வெள்ளி, 2 அக்டோபர், 2009

ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல,

நீராடும் நினைவெல்லாம்
ஊராடும் எங்கள் உறவாடும்-போராடும்
போது என்ன போகம் கொண்டாயென
தீராத வலியென்னை திசையெல்லாம் திட்டும்,
வேரறுந்த மரம் போல் என் வெற்றுடம்பு,
ஊறு கொட்டி வேறென்ன வலயம் வர
காதறுந்த பட்டமாய் பரவலற்ற வெளியில்?

தேரோடும் தெருவின்று,
தேசக் கோயிலிழந்து,தேமாங்கான
மணியிழந்து,அதன் மரகந்தகத்துடன்,
மகிழ்வெலாம் மதியோடிழந்து,
முகிழ் வெய்தும் முகரம் முறித்து,
பகழ,பகர பாதையிழந்து,பலமிழந்த
பம்பரமாய் பகலிழந்த பாரத்தை-எந்த
பரத்தையவன் பாதை தறித்தானோ-அவன்
பரமறுக்க விறுமமேற்ற விகல்பத்தை
வீரியமாய் விவேகமாய் என்றாவது
விழுதெறிந்து விசாலம் வீற்றும்---

காலக் கனவுகளாய் எங்கள்
களம் அகன்று போகுமா?அன்றி
ஞாலத்தில் வேறற்ற வழியென்று
கோலமது மீண்டும் கோத்திரமாய் கோர்க்குமா?
கீலமது கிளிஞ்சல்களாய் சிறகிழந்து மூசாமல்
வேலமது வீற்றிருக்க வேந்தனது கொற்றமேந்தி
சாலமது சற்றேனும் சலிக்காமல் சரிவகற்றி
வேளமேந்தும் வேளை பொதிய போகம் அகமறுக்க
போர்க் களம் ஏந்தும்,சேந்தல்கள் அலுங்காமல்
ஆர்ப்பரிக்காமல் ஆற்றும் அஞ்சல்கள்—நாளை
விடிவானேந்தும் வினை ஆற்றும்.

பூத்திருக்கும் பூ சிணுங்க
பார்த்திருப்போமா?கரிகாலக் கனவதன் கச்சிதத்தை
போற்றும் போர் வழியகற்ற மனம் விஞ்சுமா?
மாற்றுப் பாதை அதை மாற்றான் திறந்து வைக்கான்,
வீற்றிருந்த வீரியத்தை வினையாற்ற அறைகூவல்
காற்றகலாக கங்குலமாய் கரு வேங்கை களமேந்தும்
காலம் வெகு விரைவேந்தும்,கனவு கலையா நனவாகும்.
வேர்த்த எம் இனமே,
வேங்கை வெங்களம் பாயும் எம்
குருதி குடித்த கடன் மீட்கும்,
காலக் கடன் காத்திரர்கள் தீர்த்து வைப்பார்—அப்போ
மொளனம் காத்த மொளத்திர்கள்,எந்த
மங்கலத்தை நம்மில் மைப்பிப்பார்?

வெறும் எதிர்பார்ப்பல்ல இது
கூறும் கல்லுலகில் இதுவே களம் வேயும்,மேயும்.
பாறையாய் ஆனதாய் பத்திரம் இனி வரையா
பக்குவம் இகம் பரத்தும்,பார்ப்பனர்
சொப்பனங்கள் சொதம்பலாகும்,
செமிப்படைய,
எம் பாடைகளை கிளறுவார்,பார்
இது பரவலாய் எம் பாத்திரம் மொய்யும்,

அண்டை அயல் நாடு நாளை,
பண்டையமாய் இந்த பாகம் மொய்வார்,சீற
சீனன் சீற்றும் சித்திரங்கள்,அங்கத நாட்டின்
அசல் கிளறும்,பாரத பாத்திரம் சிதறும்,
கூற்றுவன் களம் மாறி எங்கள் கொற்றவன்
பாதை மேய்வான்,அது பாங்காய் பகடை கலக்கும்.
கொன்றதெல்லாம் கொற்றமேந்தும்,மென்ற
குன்றமெல்லாம் எங்கள் குதம் கலக்கும்.

இன்றைய
காலை களலள்லும் வேளை வெந்தணல்
அள்ளும்,
ஆக்கம் அமரர் களமாய்,
அரண் கீறும்,
ஆக்கம் அது நாளை ஆர்க்கும்
சிந்தை கொள்ள ரொளத்திரம் பழகு,
தமிழ,
நாளை விடியலின் பாதை உன் வெஞ்சினத்தில்
என்னும் வினைகளை பரம் கொள்.
பாதை உனதாக பக்குவம் கொண்ட
பகலவன் பாதை விரிக்க வினையாற்று.

ஓய்வென்பது உடலிற்கே தவிர உணர்விற்கல்ல!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்