புதன், 27 மே, 2009

வல்லாதிக்க வல்லூறுகளின் வலிதாங்குமா?


எல்லாள ஆளுமையில் ஏறி நின்ற எம் வலிமைகள்.
சொல்லாளா செம்மல் எங்கள் சோதிப்பெரு விளக்குகள்.
அல்லாடி இந்த ஆதிக்கத்தில் அறமிழந்து போயினவோ?
வில்லாடி,வாளேந்தி,வாகையின் முடியில் வேதினி ஆண்ட குடி.
எல்லாமே இங்கு வேற்று பாதையற்ற காதையாயினவோ?

அல்லாற்றல் குடி ஒங்க அற்ற வழி வேறின்றி,
நல்லாற்ற வழி தான் கூற்றி தோற்றம் கண்ட தமிழ்க்குடி.,
வல்ல வழி இதுதானென்று வகை,வகையாய் கட்டமைத்து
வெல்ல வழி மாற்றான் கொள்ளா, கொலுவமைத்து கோலோச்சி,
நல்லாட்சி நாம் அமைக்க நாடும் வழி தெளித்து நின்று.
செழித்த எங்கள் செழிப்பெல்லாம் வழித்தடைத்து போயினவோ?

நிர்தாட்சண்யம் சூட்டி தமிழினம் சூனியமாய் சுழன்றதுவோ?
பாரினிலே ஈழத் தமிழினம் பதகழிக்க இனமழித்த,
பார்ப்பனர்கள்,பாவியர்கள் சாவிரிக்க அகமொழித்து,
வீற்றிருக்க,பகை நேர்த்திருக்க,தோற்றிருக்கும்,
தமிழ் தோன்றாமலே போயிடுமோ?
ஊர்திரும்ப ஊழியாள,உரிமையெல்லாம்,விதிர்,விதிர்க்க
வேரறுத்த வெற்றியாளன் வெம்ப எமை விட்டானோ?

கார் கொண்ட முகில் இனி திரள் கலைந்து போகுமா?
கார்த்த ஈழத் தமிழனவன் கதியைகாலம் மாற்றுமோ?
வேர்த்த எங்கள் வீரம் இனி புதிதாய் புனர்ந்து பூக்குமோ?
ஆர்த்தெடுத்து விதிதனை ஆதித்தெடுத்து ஆர்க்குமோ?
நீர்க்க இது நிலையில்லை என்றே தீர்க்க மறமாற்றுமோ?
தீய்ந்தது எம் திடமென்றே திரி அணைந்து போகுமோ?

நித்தமெல்லாம் இதே நினைவு,நீங்கியதுவோ எம் கனவு.வீட்டு
முத்தெமெல்லாம் என் முகம் கேட்கும்.
வித்தகம் வேறு என்வென்று தனை வினையறுத்த என்.
நிலம் கேட்கும்.
உத்தமரின் உத்தம தியாகமெல்லாம் உத்தெரித்து என் உளம்
கேட்கும்.
தமிழ் சித்தரின் இந்த தீட்சிதத்தை உச்சரிக்கும் அதன்
சூத்திரத்தை,
எத்திரை ஆக்கி அவர் ஆத்மம் சித்தரிப்போம்.அவர்
முத்திரை பதிக்க,
எந்த வித்தகத்தை இனி வசீகரிப்போம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்