திங்கள், 28 செப்டம்பர், 2009

உறங்கா கண்மணிகளின் உன்னதத்தை உயிர்த்து.


களங்கமில்லாமல் துலங்கிய புன்னகை இது,
காலமெல்லாம் காத்திடும் காவியப் புன்னகை,
இதயம் இழைந்து வழியும்
ஈடில்லாப் புன்னகை,இமயமாய் இகம் நிறைந்து,
ஊடில்லாத உதயமாய் உலகொல்லாம் உயிர்த்த,
பாடு பொருள் புன்னகை_தலைவனின்
தாரகப் புன்னகை பார்,
பாரே பார்.

கயவனைப் பார்,புலையன் புறம்போக்கு,போக்கிரி
எந்த கல,கலப்பும் இல்லாமல்,
எத்துணை வஞ்சம் கொண்டான்—இல்லை
வஞ்சமல்ல,
அது வாய்க்காது எந்த வளத்திலும்
கொஞ்சம் கூட வலையாது..

என்னே! கோர நெஞ்சம் கொண்டான்_எங்கள்
கோத்திரமெல்லாம் குதறி,மனத்தின் வளத்தில்
சாட்சி இல்லா சாத்திரன் இவன்_
இவனை,
தூற்றுவதில்லை எண்ணம்_என்னவோ?
இந்த
ஒளிப்படம் என்னை எங்கோ எல்லாம்
அலைப்பதால் எழும் சீற்றம் அவ்வளவே,

ஆயினும்!
அடங்க மறுக்கும் மார்க்கம் தேடி நினைவுகள்!
துடித்து,துடித்து,
ம்,ம்,
எந்த பெரு மூச்சை,
எந்த காற்றில் கலக்க,
உறவாடி கெடுப்பது உயர்ந்த ராஜ தந்திரம்
என்றோ எங்கோ கேட்ட,
மனம் விட்டு அகலமறுக்கும்,மறக்க நினைத்தாலும்
மறையாத,
ராஜாங்க வார்த்தை இது,

இந்த சொல்லாடலே எங்கள் களத்தின்
வல்லாடலை வரித்து வைக்க,
என் சொல்ல,
நெஞ்சிற்கு தேவை மனசாட்சி அது அற்றபோதே,
நாமும் ஆகுதி அற்றுப் போனோமா?
அறவிடமுடியாக் கடன்போல் இதுவும்
அறுக்கேவே முடியாத கடனாக போயிடுமா?

இல்லை,
இந்த சென்மத்தில் இந்த துரோகிகளின்
நிழல்கூட நித்திரையில்,
நிலைக்க விடக்கூடாது.
எண்ணங்கள் மட்டும் எவ்வளவு ஆரோக்கியமானவை,அது
நியமாக ஆகக் கூடாதா?
இந்த ஆதங்கம் என் ஆத்மா பிரிவதற்கு முன்
எந்த பிரம்மன்
இவன் பிறப்பறுக்கப் போகின்றானோ?
அன்று ஆத்ம சாந்தி கொள்ளும்,
ஆயிரமாயிரம் ஆயிலியங்கள்,

சிம்ம சொப்பனமாய் இவன் சீவித்தல் தகுமோ?
வன்மம் எனக்கேறுதே,
வாய் கூசுதே,
சின்னத்தனம் சீந்தினால் சிறுக பொறுக்கலாம்_ஆனால்
எங்கள் சித்திரங்களின் நித்திலத்தில்
நீங்காத கறையான இந்த கறையை
எந்த காயகல்பத்தில் கழுகேற்றப் போகின்றோம்?
சொப்பனமே வாழ்வாய்,
சுவையான சுவையெல்லாம்
வெறும் கனவாக,கானலாக
கலனள்ளி வாழ்வோமா?

இல்லை!
களம் காத்த காவியரின் காலம் வெல்ல,
கனல் வீசி விழைப்போமா?எங்கள்
உளம் ஏந்தும்,
உன் மத்தங்கள்,
உரசும் இந்த வலங்களின் வயல்கள் பின்ன,
சிரசேந்தி சீற்றுவோமா?

கலையாத கனவது,
யாராலும் கலைக்க முடியாத,
களம் இது.
விலை போகா வீரியங்கள் விழையும்,
வித்தகம் ஏற்றி இழைக்காமல்_ நாம்
இழைப்போம்,இலங்கும் இந்திரியங்கள்
இமை மூடா இளையங்கள் நாளை எம்
சூரியனின் சூத்திரத்தை
சீரியதாய் சிறப்பேந்த வளம் அள்ளி வளர்ப்போம்,

அந்த அந்தகன் முதல் கொண்டு_எங்கள்,
விந்தகம் பிரித்த விலங்கினமதை வகைத்து,
குந்தகமில்லா குதமதாய் குளிர்வோம்_கந்தக--
சந்தத்தில் சதை,நரம்பதாய் சாய்ந்தவர் மீதோர்,
சத்தியம் சாற்றி சாக்களம் மீட்போம்.
உறங்கா கண்மணிகளின் உன்னதத்தை உயிர்த்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்