வெள்ளி, 15 மே, 2009

வலுவிருக்க வலுக்கொள்ளு.


இத்தனை அவலங்கள் ஊட்டிய
எத்தனின் உள்ளத்தில்
எத்தனை மதகளிப்பு.அது
மந்தாரம் சூடியதானகவே,
சத்திடும் சதகழிப்பு,இதை
எத்துணை மனதுடன் ஏற்பது என்பதில்
எங்களின் பதகளிப்பு,எந்த
சத்துணை கொண்டிதை
இல்லாதொழிப்பதில் அத்தனை கனவிருப்பு,
உலவும் உள்ளத்தின் மனக்கொதிப்பு,உசா கொண்டிட
யாருமில்லையென யாண்டிட யதி இருப்பு.
யாரும் உள்ளகம் கண்டிதை யாத்தெம் யாசகம்
யாக்கார என்றொரு யதவிருப்பு.

எங்கெலாம் உடலங்கள் உதிர்ந்திட,
உள்ளத்தில் பதகளிப்பு,
எங்கும் சடலங்களாக்கி எம் சந்ததி
அழிப்பவன் உதிரான என்றொரு,
ஓங்கார ஒருக்களிப்பு.
இதை உற்றவன் இங்கினி இல்லாதொழித்திட
ஓஙுகிடும் மனவிகாரிப்பு.
சதை பிய்த்தெறிந்து எங்கள் சனத்தை
அழிப்பவன் உய்வான என்றொரு சத்தங்கள் மனவிரிப்பு.

அவயங்களை அரிந்தவனை,
அழித்திட ஏகுமே
ஆதங்க தளவிரிப்பு,
அங்கங்கள் பிளந்தவனை,
எரித்திட,ஏகுமே இனியிருப்பு
தங்க அவன் இனியெம் தரணியில் உலவிட,
தாங்குமா களவிரிப்பு,இதை
தாண்டியே,
சிங்களன் சீண்டிட சங்கடம் ஆக்குமே,
வல்ல புலியிருப்பு,

வல்லமை தன்னகம் தாங்கியதாம் இந்த
சிங்கள வசீகரிப்பு,எல்லாம்
வகை பிளத்து,
வெங்களம் வெட்டி வீழ்த்திட ஆகுமே பகை
வென்றதன் தகையிருப்பு,
வேயும் களம் வேதினியில் வேதமாய் ஊற்றிட,
தாகுமே தமிழ் விரிப்பு.எங்கள்
தாயக உள விரிப்பு.தமிழ் ஈழத்தின்
மலர்ச் சிரிப்பு,
எங்கள் மாதவ மனச்சிலிர்ப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்