புதன், 20 மே, 2009

பான் கீன் மூனின் பன்முகப் பார்வை.


அவலம்,மாபெரும் மனிதப் பேரவலம்,
பொருதும் பாதகம் விழையும் முன்னே,
அரும்பும் முன் இந்த அவலங்களை களைவதற்காய்,
ஆரியத்தின் அகத்திரையை ஆதாரமாய் உன் வாசலில்
ஊரும்,உறவும்,உற்ற துணை யாவும்,
எத்தனை வீச்சுடன் உன் வாசல்வரை வலிந்துரைத்தோம்.

ஐ.நாவின்
வேதகனே உன் காதில் என்ன நீ உளி கொண்டா,
உறைத்து நின்றாய்?எங்களின் உறவையெலாம் அந்த
காதகன் கரைக்கும் வரை களி(ழி)த்து தின்றாய்.
சாதகமாய் உந்தன் சன்னதியில் இப்போதாவது,எங்கள்
சன்னமான குரல் கேட்குதா?
இல்லை,என்ன அந்தப்புறத்தில் அர்த்தமற்ற கூச்சலென
அகமறந்து நோற்றாயே?

ஸ்ரீலங்காவில்,
ஆரியனின் ஆடியபாதமெல்லாம்,
திராவிடனின் தின[ட]மழித்து தீர்ந்தது தீராத தீவரவாதமென
நீ வகிடெடுத்து மகிந்தாவின் வாசலேகப் போகின்றாய்?
என்னே உந்தன் நெஞ்சகம் சூடிய
வஞ்சகப்புத்தி,

லங்காவில் நீயென்ன லாவகமாக,
பூங்கா அமைத்தொரு புத்த கோயிலமைக்க,
அத்திவாரம் போடவா ஆரவாரம் அகமமைத்து,
சித்தம் கொண்டுள்ளாய்,தித்திக்க
சித்திக்கும் உள்ளம் மௌவ்வினாய்.
எத்திக்கும் ஏதோ உளறினாய்!

சித்தம் கலங்கி நாம் நித்தம் உன் வாசல் வந்தபோதெல்லாம்,
புத்தவாதம் உன் புலம் மறைத்து நின்றதுவோ?
எத்தனே!
எத்தனை ஆதாரம் ஆரமாக நின் தளம் தந்தோம்,
தந்த தாரம் ஆனதாக்கம் அற்றதென்று நீ
அகம் ஒளித்து ஓதினாய்.இன்று
எந்த வேதார்ணியம் வேக நீ ஸ்ரீலங்காவின் வீதியேக,
விந்தம் கொண்டாய்?

போ,
அங்கு போதையூட்டும் சிங்களத்து சிங்காரிகளின்,
அங்கம் தழுவு,ஆர விந்திடு,
மகிந்தாவின் மங்கள வரவேற்பில்,அந்த செங்கள வரவேற்பில்,
தங்கத் தமிழரின் அங்கம் சிந்திய குருதியில் ஓர்,
ஆனந்த கூத்தாடு,அப்புறமென்ன ஆரவாரமாக அந்த
ஆரியக் கூத்தரின் ஆத்ம போதையில் எம் ஆத்மங்களை கரைத்து குடி..
ஆ,
மறந்து விட்டேன் ஞாபத்தில் ஞாயம் தெளிக்க,
விழியில் உனக்கு ஞானம் மிளிர,
மறந்திடாமல் தலதா மாளிகை ஏகு,
அங்குதான் புத்தனின் புனிதப் பல்லு,
ஆசுவாசமாக ஆங்கு அலங்கரித்திருக்கும்.
புண்ணியம் ஏந்திவா,மொட்டை தலையர்களின்
ஆசியையும் அப்படியை உன் நுதம் மொள்ளு.

மீண்டும்,
ஐ.நாவின் வாசலேகு,அங்கு நீ நுகர்ந்த
நூதனங்களை நீங்காத நினைவேந்தி.
ஆகா,
என்னே!
அந்த சிங்கத்தின் சீற்றமென,
வன்னியில் எந்த வதைமுகமும் வாதிக்கவில்லையென,
தன்மை மேயும் மனிதப் பே(போ)ரவலம் விரிக்காமல்,
தங்கும் மனித உரிமை மதித்து மதியூக வெற்றியீட்டிய,
வேதமென,ஆழுமைப் பத்திரம் அகம் சுரத்து,
வல்ல நிதி வளங்க நீ வையகத்தை வரப்பேற்று.

இதுதான் நீ எங்களிற்கு ஆற்றும் ஆதார சுருதி,
ஆயினுமென்ன!
சுரமிழந்து சோரமாட்டோம்,
சுரக்கும் எங்கள் சுருதி மீட்டுவோம்.

விழ,விழ எழும் எம் தாரக மந்திரம்,
ஒன்று விழ ஓராயிராமாய் ஓங்காரிக்கும்,
ரீங்காரிக்கும் சூரிய ரிதம் மிளிர்ப்போம்.
தான் நிறைப்போம்.எங்கள் வாசல் எம்
வாகை சூட வளமான வகை மொள்ளுவோம்.

நீயே ஓர் நாள்,
ஒவ்வும் ஓர் திருநாள் எம் வாசலை தீயே!
மேவி அழைக்கும் மேதகு மேவுவோம்.
மேதினியில் பூபாளம் இசைக்கும் எம்
மேம்பாலம் கட்டுவோம்,எங்கள் தேசம்
அதைக்கட்டுவோம்,எங்கள் ஆத்மாக்களின்
ஆரணங்கான ஆலயம் அமைத்தே தீருவோம்.
சூரியத் தேவன் சூட்டும் சூசகமான வழிபேணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்