வெள்ளி, 9 அக்டோபர், 2009

உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக!

நிலவு சுடும் நெருப்பாக,
என் உணர்வகள் அதன் பாளங்களாக,
சீதளக் காற்று சில்லென்று வீச,இந்த
வேதனைக் காச்சல் கொல்லென்று,
மனம் காய்ச்சும்,

செய்திகள்!
சிந்தை வெள்ளத்தை தடம் புரட்ட,
விழ,விழ எழுந்த வீரியங்களை,
அப்படியே பாடையேற்றவே,
காதர்களுடன்,பாதகர்களும்,

விழுந்தவனை மாடு ஏறி மிதிக்குமா?
அழுந்தவனை ஆரியன் அப்படித்தான்,தன்
கொழுந்துகளால் கொல்கின்றான்,ஆக,
ஐந்தறிவு சீவனுக்குள்ள ஆளுமைகள்.
ஆற்றிவு சூடியதாக ஆர்க்கும்,அந்த
அங்கத நாட்டவனிற்கில்லை.

இது!
இன்று,நேற்று நோற்ற பாடம் இல்லை.
ஆனால்,
இன்னமும் இந்த ஈனத் தமிழனிற்கு ஏன்
புரியவில்லை?
அன்றே,
அல்லது,
பார்த்திபனின் பாதக் கமலங்கள்,
பாடை விரித்த போதாவது,
பாதிப் பேரிற்கு புரிந்த இந்த
மார்க்கம் ஏனோ?
இல்லையில்லை,
சிலரிற்கு புரியாமல் இல்லை,
எதுவும்
புரி விக்கவம் போவதுமில்லை.

தன் நயங்களுடன்,தன்னலங்களை
சூடினால்,அது
பொது நலமாகி விடுமா?
அப்படித்தான் சில தலைகள்
வலைகள் யாத்தன,
இன்னமும்,
அதே குட்டையில் யாக்க முனைகின்றன.

ஓடும் ஓட்டத்திற்கு தடை எப்படியோ,
கடை விரிக்கத்தான் கோகின்றது.
உராய்வுகள் என்று அதை நியூட்டன்
விதிகளாக விபரித்தது,
இயற்கையின்
இயங்கலது,
இயற்கைக்கே இந்த மூலம் விதி விலக்கல்ல,
ஆயின்
செயற்கையாய் இலங்கும்
இந்த செம்மறி கூட்டத்திற்கு?

பெளதீக பாடத்தில் மட்டுமல்ல-எங்கள்
பெளதீக மாடத்திலும் தான்,
சில இழப்புக்கள்தான்,
இந்த
உராய்வான எதிர் தடைகளின் ஆரமாக
ஆக்கமான பல இழப்புகளும் பங்கெடுத்தன,
இல்லையேல்
உருளும் பொருள் இடைஞ்சலின்றி
என்றுமே
ஓடுதளத்தில்

எந்த
மையமும் இல்லாமல்,
ஆரை என்ற குப்பில்லாத,
எந்த விட்டமும் இல்லா வீதியின்,
ஆடுகளம் இல்லாமல் இயங்கிக் கொண்டே
இகம் முழுவதும்.

நடை முறைக்கு
எதுவும் சாத்தியமற்று
சாலை விரிக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்