ஞாயிறு, 24 மே, 2009

ஈர நிலம் பற்றாது,ஊர் பார்க்க எதுவும்?.

எங்கள் விரோதிகள்,
இப்போதும் எங்களின் இருப்பு வாசலில்,
நெருப்பென்று தெரிந்திருந்தும்,
நேயமான வயல் விரித்து,
லாவகமாக, இப்போதுமே?
புரியவில்லை!இன்னமும் புரியவே இல்லை.

என்று,
எப்போது? எப்படி?
இவர்களின் வஞ்சமனம்,
பொழுது புலரும் முன்
உதிரும் வாசம் போல,
எப்படி இவர்களால்,
அத்துணை அரிதாரம் பூசமுடிகின்றது?

அத்தனையையும்,
அந்தர் பல்டி ஆர்த்தடித்து,
உலக மகா பொய்களை,
நம்பிக்கை துரோகங்களின்,நரித்த,
வஞ்சனை உரோமத்தை,
எப்படி இவர்களால் இத்துணை முகவரி கலந்து,
களம் புங்க முரசமடிக்க,
கனகச்சிதமாக கரமாற்ற முடிந்தது?

கங்குலமகற்ற கற்ற வித்தையின்,
ஓங்காளம்,அகன்றெடுத்து,
தன் குலம் அங்கே நீள மயம் அகன்று,
நித்திய வாழ்வழிந்து.மருண்ட விழிகளுடன்,
நெருடும் நினைவழியா நாட்களுடனும்,
நகர,நரக, வேதனையில் மீட்சிப்பின்றி,

அகரம் அறுக்கும் அரகர்களிடை இடுங்கி,
பகர முடியாப் பாரங்களுடன்,திமிறும்
உளவெரிப்பு வெட்கைகளின்,வேட்கைகளை அகமகற்ற,
தளமின்றி,உற்ற உளமின்றி, உளவேட்கை, இறக்கிவைக்க,
ஆதங்க முகம் வேண்டி,வெறித்து வெட்ட வெளி நீர்க்க,
வாதை முகம் கோதுகையில்,

இவன்,நேற்று,
இந்த உகற்பிற்கு உள்ளாக்கப்பட்டவன்,
எங்கள் உபாதைகளின் வலியறிந்தும்,பட்டகாலில் ரணம் செருக்கி,
கலவி மறந்து நின்றானா,?கயமையை கலந்து ஏற்றானா?

எங்கும்,எப்போதும்,ஞாலத்தில்,
ஞானத்தில்,ஞான்றும் ஞாயம்.
வலிமை அகலும் போது,
புலியின் காதிலும் புற்றெறும்பு,
நலம் கேட்கும்?பரமசிவன் பாம்பு போல்,
காலம் இது கலிகாலமென,
காழ்ப்புணர்வேறி நிற்கிலோம்.

கரிகாலம் உதயமாக!
காலமேறி நாம் புலர்வோம்.அதுவரையும்,
ஓய்வேற்றி ஓம்பிலோம்,
ஒப்பற்ற பணியை
ஓர்மமாய் ஒப்பேற்றுவோம்,

தளம் மீட்கும் களம் காண,
காத்திரர்களின்,
தீட்சைகள் திசையேக,
உத்யானம் உரமேற்றும்
யாத்திரை உதிக்க நாம் நீட்சியடைவோம்.
உரப்போம்,உயிர்ப்பூக்கள் பூக்கவைப்போம்
உயிர்ப்பான உலகம் காண்போம்,

எல்லாமே,எங்கள் வசமற்று போகினதோ?
வல்லாள இனம் ஆங்கு வசப்புற்று ஓயுமோ?
கல்மேலொரு நாருரித்து,களம் காண்போம்,
அல்லாத நிலை தகர்ப்போம்,
எல்லாள கனதியின் ஏந்தல்களின் சந்நிதியில்,
ஒப்புவமையற்ற ஓங்காரங்கள் மீதொரு,
சத்தியம் உரைப்போம்.சாத்தியம் வகுப்போம்.

தனக்குவமையில்லாத எங்கள்
தங்ககங்களை தகம் கொள்வோம்.
இனவெரிப்பில் இழந்த எம்
சொந்தங்களின் சோகம் அகமேற்றி.
வனப்புகந்த வல்லாரின் வாசல்கள் யாவும்,
புவனத்தில் புதிதாக புலர.
இந்த பொய்ப் புனையர்களின்,
கட்டுமான அரிதாரம் கரிந்தேக!
வகிர்ந்தெடுக்கும்,எம் வல்லமையின் வல்லமை.

ஆம்,
வைரசைவிட வலிமையானது இந்த
வதந்தி,
வந்திருக்கும் செய்திகளின் சாரம்
சோரமேற்ற சொருகப்பட்டுள்ளதா?
ஆயின்,
எப்படி தமிழோசையில்,
இந்த பத்மாநாதனின் செவ்வி,
ஏந்தின்,
ஆயிலியம் பூணில்,
எந்த பத்மவியூகத்திற்கு இந்த?
வித்தகம்?

வெறும் வதந்தி இல்லை என்பது பத்மநாதனால்
பரிந்துரைக்கப்பட்டுள்ளது,
வீர புருசனாக எங்கள் மேதகுவும்,
அதன் மடியில் மற்ற மாவீரங்களும்,
மறுக்களத்தில்,சிங்கள பொருது களத்தில்
போர் மடியில் எங்களின் வீர விழுதெறிந்து,
சகலதும் அறுந்து ஆரியனால்?

எனினும்,
என்னைப்போலவே என்னுள்ளமும் ஏற்க மறுக்கின்றது.
காலக் கருக்கலில்,
எல்லாமே கனதியின கரம் இறுக்கும்.
வல்ல பகை எங்களின் வாகை தகர்த்தான,
கதை காதையாகும்.
காலம் கனிவு ஒற்றும்,

இல்லையெனில் எப்படி,
இன்று கூட,யாழ்செல்லும் படையணிப் பலம்.
தளபதி வெற்றிக்குமரனும்,வெளி விவகாரப் புலனாய்வுத்துறைத்
தலைவர் அறிவழகனும்,
ஆழமான காத்திரமான சேதி தந்தார்கள்,
கூடவே ஒற்றரின் வீற்றிருப்பில் நக்கீரன்,
பல மடங்கு ஆதாரமென,,,,,,

ஆழுமைத் தலைவனின் அக,புற நலம்சாற்றி,
ஆழுமையான அரசியல் மீண்டும்,
அண்ணலாய் அரங்கேறும் அரிய பாதை.
சுரங்கொள்வோம்,
எந்த விதையும் எறிந்தவுடன்,
ஈர நிலம் பற்றாது,ஊர்
பார்க்க எதுவும் உரம் உறக்காது.

வீர விழி வியப்பேற்றி,
ஊரறிய வலம் வரும்,
ஈர விழி யெறிந்து, தேறும் சாரம் சான்று,
நீர் தெளித்து வயல் பரப்போம்,நீங்காதான்
நெகிழ்வுரைப்போம்,நெடுதுயர்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்