வியாழன், 17 செப்டம்பர், 2009

ஊழ் வினை ஆற்ற உக்கிரம் கொள்!


இது!
இளைப்பாறும் களமல்ல-இளைய
தலைமுறையே!
இருப்பை இறுக்கமாக்கும் இயங்குதளம்.
நோக்கி நீ நேரெழு,
சேடம் இழுக்கும் எம் சனம்.
சோக்கான வாழ்வுனக்கு எங்ஙனம்?

மாடம்,மாளிகை,கூடம்
பாடம்,மளிகை,பொதிகை
ஏதனம் ஏந்த வைத்து நீ வாழும்
நூதனம் நுகை கலையும்.
தாடகைகள் எம் தாம்பாளத்தில்-நடம் புரியும்
நோய் உன் வீட்டு வாசலில்,
உன் தடைகளை தளம் தாட்டும்-இல்லையேல்

இருப்பிழந்து,இன்னபிற அத்தனையும்
நெருப்பிழந்த எம் இனத்தின் மூச்சு-உன்
அத்தனை முனைப்பையும்
சித்தம் தளர்த்தி சீக்கிரம் நீ சீக்காளியாகும்
தேர்க்களம் அங்கு சிங்களனால் சிரசெறிய
பார்க்களம் பார்க்குது,

நீர்க்கும் உன் சந்த்ததியின்
போர்க்ணம் புலவெடுக்க உன்
வடங்கள் கை கலந்தால்-மீட்சியற்ற
திரட்சியாய்
ஊரிழந்த உறவுகள் நாளை
பேரிழந்து பேய்ப்புலத்தில் அந்தப்புரம்
ஆக்கிரமிக்கும் ஆயிலியம்தான்,அரக்கர் வான்
தொக்கும்.

தோழமைகள் உன்
சோம்பலை கரைக்க
பாழமையா பாக்கேந்தி
ஊழ் வினை ஆற்ற உக்கிரம் கொள்
சத்திரம் சாற்றும் ``சா`` தனைதவிர்த்து

விகண்டெழு வீதி வா
விதி வரையும் விரையர்களின் முகம் கீறு
பாதி வழி பயணித்த,பா தொடரு
நாளை விடியல்கள் உன் முகம் நீவும்
நீ இல்லையெனில் கூட உன் சந்ததி
அதிதியல்ல என்ற ஆதங்கப் பூ சூடும்-இந்த
கானம் அங்கு களிப்பெய்ய உன்
கவசங்களை களைந்தெறிந்து,
ஊனம் உறையும் எம் உற்றாரை மீட்க
ஈனம் ஈய்ந்தவனின் ஈரல் கிழிய,
உக்கிரமாய் குரலேந்து.

மானம் மீட்டாரின் மகிமை பண்ணொழிக்க,
ஓது
உன் ஈழம் விடியும் வரை வரையில்லா,
வரைபுகள் உன் வையகம் கொய்ய,
மரபேந்தி மை தீட்டி பாரக வீதி வா.

உதிரம் பொதித்த போதியரின்,
போலி முகம் காலியாகும் வரை,
கனதியாய் கனலெடு காத்திரமான,
கதிரவனின் காயலெடு உதிக்கும்-
உலகம் உன் வாசலில்.

உடைப்பதை உடைக்க,
வளைப்பதை வளைக்க,
சீரான நோக்கோடு வளையாத,
வல் நெஞ்சம் வருடு.
பார் பாடும் தாலாட்டு உன்-
ஊர்பாடும்,
உற்றமும்,சுற்றமும்,ஏன் உன்-
வம்சமே வயலாற்றும் வா!
இளைப்பாறும் களமல்ல,
இளைய தலைமுறையே!

தோழமையான தோள் கொடு.
பாழான உன் பரம்பலாவது,
சீதளக் காற்றோடு சீரான வாழ் விளக்கேற்றும்,
பூத்தாடும் உன் பூஞ்சிட்டுக்கள்-
புனர் வாழ்வேந்த-அவர்
நீர்த்தாடும் இன்றைய குரலை கூர்த்தாட.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்