புதன், 16 செப்டம்பர், 2009

திலீபனின் தீபத்தின் மேலொரு சுடரேற்றி!


ஈரக் காலடி இழைந்த புண்ணியன்.
இறுதி வரையும் இலங்கி இணைந்தவன்.
காலக் காவடியில் கரைந்து போகவா_அவன்
காத்திரமாய் ஈழக் கனவில் கனன்றான்?

பூத்திருக்கும் புன்னகை புயம் மொள்ள,
வேர்த்திருக்கா வேதம் அகம் மொவ்வ,
யாத்திருந்த யாகம் யதை இழக்குமா?அதை
யாத்தவன் யாத்திரை ரதம் இழக்குமா?

காலக் கருக்கல்கள் களங்களை கரைக்கலாம்!
கோலம் அது மாற கோத்திரம் கோர்க்கலாம்!
ஞாலக் கலயம் ஞாயம் நனைக்கலாம்_ஞான்ற
ஈழக் கனவதை சிதைக்க முதிருமா?

ஊழிக் காற்றது உலகொழுங்கை உய்க்கலாம்_வேலி
சாய்த்தெம் வேகம் கரைக்கலாம்_சால
விழித்த எங்கள் வேள்வி கதைய காத்திரம் கொள்ளுமா?
வேண்டாம்!
எங்கள் வெய்யனின் வெப்பக காற்றது வேர்க்காது,அதை
வேய்ந்தவன் காலடி மொண்டு எம்-
வேதத்தை வேய,

மாய்ந்த எம் மைந்தர்களின்,
மயானத்தின் மேலொரு மையத்தை மகித்து,
கொய்ய ஈழ காலத்தை எம் கனவின்-
காத்திரத்தை சிரமேற்றி களைப்பகற்றி தீப்பந்தம்,
தீற்றி எங்கள் தேசத்தை நோக்கிய நேர்த்தலை நெய்வோம்.

ஓய்வு என்பதும் சலிப்பு என்பதும்,
சாய்வையே சார்த்தும்,
தோல்வியின் படிமத்தை எங்கள் தோத்திரமாக்கி-ஆன
சூத்திரம் சூட்டும் சுந்தரர்களை கரம் கொள்வோம்.
வெற்றி படிக்கட்டாய் அந்த தோத்திரமே எங்கள்
தோள் சாயும்.

ஈயா அரக்கரின் ஈமக்கடனாற்றும் தேசக் கடன் உண்டு.
தேயா பிறப்பெய்வோம்,சூடும், சூழும் எத்தகை இடரையும்,
அகக் கொள்வோம் அற்ற கடனெல்லாம் கடனாக,
ஈகக்
கடவுளரை மனக் கொள்வோம்-
திலீபனின் தீபத்தின் மேலொரு சுடரேற்றி-
அனலாக,
புலனாகும் பாத்திரம் ஏந்துவோம்.

ஈழக் கனவேந்திய,
சோழர்களின் சேந்தல்களை களமேற்ற,
வீழாக் கரம் கோர்ப்போம்.
விடிவு தேடும் உள்ளம் விசாலிப்பையே யாக்கும்,
சலிப்பெறிவோம்,
உத் வேகம் பூண்டு எம்
உணர்வேற்றி உளவுரண் ஊக்குவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்