சனி, 30 மே, 2009

வயல் விரிய வகிடெடுப்போம்.


வஞ்சக நெஞ்சம் கொண்டான் சிங்களம்,
வாரி சுருட்டியழித்தான் எங்கள் தங்ககம்,
காஞ்சிதையாய் நாங்கள் கருக,நெஞ்சில்,
பூரிப்பில் வெற்றிப் பூவாய் அவன் மெருக.
வாரிச் சுருட்டியழித்தான் எங்கள் தங்ககம்.

தஞ்சமாக தங்கள் வலைவிரித்தான்,அங்கு
தாயும்,சேயுங்களை களைந்தான்.
தர்மத்திற்குகூட தண்ணீர் தர மறுத்தான்.
தக்க மருந்துங்கூடவே தடவ தவிர்த்தான்.
எந்தன் எந்தையரைக் கூட கரித்தான்,பாரில்
ஆரியக் கூட்டத்தால் களம் கலந்தான்.

ஐ.நா,மன்றில் நாம் அந்நியமானோம்.
ஐக்கிய ஆரங்கள் தவிர்க்க அரளியானோம்,
ஏங்கி தவிக்குதைய்யா எங்கள் உதிரம்,பாரில்
பாவியாகுதைய்யா! எங்கள் அதிரம்.தமிழ்
ஊனமாகுமா உன் சதிரம்,கூனி குறுகிப் போகுமா?,
எம் குவியம்.

எத்தனை தடைகளால் இவன் வைதாலும்,அங்கு
மெத்தனமே கடை விரித்தாலும்,அவை
அத்தனையும் விடை கடைந்து,புவி
சித்தம் கலைந்து சீறி எழுமே,பார்
வித்தகங்கள் வினைய வீரியம் பெறுமே.

இத்தனை விதைகள் அங்கு விதைத்தோம் எம்
சித்தமெல்லாம் சீந்த விதைந்தோம்.நீள,
நித்திலத்தில் நிலம் நிறைத்து,நீட்சி நிரவ,
நித்தம் தலம் நிறுவி, எங்கள், கைத்தலம் கையேற்று
வித்தக தெய்வங்களை களம் இழைப்போம்,

கல்லறை வீரம் மீதோர் ஆணை வைத்து,
வல்ல பகையின் வாகை தளம் எரித்து,
சொல்ல வல்லானின் சோகம் களைந்து,
வெல்ல வல்ல வழியாற்றி தேசம் அமைப்போம்,
ஈழ தேசமலர்வில் கனம் இணைப்போம்.

நெஞ்சில் வல்ல உறுதி வகை பொருத்தி,
வஞ்சம் தீர்த்த பகை வகை நொருக்கி,
துஞ்ச மறுக்கும் துயர் களைவோம்,
வெஞ்சமரில் வீரம் திளைத்த,தீர
ஈழ தாகம் அதை தினைவெடுப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்