திங்கள், 18 மே, 2009

ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்


இன்னமும் எத்தனைமுறை எங்கள் அண்ணல்களை, நீ
கொள்ளியிடாமலே கொன்று குவித்தாய்?
சன்னங்கள் கொண்டதனை சலிக்க நீ சிலிர்த்தாய்,
ஆன கனவால் அமர கதியாய் அரிந்தெடுத்தாய்,
ஊனக் கண்ணால் உன் மத்தமாய் ஈனமாக்கி
தானக் கொண்டதென்ன தாண்டவக்கோனே,
தமிழன் தலைமைதனை கொய்வாயோ தாண்டவக்கோனே,

தமிழினத்தை தாரை,தாரையாய் அழித்துந்தன்,
ஈ(இ)ன விரோதத்தை குரோதமாய் குவித்தழித்தாய்,
மான,விநோதம் உன் கண்ணில் மருக்கொள்ளும்,
ஈன பிறப்பவரும் இன்னுடனே இழிந்துருவார்,
பான,குழலெடுப்பாய்,பாரெல்லாம் முழக்கிடுவாய்,
பாரே,என் விந்தையென பார்குழலால் பரப்பிடுவாய்,

ஆரோ!
உன்னையெலாம் ஆர்த்தெடுக்க நீ குளிர்வாய்,உனை
ஈர்த்தெடுக்க ஈகத்தில் ஈகப் புதல்வர் ஈர்ந்திருப்பார்,
ஊர் தெறிக்க விழி பிரிவாய்.
ஊன நிலை உறுப்பெடுப்பாய்.
பார்!
உந்தன் இனமினி பாசமதின் பாரமறியும்,
வேர் பிரித்து, விழுது பிடுங்க,
வேலுப்பிள்ளையென்ன,
கிளிப்பிள்ளையா?
அவன் ஈ(வீ)ர மொழிப்பிள்ளை.

வாழ்வார்!
வையகத்தில் இப்படித்தான் வாழ்வென,
வரித்தெடுத்து, நிலையாற்றி,
தாழா நிலை வரிக்க தக்க தாற்பாரியம் தகமுமைத்து
பாழா தலை பரிக்க பக்க மேற்காரியம் அகமமைத்து,
பேள அவர் நாணுவார் பேறு இவன் பெற்றான்,

தாள,
லயங்களுடன் சாறு கொண்ட தாகம் தீரும்.
மேள,
வாத்தியமும் மேன்மைகளை மீட்டுவரும்.
ஆள,
நீ அருகிருக்கமாட்டாயே,
பேள,
நீ பெட்டியாகி.பொடித்திருப்பாய்,

நாளை இந்த லயம் பேணும்,
தாளை இந்த தனம் வேணும்,
வனம் வாழ் வாழ்வெல்லாம் பல்லாக்கு சுமந்து வரும்.
கனமான வாழ் சுரக்கும்,கனவெல்லாம் களமாற்றும்.

ஊழித்ததெல்லாம்,உனை வதைக்கும்,
உள்ளதெல்லாம்,உறுப்பமைக்கும்,ஆற்றல் மொள,
அற்ற குளத்து அறுநீர்ப் பறவையாய்,
எப்போதும் அருகிருக்கும்.உற்றதெல்லாம்
எப்போதும் உன்னுடனே நுகம் கொள்ளும்.

நேரியதெல்லாம் நெறியாற்றும்,
விரியவே உந்தன் நுதம் சீந்தும்,
பாரில் பாதமாகி பவனிகொள,
ஆதங்கச் சூரியன் ஆரோகணமாய் ஆரோகிப்பான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்