
கோழி வளர்த்த கிளவிகளாய் சிலர் இங்கு
விடியல்களை விமர்சிக்கின்றனர்,
வாதை இவர் வகுத்தார் என முகுகில்
உபாதை கலந்து குத்தும்
மோடிகள் சிலர்,
அன்று!
பகலவனின் பாதையில் பரிந்துணர்வுகளை பற்றினார்கள்.
புலி தூங்கினால் எலியும் ஏறி விளையாடும்,
வலியறியாது,
வறுமையென்று வக்கணையாய் கதை பகரும்,
துதி பாடி எம் தோட்டங்களையும்,
தேட்டங்களையும்,
தனதான விட்டங்களாய் வனம் பொழியும்
பலி(ரி) காணார்,
சுகம் தேடும் பாவிகள்!
இவர்
கலி கால காத்திரராய்
கனவெய்வார்,
காலம்
என்றும்
கறுப்புக்களை களம் சுமப்பதில்லை என்ற
யதார்த்தம் மொய்யா
பொய்யர்கள்
போதிப்பது சித்தமல்ல,
பித்தம் மென்ற
ஞானம் என்றும் யோகம் சுரக்காது,
இயற்கையின் பல இழப்புக்களே
இன்றைய புது யுக பிரவாகம்.
சரித்திரம் ஒன்றும் குருதி சுரவாமல்,
இந்த
வனப்பெய்தவில்லை
ஒன்றின் இழப்பே
மற்றொன்றின் பிறப்பென்ற
வேதமறியா வெட்டிகளே
இதயமிழக்கா,இரவல்சுரக்கா
சேந்தல்கள் செப்புவது ஏதும் இல்லை-அது
துப்புக் கெட்ட துரியோதனமாகும்,
பகலவனை சுட்டதாக,
என்றும் எந்த சோதிகளும்,
மகிழ்வெய்தவதில்லை-சுய
பரிசோதனைகள் என்றும் சுகமிழக்காது,
சுயம் இறக்க சூட்டிய,
சுதந்திரம் என்றும் தரமிழக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக