சனி, 8 ஆகஸ்ட், 2009

பொறுப்புக்களை பொதியவிட்டால்?.


ஈர விழிகளுடன்,
ஈன மொழிகளுடன்,
ஊன பொழிவெடுக்கும்-மானம்
ஞான வழி வருடுமா?

பார நெஞ்சங்கள்,
பாரா பிரபஞ்சங்கள்,
சீரா சிறப்புக்களை,
ஊராட ஊடுமா?எந்த
நீராட நாம் நித்திலம் நிறைந்தோம்?

சித்திக்கும் சீலமென்று,
எத்திக்கும் ஏரெடுத்து,
முத்திக்கும் முற்றத்தில்-
சித்தமாய் முடிசூடிய-தமிழ்
வித்தகமெல்லாம் விழலாய் விறைந்தனவே.

பத்தியம் பதித்திருக்க,
முத்திலமும் முகிழ்த்திருக்க,
நித்தியர் நிறைத்த நிலம்-நிரலழிந்து,
கூத்தியர் குழாமாக குலங்கள் ஆங்கு,
குரங்கு கை பூமாலையாய்.

சத்தியம் சரிவெய்த,
சாத்தியம் கை கொடுக்க,
மத்தியம் மலிந்தழிக்க,
வெத்திலம் வேரறுக்க,
எத்திலம் ஏற்று முகிழ்வோம்?

பத்தோடு பதினொன்றாய்,
பத்ம நாதங்களும் நலிவெய்த்தும்,
உத்தரம் உருத்தெடுக்கும்,
உதிரங்கள் உறுப்பமைக்க-எந்த
உதரங்களை உறுக்கொற்று-உலக
ஊட்டங்களை உறுப்பொய்வோம்?

தமிழ ஈன தமிழ,என இந்த பரமம் பழிக்க,
உமிழ நீ என்ன உறுப்பமைத்தாய்?
கமழ,ஈழ நேயம் கமழ கமலத்தின்,
செதிலங்களை எந்த செப்பனாற்றில்-நாம்
செப்பனிடுவோம்?

ஆதங்கங்களை ஆரமிட்டு-எந்த
பூதாரங்களில் எம் புனரமைப்பை,
சீதளங்கள் அகற்றி சீரமமைப்பு சீற்ற-உற்ற
வேதாளங்களை வேண்டி நிறைய,
பாதாளங்கள் பரமேற்றும்,
பதிவதனை பரிப்போமா?

இருட்டினில் எங்கள் இழவுகள்,
மருட்டி நிற்கும் மதர்ப்புக்கள்,
விரட்டி விடும் வீரியமற்றோமா?
உருட்டி உதாசிக்கும் உறவெடுப்போமா?
பொறுப்புக்களை பொதியவிட்டால், எந்த
உறுப்புக்களும் பொதிகையாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்