி அவர் எத்தனை வயதென்றாலும் இராணுவத்தின் மிருக வெறிக்கு உட்படுத்தப்பட்டு,இளவயதினர் புலி உறுப்பினரென முத்திரை குத்தப்பட்டு,
கொலை செய்யப்படுகின்றனர்,அல்லது மேலதிகமாக தங்களின் இச்சைகளிற்கு, வன்புணர்விற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இளவயது,அதாவது,வாலிபர்கள் புலி உறுப்பினர் என்றே தயவு தாட்சண்யமற்று முத்திரை குத்தப்பட்டு காணாமல்,கொலைசெயெயப்பட்டு,
முகாமின் பின் புறம் வீசப்படுவதாக செய்திகள் ஆதாரம் காட்டி குறித்துக்கொள்கின்றது,
6.இதுவரை இராணுவத்தில் படுகாயப்பட்ட வயது,பால்,வித்தியாசமின்றி தமிழர்களின் தொகை இலட்சத்திற்கு மேற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.இதில் யாருக்கும் தேவையான அடிப்படை ஆதார சிகிச்சைகூட அவர்கட்கு அளிக்கப்படவில்லை.
7,வயது மூத்த அதாவது 60வயதிற்கு மேற்பட்டமுதியவர்களின் நிலை?சமீபத்தில் உணவு சிறிதுமின்றி இவர்கள் இறந்ததாகவும்,இவர்களின் எந்த உறவினர்களையும்,அல்லது அவர்களின் துணையின்றியே எரித்த அல்லது,புதைத்ததாகவும் செய்திகள் வந்தவண்ணமே உள்ளன.
8,சிறு குழந்தைகளிற்கான பால் உணவுகூட கொடுக்காத மிகவும் மிலேச்சத்தனமான,மிருகத்தனமான,அட்டூழியம் அங்கே காணப்படுகின்றது.
9.தரப்படும் சிறு அளவு உணவிற்காக வரிசையில் நின்று இதுவும் கிடையாமல் சிறுவர்கள் ஆமிமாமா பசியென்று இரக்கும் ஈனத்தனங்களும் அங்கே தலைவிரித்தாடுகின்றது. வார்த்தைகளிற்கப்பாற்பட்ட மனிதவதை இந்த இராணவ வலையத்தினுள் நாளும்,பொழுதும் நடைபெறுகின்றது.
10.உடுத்த உடை தவிர மாற்று உடைக்கு மார்க்கமின்றி எத்தனை உறவுகள் அங்கே,பித்துப்பிடித்து,மனநோயால்,தன்சொந்தம்இழந்து,துணைஇழந்து,பிள்ளைகள்,பெற்றோரையும்,தாய் தன் குழந்தைகளையும்,கணவன் தன் மனைவியையும்,சகோதரர்கள்,சகோதரங்களையும் முற்றாக இழந்ததும் கூட தெரியாமல்,எதிர்கால வாழ்வு அறவே இழந்து.
11.எத்தனை மக்கள் தங்கள் அங்கமிழந்து,அவயங்களெல்லாம் தீப்புண்ணாகி நொந்து பெரும் துயரில்,ஆற்ற முடியாத வடுக்களை அங்கம் முதல் அகம்வரை வலியேந்தி,சிலர் என்ன நடக்கின்றது?தாம் யார்? என்ற அடையாளம் அறவே அகன்று,எதிர்காலச் சூனியங்களை எப்படி எதிர் கொள்வதென்ற உவப்பின்றி!,
12.நீண்ட,நெடுதான கம்பி வேலிகள் மத்தியில் சிறைக்கூடத்தில்,அதாவது திறந்த வெளிச் சிறையில் அங்கு வாழ்வது அதுவும் ஒரு வாழ்வா?
13,வெளியில் இருக்கும் சில உறவுகள் உதவமுனைந்தாலும் அதையும் இந்தவன்புணர்வாளர்கள்,இரக்கம்எதுவும்அற்றஅந்தஈனப்பேய்கள்,சிங்களத்தின்தெருப்பொறுக்கிகள்எம்மக்களைஅனுதினமும்,ஆக்கினைக்கு உட்படுத்தி,உளவுரணகற்றி,நடமாடும் வெறும் மனிதப் பிண்டங்களாக்கி,!மகிந்தாவின் பேய் இராணுவ வல்லூறுகள் செய்யும் கொடுமைகளை என்னெவென்பது?,
14.இத்தனை மாபெரும் இனவழிப்பை இரவோடிரவாக,இன்னமும் வன்னியில் நாளாந்தம் அரங்கேற்றிக் கொண்டிருப்பதை எந்த ஒரு நாடும்,ஆகக்குறைந்த ஒரு மனிதாபிமானக் குரலை எங்கள் மக்களிற்காக,
வலுவான அத்தாட்சியுடன் உலக மன்றில் முன் வைக்க முன் வரவில்லை என்பதினூடாக நாம் எமக்கான,உறுதியான ஒரு தனி நாட்டை எப்படியேனும் இந்த வையகத்தில் வசம் கொள்ளவேண்டிய தாற்பாரியத்தை,இப்படியான,வன் நிலைகள் கட்டியம் கூறி நிற்கின்றன.
15.இன்றும்,நேற்றும் ஏன் ஒவ்வொரு நாளும் ஸ்ரீலங்கா இராணுவத்தால்
இளையவர்கள் வகுந்தெடுக்கப்பட்டு தினமும் வன்னியில் இருந்து கொழும்பிற்கு விசாரணை என்ற பெயரில் தங்களது பாணியில் வல்லளைத்து செல்கின்றனர்,இவர்களில் யாரும் வன்னிக்கு திரும்பி வரமாட்டார்கள் என்பது வலிதரக்கூடிய,ஆனால் யதார்த்தம் இதுதான்.
16.வலிமை அங்கு களமகற்றப்பட்ட போதே தெரிந்த மாபெரும் உண்மை.இனி கொழும்பில் என்ன ஸ்ரீலங்கா பூராகவும் தமிழர் தாக்கப்படுவது மட்டுமின்றி இளைஞிகள் வல்லுறவிற்கும்,ஆண்கள் பெரும் அவமதிப்பிற்கும்,ஏன்?உள,உடல் காயங்களிற்கு களமமைத்து இனி அடிக்கடி காணாமல் போதலும் அடுக்கடுக்காய் நடந்தேறும், வலிய உண்மையை நாம் வாய் மூடி,மெளனித்து ஏற்கவேண்டிய,அல்லது ஏதும் செய்யமுடியாத வன் நிலைக்கு உள்ளாக்கட்டுள்ளோம்,இந்த முகம் ஏற்கெனவே அங்கே முகாம் அமைக்க தொடங்கி விட்டது.இனி அது பெருமுகம் கொள்ளும் யதார்த்தம் விரைவில் அரங்கேறும்.
17.கிழக்கில் உதயம் ஊடிவிட்டது,இனி வடக்கில் மகிந்தா வசந்தம் பூச வகிடெடுத்துள்ளான்.ஊது குழல்கள் யாவும் உசார் நிலைக்கு உகந்த தளம் விரித்துள்ளனர்,ஆயிலியமான ஆனந்த சங்கரியோ? தமிழர் கூட்டமைப்பை கூண்டோடு கூடேக கொக்கரிக்க தொடங்கி விட்டான்.
18.வடக்கில் விரைவில் தேர்தலாம் இன்றிரவு வர்த்தகமானி மூலம் ஜனநாயகமாக அரச அறிவிப்பாம்.
19.ஒட்டுக் குழுக்கள் சிறுவர்களை கடத்தும் ஈனம் ஒருபுறம்,
20.இந்த லட்சணத்தில் கோத்தபாயா?வன்னியில் எந்த பொதுமகனும் உயிரிழப்பின்றி தங்கள் ஊத்தை இராணுவம் களம் கடைந்ததாம்.விடுதலைப் புலிகளை பூண்டோடு ஆழித்து விட்டானாம்.ஆயின் ஏன் ஆங்காங்கு தடைகளும்,தடுப்புக்ளும்?
21.பொது,தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும்,சர்வதேச ஊடகங்களையும் ஏன் அங்கு ஏக மறுப்பு?ஏன் இவர்களின் பிரையாசையான பிரசன்னத்திற்கு தடை?கேட்டால் கண்ணி வெடியாம்,ஆம் இவர்கள் கண்ணிவெடி அகற்றுவதில் வல்லாளர்கள்?ஒரு போர் விமானத்தை ஒழுங்காக இயக்கத்தெரியாமல்,உக்கிரெயினிலும்,வெளி நாட்டிலும் தரகருடன் தகமேற்றிய வல்லமை தெரியாத எங்களிற்கு!
22.அதி முக்கியமாக அங்கு அடிப்படை தேவையான சுகாதார சீர்கேடு,
தம் காலைக் கடனைக்கூட கழிக்க முடியாத அதி கேவலமான,நிலை.மருந்து,அங்கு எள்ளவிற்கும் கொடுக்கப்படவில்லையென நியம் சாற்றுகிறார் வன்னியில் வாழும் என் உறவு.
ஆம்,
இது மகிந்தாவின் மாத்ரு பூமி?

ஐ.நாவின் பான் கீன் மூன் உண்மையில் பாரமான நெஞ்சத்துடன்தான் ஐ.நா வாசல் திரும்பினார்,ஆயின் என்னதான் பெரிதாக செய்துவிடப் போகின்றார்?வல்ல ஒரு நிதிப் பங்களிப்பிற்கு முகாந்திரம் கோரியுள்ளார்,உண்மையில் இந்த வல்ல பதவியில் உள்ளவர் ஆகக் கூடியது 15நிமிடங்கள்தான் அங்கு நின்றார்.தான் எவ்வளவோ நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டதாகவும்,இதுபோல் ஒரு வலி தந்த நிகழ்வை தன் வாழ் நாளில் பார்க்கவில்லை என கோடிட்டு காட்டியுள்ளார்,மேலதிகமாக இன்னமும் அங்கு நின்றிருந்தால்,எம்மவர்களுடன் மனம் விட்டு உரையாடக்கூடிய சாத்தியத்தை இந்த தாடகர்கள் சாதூரியமகவே தடுத்து விட்டார்கள்,தமிழர் கூட்டமைப்பிற்கும் இந்த நிலைதான்.

ஆக,
இப்படியான நிலையில் எங்கள் உறவுகளின் தாற்பாரியத்தை சில மணித்துளிகளில் உளம் கொளமுடியாமல் உளம் நொந்து போனதாக,செய்தியாளர்கள் குறிப்புணர்த்தினார்கள்.
ஆயின்,இதுவே அங்கு வாழ்வாக கரிக்கும் எங்கள் இனத்துயரை சற்றேனும்
கற்பனையில் என்றாலும் வியல்பம் கொள்ளுங்கள் அவர்களின் வேதனையின் தாற்பாரியம் புரியும்.இது வெறும் புரிந்துணர்விற்கு உட்பட்ட விடயமும் இல்லை,
இங்கு புலம் பெயர் உறவுகளின் ஒவ்வொருவரின் வாசலிலும் வன்னியின் சாவிரித்து,சோகம் கடை விரித்துள்ளது,எனவே இது பற்றி மேலும் விசாலிப்பது பொருத்மற்றதாகப்படுமா?

இல்லை.

என்ன நடக்கின்றது?
உலகே,என் உறவே சிந்தித்துப்பாருங்கள்.
உண்ண வழியின்றி,உடுக்க உடையின்றி, ஆயாசமகற்ற ஒரு துண்டு நிலமின்றி,உயிரிற்கு உத்தரவாதமின்றி,சொந்த நிலமின்றி,சுமை பகிர துணையின்றி,அடுத்த விநாடியில் என்ன நடக்கும்?,ஏது நடக்கும்? என்ற உகந்த விதமான உத்தரவாதமும் இன்றி,இப்படியே பல இன்றிகளுடன் எங்கள் உறவுகள் முகமிழந்து,சோகவலயத்தினுள்,சோர்ந்திருக்க,எதிர்கால வாழ்விற்கு எவரின் தைரியமான, உத்தரவாதமோ,அன்றி உறுதுணையோ இன்றி,போகும்,தினம்நகரும்மனிதநேயமற்ற,அரக்கர்கூட்டஸ்ரீலங்காவில்,தினம் நரக வாழ்வில்,அதன் சேற்றில் நாறும் எம்மவர்களிற்கு நாம் என்ன கைமாறு ஆற்றப்போகின்றோம்?
இத்தனை வடுக்களை சுமந்த உறவுகளின் எதிர்கால வாழ்விற்கு ஏற்ற எந்த பாத்திரத்தை நாம் ஏற்கப்போகின்றோம்?,அன்றி உங்கள் தொலைத்தொடரில் வரும் கற்பனை பாத்திரத்திற்காய் பாழும் கண்ணீர் விடும் எம் தேசத்துறவுகளே என்ன வழி சமைக்கப்போகின்றீர்கள்?

இதுவும் என்ன பத்தோடு ஒன்றாய்,,,,,? பதிலின்றி உங்கள் முகம் ஒழித்து,உங்கள் அறம் அகற்றி வேற்று அரிதாரம் பூசி வேலியகற்றி வேசையாடப்போகின்றீர்களா?

அன்றி மிகையற்ற துணை வேண,ஒற்றமையாக இயங்கப்போகின்றீர்களா?
உங்களின் தங்கமான,ஆதங்கமான,ஆரோக்கியமான,கரங்களை எங்களின் தங்ககங்கள் நோக்கி மிதவான தயவுடன்,நேர்த்தியாக நுகம் கொள்வோம்.

சுட்ட மண்ணும்,பச்சை மண்ணும் ஒட்டாது என்பர்,எங்கள் இதயத்தை,உறவை,உற்றாரை,உறவினரை,சொந்தம்,பந்தம்,ஊர்,எங்கள் தெரு,
நாம் இருந்த குடியிருப்பு,இத்தனை உற்றதையும் அற்றதாக்கி எம் அகமெரித்வனுடன் இனியும் சேர்ந்து வாழ்தல் தகுமோ? எங்களை ஊனர்களாக்கி,ஈனர்களாக்கி,இரத்தல் என்னும் இழிநிலை ஊட்டியவனுடன்,எந்த உவப்பு இனி உரமேற்றும்?ஆயின் எங்கள் சொந்த நிலம் மீட்க,எங்கள் துயரகற்ற,நாமே இனி வலிமையுடன் எங்கள் போராட்டத்தை மனுக்கொள்வோம் வலிதாக,எங்கள புலம் பெயர் உறவுகளின் தார்மீக,தாகமான,தரமான மேம்படுத்தலுடன்,வீதியெங்கம் நீதி கேட்போம்,இதுவரை எங்களின் உறவுகள் அடைந்த,சொல்லெணாத்துயரின் ஊனங்களை,வேதனைகளை,ஆழமான,ஆயரக்கணக்கில்,தமிழினம் அழித்த ஆரியர்களின் வல்வளைப்பில் வதைமுகம் கொண்ட,மாபெரும் மனித அவலம் விதைத்த பாதகன் ,ஆரியக்கூத்தன் மகிந்தாவின்,கோத்தபாயாவின்,சரத் பொன்சேகாவின் வல்வளைப்பின் அநியாயமாக,கொல்லப்பட்ட எங்களின் ஆத்ம பரிபாலனத்திற்கு பாதை கோரி,எங்களின் நீதி கோரி.

வீரியமாய் ஆத்ம போர்முகம் கொள்வோம்.நீதி தேவதையின் வீதி தேடி..
வீணர்களின் அநியாய கோர போர் முகத்தில் எங்கள் இனத்தின் வாழ்வு தங்கும் விடிவு கோரி.வாழாதிருக்கும் வன் முகம் மறைத்து மெனமையான,மெருதுவான,அன்பான எங்களின் ஆத்ம உறவிற்காய்,எங்களின் அரிய பங்களிப்பை ஆதர்சனத்துடன்,வினயம் கொள்வோம்,

பேணும் ஒற்றுமைகள் இனி எங்களின் விதி வரையட்டும்.
வேணும் வேற்றுமைகளை வதமெரிப்போம்,
வீணில் நேரமதை விதைக்காமல்,
பாரினில் எங்கள் பாதை விரிய,
எங்கள் வேர் பற்றி ஓர் விதி சமைப்போம்.
அது தமிழீழ மலர்வாய் முகம் விரிய,
எங்கள் ஆத்மர்களின் முகம் சூடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்