வெள்ளி, 15 மே, 2009

ஒப்பேற்ற ஓயுமா ஒப்பாரி??????

காத்திருக்கும் காலம் என்று பூத்திருக்குமோ?
காணும் காலவடுவாக நீண்டு மாய்திருக்குமோ?
ஈத்திருக்கும் ஈழம் என்று இகமியங்குமோ?ஊன
பாயெரித்து ஊதல் எல்லாம் உளமியங்குமோ?
எங்கள் மனமியங்குமோ?

ஊரெரித்து பகையும் உலவும்,
உடலெரிந்து உறவும் உறையும்,
பாரெடுத்து சோகம் சொல்ல பாதை விரியுமே,
இந்த நோவுரைக்க நேயம் கொள்ள மனம்
இயங்குமே,உலரும் மனம் இயங்குமே.

தாகம் தீர்க்க தண்ணீரில்லை,
பசித்திருக்க உணவும் இல்லை,
பாலுக்கழும் பாலர் முகங்கள்,
பார்த்திருக்குமா?இந்த பார் முழுதும்
உறவிருந்தும் பால் சுரக்குமா?

பாவி அவன் போர்க்கலங்கள்,
பதை,வதைத்து உயிர் விழுங்கும்.
மேவி,
ஆவிதாவி வன்னி மண்ணில் மேய்ச்சல் பூணுதே,
காவி உயிர்களெல்லாம் கந்தகத்தில்
கரை ஒதுங்குதே.

எரிகலங்கள் ஆகும் அந்த வெண்ணிறக் குண்டு,
பெரிக்கி, உடல் உருக்கி கருக்கும் கந்தகங் கொண்டு.
வீசிப் பகை வீதியெல்லாம் சாவிரிக்குதே,
ஊசி உடல்கள் எல்லாம் உதவியின்றி நரகலாகுதே,
ஈசி,
கிருமி,மூசி ஈழமெல்லாம் கரைசலாகுதே.

வேர்த்திருக்கும் காலம் இல்லை,
வேங்கை களம் ஓய்வதில்லை,
பார்த்திருக்கும் நேரமில்லை,களம்
இறங்குவோம்,சர்வ களமியங்குவோம்.

இன அழிப்பை ஈவின்றி ஈனன் ஆற்றுவான்,இனம்
சுரந்தியங்கும் ஈழவேட்கை அழித்திருப்பானா?
மானம் காக்க புலிகள் எல்லை மீண்டும் ஏகுவார்,பார்
வானமே எல்லை என்று வாகை முழங்கி வெல்லுவார்,
ஈழம் இகத்தில் ஈற்றுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்