வெள்ளி, 5 ஜூன், 2009

மூப்படையாத முகிழ்வனின் முகையான முகிழ்வில்

உளம் தழைத்த உத்தமனே,
உரும்பிராய் நகரின் உத்வேகனே,
விரும்பி வீச்சுடன் ஈழநகை ஈர்த்தவனே,
அரும்பி ஆக்கி ஆக்ரோச விதை விதைத்தவனே,
வேழனே,தமிழீழ வேந்தனே,உந்தன்
வேட்கையை வேகம் தணிக்காமல்,
வெங்கள வேதினியில்,
சிங்கள சீற்றர்களிடம் சிறிதும் சிறையாமல்,
சீட்டிய உந்தன் சிகர சிந்தனையின்,
அகரத்தை ஆகுதியாக்கிய,
அமரனே,

நீ விதைத்த விடுதலைத் நெருப்பு,
உன் ஆத்மாவின் ஆவி தழுவி,
வியாகம் கோர்த்து,வீரியம் பொழிந்து,
தியாகத்தின் தினையில் திவ்வியம் சுரந்தது,
வானுலக வாழ்வது மெய்யென்றால்,நீ
மேவி சிலிர்த்திருப்பாய்,உன்
ஆவி குளிர்ந்திருப்பாய்.ஆகுதிகளின்,
ஆய்வினிலே ஆ தங்கியிருப்பாய்,இந்த
சாசுவாதமான எண்ணங்களிலே ஏகித்திருப்பாய்.

ஆனால்,
இன்று இதுதான் நியமோ? என்பதான வீசத்தில்,
கோலங்கள் அழிந்ததுபோல் ஒரு தேற்றம்,
ஞாலத்தின் ஞாயமற்ற அசைவில் பல உதிர்வுகள்,
உள்ளம் உருக்கும் உறைவுகள்தான்,
வீழும்போதில் விறைத்துத்தான் போனோம்,ஆயினும்
அற்றவைகளின் ஆகுதிகள் மேலொரு ஆற்றல்,
கூற்றம் அழித்து கூடும் குவியம்,குகைய,
மாற்றத்தின் மையத்தில் மகிமை மாற்றுவோம்.
காலம் என்றும் இன்று போல் இயங்காது,

இயங்கு தளத்தின் கையகம் இலங்கும் நாள் குறிப்போம்.
வியங்கள் சூழ விதிவகை மாற்றியோர் புயங்கள் பூட்டுவோம்.
தயங்காத தகையின் மயங்காத மார்க்கம் மையல் விரிப்போம்.
பூத்திடும் ஈழத்திற்காய புதுப்புனல் பாய்ச்சுவோம்,
நேர்த்திடும் போதில் உன் பூ முகம் பூணுவோம்.
காத்திரு,
கார்த்திகை தீபத்தில் உன் காணிக்கை ஆக்குவோம்.
வேர்த்திராத எங்கள் வேணியம் வெகுப்போம்.

மாவீரன் சிவகுமாரின் 36ம் நினைவு அகவை நினைந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்