சனி, 9 மே, 2009

திரை மூடிய உரை உரத்தது.


ஈனத் தரம் தந்த சுரம்,
இன்றுடன் இல்லையாயிற்று,அந்தோ
இந்த இழிநிலை சூட்டியவன்,
எத்தரம் கோணியிருந்தான்?

புத்தனது சூத்திரத்தின் பூத்துருசாதி,
எத்தனாக எங்கள் இளந்திரையை,
எட்டப்பனாகவா ஆக்கிவைக்க ஏற்ற
பாத்திரம் புரிந்திரு புலம் பெயர் உறவே.

ஆற்றல்கள் அழியவில்லை இதை
ஆதங்கமாய் என்றும் பூண்டிருப்பாய்.
அது ஆதவன் பிரபாவின் ஆய்வு தளம் ஆங்கு
அவனாற்றா அணுகுமுறையா அரங்கேறும்?
புவனத்தில் புரியாத புதிர் ஒளிப்பான் என்றும்,
புரியாத நேரத்தில் அவன் ஒளிர்வான்,

மாற்றங்கள் கள ஆற்றல்கள் கைவரும்,கலை
தோற்றங்கள் தோயும்வரை தோன்றிருப்பான்,
தோய்வென்ற,தொய்வுகள் அவனாற்றான்- ஆயின்,
ஆரியன் வசம் சாவிரிக்க சூரியன் வகுத்திருப்பான்.
ஆகு தளம் அறியாமல் வால் பிடிக்கும் சில கூலிப்படை,
குறிக்கொள்ளும் குரல் பிரியும்.

சந்தேகனே!
எம் இனச் சந்தேகனே!
உன் தேகம் உறுக் கொளும் நோயறிவாயா?ஆயின்
உன் தேசம் தறுக் கொளும் நாவறிவாயா?

பாரினிலே எம் பணியினை செம்மையாக்கி,
வெம்மை கொள்ள,
தாரணியில் தன் அணியால் தரமாக்கும்.
தரம் கொள்வான் எங்கள் தகமவன்.

பற்ற!
உன்னகம் பற்ற,
உன் உளம் ஏற்றும் வளம் ஊறிஞ்சி ஊனமாக்கும்,
ஊதாரிகளின் நாரித்தனம் வற்றி வாஞ்சை கொள்ள,
கைத்தலம் பற்றி அவன் கை தருவான் காலம்
ஏற்ற பணி சீரஞ்சீவிதமாக்கியே!
சீர் தருவான் சீராளன்,
இகம் இயங்க தமிழீழம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்