வெள்ளி, 26 ஜூன், 2009

குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவாயா?


நெஞ்சமெல்லாம் விஞ்சும் நெருப்பெரிக்க,
அஞ்சாத அந்த ஆத்ம ஆதங்கம் அதைத்த,
விஞ்சாத எங்கள் வித்தக கவியாம்,
உலைக்கள வியாசனை எந்த உத்திரத்தில் ஊடுவேன்,

நஞ்சாடும் நகையணிந்த நர்த்தனர்களின் நாமம் நேர்த்தவன்,
துஞ்சாத துணியணிந்த தூமங்களின் துணை தூய்த்தவன்,
பஞ்சாக பலமிழக்க பகையின் பன்முகம் பரிந்தவன்,
வெஞ்சமராடும் வேதியர்களின் வேகம் வேர்த்தவன்.

கிஞ்சித்திற்கும் கீர்த்தி கிளியா கீர்த்தனவன்,
பஞ்சத்திற்கும் பாகம் பரியா பார்த்தனவன்,
அஞ்சி,அஞ்சி ஆள அகம் ஆற்காதவன்,வேதினியில்,
நெஞ்சிலிலே நேர்த்த நோத்திர முகை முரசானவன்.

சந்நிதி தோறும் சாக்காடகற்ற சாதகம் சார்த்த சாதகன்,
எந்நிதி எய்தாலும் ஏற்காத ஏற்றமுடையவன்,அந்நிதி
ஆக்கமுறும் தேசம் சேர சேயானவன்,பூக்க புன்முறுவலுடன்
தேக்கமுறா தேகம் தேற தேனானவன்,பாக்களால்

ஊக்கமுற உளம் நெருடும் தேச சோகம் சுறள,
குறளூட்டிய குலக் குன்றோன்,புதுவை
பூக்களால் மட்டுமா புலம் பூரித்தான?,வலம் வாகை
வகைக்க வற்றில்லா வாதை
வரிந்த, வன்மம் வரிக்க, ஒப்பிலா ஓர்மம் ஒப்பேற்ற
ஓலை ஓர்த்த ஓங்காரன்.

புதுவை பூரிக்க புலமை எனக்கு பூர்வாங்கம் போதாது,
அகவை அரிக்க ஆர்தெடுக்கும் ஆர்வம் ஆதங்கிக்க,
எதுகை ஏந்தும் ஏதனங்களை எள்ளியபடியை ஏற்புடைய
மோனைகளையும் மோதியபடியை மேய ஆயுள் என் அகமெரிக்க
தானைப் புயலவனின் தாற்பாரியம் தகைக்க.

ஆர்த்தெடுக்கும் ஆழியனவனை ஆராதிக்க ஆற்றுமோ?ஆயுள்
ஊர்த்தெடுத்த ஊழியன் உறங்கா காவிய காலோன்,
மார் தட்டி எந்த அவைகளிலும் எங்கள் அறுப்புக்களை,
யாரதட்டி கேட்கவும் யதார்த்தம் யதைத்த யாப்பியனவன்,

போர்ப் புலத்தில் போகம் அறுக்க வீறு கொண்டெழுந்த விகற்பன்.
கார்ப் புலத்திலும் கண்ணியம் கரைக்கா காவியன்,
நார்ப் புலத்திலும் நாம் நரைத்த நாணம் நனைத்தவன்,
யார் புலத்திலும் யாழ் இசைக்கும் யாப்புடையவன்.

ஊர் கூடி வடம் பிடிக்க ``பா`` புனைந்தான்.ஊனம்
உற்றவரின் உளம் உதைத்து உறுதியிழைத்தான்,
கூர் கூட்டி கூனம் குதைக்க குவியம் குளிர்ந்தான்,வேரின்
வேதமது வேதினியில் வேர் விதைக்க வேதம் படைத்தான்.

யாராகிலும் யாகம் யாக்க யதைகள் யதைத்தான்,
பாரேகிலும் பதியம் பரத்த பாதை படைத்தான்,
ஊரேகி ஊடாமல் உதயம் உரைத்தான்,பாரில்
தூரேகி துளையாத தூபம் துளிர்த்தான்,தமிழ் தானம் தகைத்தான்.

கவி எடுத்து காத்து காக்க கலைகள் கடிந்தான்,
ஆவி அடுத்து ஒன்று உண்டெண்டாலும் அதையே ஆர்த்தான்,
நீவி நீர்க்கும் நிலையை நிலைப்பில் நினைத்தே நரித்தான்.
காவி காக்கும் களமே கனதியென்று காத்திரம் கலந்தான்.

புலத்துப் பூக்கள் பூரிப்படைய புத்தெழுச்சி புனைந்தான்,
புலந்திவர்கள் புலம்பா வண்ணம் புலமை பூத்தான்,வாரி
வலந்தி இவர்கள் வயமை வரியா வானம் வளைத்தான்,
சிலந்தி சிரத்தில் சீட்டி,சீட்டி சிரமம் சீர்த்தான்.

உங்களத்தில் உலவும் உசாவை உயர்த்தி உரைத்தான்,
வெங்களத்தில் வேயும் வேணவாவை வேக வெறித்தான்,
செங்களத்தில் கதிர்கள் கலவ கங்குல் களித்தான்,கால,
மங்களங்கள் மதியூகம் மலைக்க மாந்தல் மழித்தான்.

பன்முகத்து பகலவனின் பாதை பதித்தான்,
பகை பார் முகத்து பாறை பரித்து பண்ணிசைத்தான்.
மூகை முகிழ்கள் மொள்ளும் முகூர்த்தம் மூசமிசைத்தான்.
வாகை வளங்கள் வார்த்தெடுத்தே வதனம் வரிந்தான்,வீரர்
விதங்கள் விதந்தான்.

களங்களாடும் கானகங்கள் கனக்க கவித்தான்,காக்கும்
காவியர்கள் கவியரங்கை காத்து கனந்தான்,சீர்க்கும்
சீவியர்கள் சினங்கள் சிரத்தும் சீர்மை சீர்ந்தான்,அவர்
ஆதனங்கள் அவைகள் அவைக்க ஆக்கம் அமைத்தான்.
சூட்சுமங்கள் சுமைத்த சூத்திரங்கள் சுரந்த
சுட்டிகைகளை சூரிக்க சுமையும் இந்த சுமைகளை,
வேட்டிசை வேர்த்து வேட்டினானா வேசை ஆரியன்,இல்லை
காட்டிசைக்கும் காரப் புலத்தில் கலந்தானா எங்கள் காரியன்?

ஊகங்கள் என்றும் உவப்புரைக்காது,
மதியூகங்கள் இங்கு மதிப்பளியாது,
காகங்களிற்கு களிப்பாய் கனியும் காரியங்கள்,
எங்கள் கனதிக்கு கலவாத
ஏகங்கள்,ஏதனம்
என்றோ ஓர் நாள் நூதனர் நிரப்பி வரும்,
அதுவரை,
ஐயங்களை
அகமொதுக்கி ஆதங்கமாய் அணிந்நிருப்போம்,எங்கள்
சூரியர்களின் சூலத்துடன்,அந்த
உலைக்கள வியாசனின் உத்திரத்திற்கு,
வேலிமைகள் வேட்டி வைப்போம்,
வேயும் வேதனைகள் தாமொதுக்கி.

சீரமைக்கும் சீவியங்கள் சீலத்து,
காரமைப்பு காவியங்களை காவி உலா மேவிவர.
மெய்சிலிர்க்கும் மேதினியர்களின்,
மெய்ப் புலத்து, பொய் கரைக்கும் போரரங்கு.
உவந்துரைக்கும் உறம் மொய்வோம்,அகவும்வரை

ஆதங்கங்கள் தங்ககங்களிற்குள் தாய்மையாய்
தூதர் சங்கங்களின் தூய்மையை துவர்த்தியபடி,
மாதவம் மனம் மௌவ்வ மானம் மகிமை மாற்றும்.
ஆதவம் ஆற்றுவோம் அருகிருப்பார் நாளையென.

குரவும் குரலோனே கூர்ப்பாயா?ஆர்ப்பாயா?அகமற்றுப் போவாயா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்